Wednesday, September 30, 2015

3236 - கு.வி.மு.ச. பிரிவு 154 (3)-ன் கீழ் முறையீடு அளிப்பது தொடர்பாக, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal அவர்கள்

மாதிரி மனு ....
பதிவுத் தபால் ஒப்புகை அட்டையுடன். ……………………….தேதி .
மனு எண்: 002/2015/ S.P./ MAHES. ........................................இடம்
.அனுப்புதல்: Rs. 2/- c.f.s
திருமதி. மகேவரி க/பெ ..............
முகவரி........................
...................................................
நாமக்கல்.
பெறுதல் :
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
மாவட்ட காவல்துறை அலுவலகம்
நாமக்கல்.
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்.
பொருள்::
1. கு.வி.மு.ச. பிரிவு 149 மற்றும் 15௦-ன் கீழ் முறையீடு அளிப்பது தொடர்பாக.
2. கு.வி.மு.ச. பிரிவு 154 (3)-ன் கீழ் முறையீடு அளிப்பது தொடர்பாக..
3. காவல் நிலைய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோருதல் தொடர்பாக. .
பார்வை :
1. எனது புகார் மனு நாள் ..........................
2. காவல் நிலையம் ,நாமக்கல் அளித்த C.S.R. எண்...................... நாள் ...........
3. இ.த.ச.பிரிவு 108,166, 167, 217 மற்றும் 219.
***************
1. திருமதி. ........................க/பெ .....................ஆகிய நான் .. முகவரியில் குடியிருந்துவருகிறேன். நான் நாமக்கல் மாவட்ட LAW FOUNDATION அமைப்பின் அமைப்பாளர் ஆவேன். இந்திய அரசியல் சாசனத்தை மக்களிடையே பரப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
2. எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கத்தித்யைக் காட்டியும் மற்றும் லாரியை ஏற்றியும் என்னைக் கொலை செய்யப் போவதாதவும் எதிரிகள் கொலைமிரட்டல் விடுத்துள்ளார்கள்.. கைது செய்வதற்குரிய குற்றம் புரியப்படுவதற்கான திட்டம் அவர்களிடம் உள்ளது தெளிவாகத் தெரிகிறது.
3. எனது உடமைக்கும் உயிருக்கும் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களே அதற்கு முழுப் பொறுப்பாவார்கள். .
4. தகவல் சட்டத்தில் தகவல் கேட்டவர்களைக் இந்த நாட்டில் கொலை செய்து உள்ளார்கள். .ஆகையால், நான் மிகவும் பயந்து போய் உள்ளேன். எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறேன்.
5. . தாங்கள் உடனே கைது செய்வதற்குரிய குற்றம் நடைபெறாமல் தடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
6. பார்வை 1-ல் கண்டுள்ள ஆவணத்தை காவல் நிலைய அதிகாரி........... . காவல் நிலையம், நாமக்கல் எனக்கு அளித்து உள்ளார். ஆனால் சரியான காரணம் ஏதும் இல்லாமல் இதுவரை கூட F.I.R. பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. இது காவல் நிலைய அதிகாரியின் சட்ட முரணான செயல் ஆகும்.
7. ஆகையால், இம்முறையீட்டை தங்களுக்கு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. தங்கள் இம்முறையீட்டை ஏற்றுக் கொண்டு உடனே உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். எனது புகார் குறித்து தாங்களே புலனாய்வு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
8. கடமையைச் செய்ய மறுத்த காவல் அதிகாரி மீது உடனே உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் .
இப்படிக்கு
முறையீடு அளிப்பவர் திருமதி........................../ க/பெ .........
இணைப்பு ஆவணங்கள்:- ( xerox காபி).
1. எனது புகார் மனு நாள் ..........................
2. காவல் நிலையம் ,நாமக்கல் அளித்த C.S.R. எண்.................நாள் 

No comments:

Post a Comment