21/07/2019

5994 - நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு, சட்ட விரோதமானது, தொழிற்தாவா எண். 92 / 2016, 30.07.2019, தொழிலாளர் நீதிமன்றம், கோவை, நன்றி ஐயா. Nagu Law

5993 - குற்றவியல் நடுவர், வழக்கு போட உத்தரவு பிறப்பித்த அன்றே, உரிய காவல்நிலையத்திற்கு நீதிமன்றம் அனுப்ப வேண்டும்,

5992 - Arbitration award ஐ வைத்து திடீரென்று EP Notice வந்து சொத்தோ., O.P.D. No. 11186 Of 2019, 10.07.2019, High Court, Madras, Thanks to Mr. K. Padmaraj

Arbitration award ஐ வைத்து திடீரென்று EP Notice வந்து சொத்தோ அல்லது salary யோ attachment ஆகிவிடும் அதுவும் பழைய award copy ஐ வைத்து  பத்து வருடம் கழித்து வேண்டுமென்றே பல company கள் திருட்டு தனமாக EP ஐ போட்டு சொத்தை Attachment செய்வார்கள், அதுவும் அது போன்ற arbitration award இருப்பது மக்களுக்கு தெரியாமல் திடீரென ep போடுகின்றனர், இந்த சூழலில் EP நடத்துவதை விட AWARD COPY யை எடுத்து உடனடியாக Appeal போட்டு stay வாங்கி மக்களை காப்பாற்றலாம், மேலும் பல வருடம் ஆகிய award copy அதனால் appeal limitations வராது என்றாலும் உங்களுக்கு award இருப்பதை தெரிய வந்த தேதி date of knowledge ஐ வைத்து போட்டால் number ஆகும், மேலும் bonafide ஐ நீங்கள் நீதிமன்றத்திற்க்கு நிருபிக்க court custody யில் deposite கட்டி வழக்கு நடத்தலாம்.. ARC என்று Award ஐ வைத்து ep notice வந்தால் பயப்படாமல் மேற்கண்ட வழக்கு போட்டு Litigant ஐ காப்பாற்றலாம்..

5991 - பதிவு செய்யாத குடும்ப ஏற்பாடை, ஆவணமாக குறியீடு செய்யலாம், CA No. 784 Of 2010, 01.05.2019, SCI, Thanks to Mr. Paramasivan Sethuramalingam

5990 - Tamilnadu Case Flow Management in Subordinate Courts Rules 2007, ROC No. 2303 / 2007-ன் படி சுற்றறிக்கை, Hon'ble PDJ, Ariyalur, 24.10.2016

5989 - த அ உ ச 2005-ன் பிரிவு 2(1)(j)-ன் கீழ் TNEB-க்கு மனு & பதில், 03.07.2019, நன்றி ஐயா. முருகானந்தம், உடுமலை.

14/07/2019

5987 - இரண்டாம் மேல்முறையீட்டில் தீர்ப்பாணை வழங்கிய தேதியிலிருந்து, நிறைவேற்றுகை மனுவை முன்னிடும் கால வரையறை துவங்கும், CA 10442 / 2011, 24.10.2018, SCI, Thanks to Satta Kathir, 06.2019

5986 - கீழமை நீதிமன்றங்கள், தீர்ப்பு வழங்கலில் பிழை புரிந்தால் மட்டுமே இடையீடு எழும், CA 5050 / 2009, 29.11.2018, SCI, Thanks to Satta Kathir, 06.2019

5985 - பொது இடங்களைக் கையாளும் சொத்து அதிகாரி, தமது அதிகார வரம்பிடத்தில் மட்டுமே, அதிகாரம் செலுத்த இயலும், CA 751 / 2008, 20.08.2018, SCI, Thanks to Satta Kathir, 06.2019

5984 - வழக்கின் தன்மையை மாற்றக்கூடியதும் தீங்கெண்ணத்துடனானதும் எதிரணியினருக்கு தீங்கிழைக்கக் கூடியதுமான வழக்குரை திருத்தம் அனுமதிக்கப்பட மாட்டாது, SLP 19188 / 2010, 14.02.2019, SCI, Thanks to Satta Kathir, 06.2019

5983 - தற்காலிகப் பணியாளர்கள், பணி நிரந்தரம் கோரினால், 240 நாட்களுக்கு குறையாமல் தொடர்ந்து பணிபுரிந்திருக்க வேண்டும், WA 2070 / 2013, 23.04.2018, MHC, Thanks to Satta Kathir, 06.2019

5982 - வரி விதிப்பில் மாற்றம் செய்வதற்கு முன் உரிமையாளருக்கு அறிவிப்பி வழங்கி, அவரது கருத்தை அறிய வேண்டும், WP 15647 / 2018, 24.08.2018, MHC, Thanks to Satta Kathir, 06.2019

5981 - கூட்டம் நடத்த அனுமதி கோருபவர், விரும்பத்தகாத சம்பவம் நடைபெறாது எனும் உறுதிமொழியை எழுத்துமூலமாக வழங்குதல் வேண்டும், WP 1552 / 2019, 07.02.2019, MHC, Thanks to Satta Kathir, 06.2019

5980 - தகுதி வாய்ந்தோர் பட்டியலில் இடம் பெறாது, பதவி உயர்வு பெற இயலாது, WP 4127 / 2019, 13.02.2019, MHC, Thanks to Satta Kathir, 06.2019

5979 - நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்ய, ஊழியர்களின் நலனில், கவனம் செலுத்தப்பட வேண்டும், WP 22730 / 2018, MHC, Thanks to Satta Kathir, 06.2019

5978 - வழக்கில் இறுதித்தீர்வு காணும் முயற்சியில் தடையேற்படுத்துவது, அனுமதிக்கப்பட மாட்டாது, CRP 2731 / 2013, 30.11.2018, MHC, Thanks to Satta Kathir, 06.2019

5977 - பதிவு செய்யப்படாத ஆவணம், சான்றாவணமாக குறியீடு செய்யப்பட மாட்டாது, CRP 455 / 2017, 2035 / 2018, 18.01.2019, MHC, Thanks to Satta Kathir, 06.2019

5976 - ஏனைய உரிமையாளர்களின் உரிமை நீக்கப்படாத நிலையில், கூட்டுரிமையாளரிடம் இருந்து சொத்து வாங்கியவர், கூட்டுக் குடும்ப சொத்தில் உரிமை கோர இயலாது, AS 941 / 2009, 01.02.2019, MHC, Thanks to Satta Kathir, 06.2019

5975 - வழக்கு நிலுவையாகவுள்ளதைக் காரணம் காட்டி, புகாரினை முடிவுக்கு கொண்டு வருவது, கடமை தவறுதலாகும், WP 13963 / 2018, 02.01.2019, MHC, Thanks to Satta Kathir, 06.2019

5974 - உயில் மூலம் பயனடைய முயலுபவர், சான்றளிக்கப்பட்ட ஆவணத்தை முன்னிட வேண்டும், SA 617 / 2018, 07.12.2018, MHC, Thanks to Satta Kathir, 06.2019

5973 - இறங்குரிமை சட்டம் இனம் 1-ல் வாரிசுகள் எவரும் இல்லாத நிலையில், இறந்து போன இந்து ஆணின் சொத்து, இனம் 2-ல் உள்ளவர்களுக்கு போய் சேரும், SA 206 / 2008, MP No. 1 / 2008, 01.02.2019, MHC, Thanks to Satta Kathir, 06.2019

5972 - உவிமுச விதி 153-ன் படி மனு தாக்கல் செய்து, வழக்கு விசாரணையில் நிகழ்ந்துள்ள குறையை திருத்தலாம், PDJ, Karur, 17.10.2016, நன்றி ஐயா. Chandru Karur

5971 - த. அ. உ. ச 2005-ன் பிரிவு 2(j)(1)-ன் கீழ், அ-பதிவேடு & எஸ். எல். ஆர் ஆவணங்களை ஆய்வு செய்து நகல் எடுக்க அனுமதி, 11.07.2018, நன்றி ஐயா. வினோத்குமார், சிவகங்கை

08/07/2019

5970 - 17.11.2016 விசாரணை இல்லாத தேதியில், எதிரிக்கு பிடி ஆணை, CC No. 145 / 2014, JM1, Karur, நன்றி ஐயா. Chandru Karur

07.10.2016-க்கு பின்னர், 23.12.2016 வாய்தா, நடுவில், 17.11.2016-ம் தேதியன்று, வாய்தா இல்லை
https://drive.google.com/open?id=1uey4DBNt7TS8Y_bJ0yVERQf7bXNYvuBO

ஆனால், வாய்தா இல்லாத 17.11.2016-ல், எதிரிக்கு பிடி ஆணை
https://drive.google.com/open?id=1LOzfXP3KdLum5VDz3nnS1G2hgWpYUHar

5969 - எதிரி விசாரணைக்கு வராததால், கைது செய்யப்பட்டுள்ளார். ஆகவே, பிணை வழங்கினால், விசாரணைக்கு ஆஜராக மாட்டார், பிணை வழங்க வேண்டாம், உதவி காவல் ஆய்வாளர், 28.12.2016, நன்றி ஐயா. Chandru Karur

5968 - பிடிக்கட்டளை தொடர்பாக, சிறைத்துறைக்கு ஒரு தகவல் சட்ட மனு, நாள். 09.01.2017, நன்றி ஐயா. Chandru Karur

5967 - பிடிக்கட்டளை தொடர்பாக, தகவல் சட்ட மனு, நாள். 02.01.2017, நன்றி ஐயா. Chandru Karur

5966 - வழக்கறிஞர் சட்டப்பிரிவு 35(1)-ன் படி, வழக்கறிஞர் போராட்டம் தவறானது என ஒருவரும் புகார் அளிக்கவில்லை, The Bar Council Of Tamilnadu, Chennai Dated 22.10.2012, நன்றி ஐயா. Chandru Karur

5965 - அரசு தரப்பு வழக்கறிஞரை நீக்கிவிட்டு, தானே வழக்கை நடத்திக் கொள்கிறேன் - மனுதாரர், CC No. 295 / 2010, JM1, Karur, நன்றி ஐயா. Chandru karur

5964 - ..வட்டத்தில் பொது சொத்துக்கள், கால்பாதை, நிலவியல் பாதை, வாரி, ஓடை, கால்வாய் இடங்கள் விற்பனை இல்லை, வட்டாட்சியர், சூலூர், 18.06.2013, நன்றி ஐயா. Chandru Karur

5963 - கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பதிவு செய்திட வேண்டாம், இணை ஆணையர், இந்து சமய அறநிலைத்துறை, சென்னை, 28.03.2013, நன்றி ஐயா. Chandru Karur

5962 - உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு, நாள். 20.09.2014, நன்றி ஐயா. Chandru Karur

5961 - நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத, வருவாய்த்துறை அலுவலர்களின் மீது அளிக்கப்பட்ட புகார் மனுவின் மீது விசாரணை செய்து, அறிக்கை அளிக்க உத்தரவு, நாள். 31.10.2014, நன்றி ஐயா. Chandru Karur

5960 - நீதிமன்றத்தில் அவசரமாக தாக்கல் செய்யப்படும் சான்று நகல் மனு மூன்று நாட்களில் தராததால், Portfolio Judge இடம் முறையீடு, நாள். 23.02.2017, நன்றி ஐயா. Chandru Karur

5959 - உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், CJM & JM ஆகியோர்கள் மீது, பிரிவு 20(1) & 20(2)-ன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்ககூடாது என விளக்கம், TNSIC, வழக்கு எண். SA-4723 / மா த த ஆ / 2016, 14.12.2016, நன்றி ஐயா. Chandru Karur

5958 - 12 வார காலக்கெடுவிற்குள், மனுதாரரின் மேல் முறையீடு மனுக்களை முடிக்க TNSIC-க்கு உத்தரவு, WP No. 16152 / 2016, 09.09.2016, நன்றி ஐயா. chandru karur

5957 - கு. வி. மு. ச. 327-ன் கீழ் நீதிமன்றத்தில் அமர தாக்கல் செய்யப்பட்ட மனு அனுமதிக்கப்படுகிறது, CC No. 145 / 14, JM1, Karur, 04.02.2016, நன்றி ஐயா. chandru karur

03/07/2019

5956 - காவல்துறையின் இறுதி அறிக்கை 60 முதல் 90 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும், Crl. M.P. No. 689 / 2019, 01.07.2019, Hon'ble Principal Session Judge, Karur.

5955 - FIR Dated 25.10.2017, 5 நாட்களுக்கு பின், கு. வி. மு. ச. 1973-ன் கீழ், இறுதி அறிக்கை நாள். 30.10.2017, நன்றி ஐயா. Nagu Law

5954 - உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, FIR பதிவு செய்து, துரித விசாரணை மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவு, 19.11.2007, நன்றி ஐயா. AR Suriamoorthy

5953 - த. அ. உ. ச 2005-ன் சட்டப்பிரிவு 6(3)-ன் படி, மனு, நீதித்துறையில் இருந்து, வருவாய்த்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது, நன்றி ஐயா / அம்மா. Hon'ble PDJ, Tup, 23.10.2018, நன்றி ஐயா. AR Suriamoorthy

02/07/2019

5952 - முடிவாக, அரசு உதவி வழக்கறிஞ்ருக்கு, அவரது வழக்கை பொறுத்தமட்டில், உதவி செய்ய (Assist) மனுதாரருக்கு (கு. வி. மு. ச 302) அனுமதி அளிக்கப்படுகிறது, CMP No. 3074/2018, 16.07.2018, JM2, TUP, நன்றி ஐயா. K. Palanisamy

5951 - ஊராட்சியால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யும் அதிகாரம், மாவட்ட ஆட்சியருக்கு உண்டு, மாநகராட்சி, திருப்பூர், 14.09.2012, நன்றி ஐயா. AR Suriyamoorthy

5950 - இ த ச 1860-ன் பிரிவு 468, 471, 420 & 120 (b) ஆகிய பிரிவுகளின் கீழ், FIR No. 29/2009, 10.10.2009, CCB, Tirupur. Thanks to Mr. AR Suriyamoorthy

5949 - ஆவணப் பதிவில் மோசடி நடந்திருப்பதால், ஆவண எழுத்தர் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, மாவட்ட பதிவாளர், திருப்பூர், 18.04.2011, நன்றி ஐயா. AR Suriyamoorthy

5948 - தனக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களின் விஸ்தீரணத்தைவிட, கூடுதலான் விஸ்தீரணத்தை, மனைப்பிரிவுகளாக பிரித்து, கிரையம் செய்தவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு, 24.02.2012, நன்றி ஐயா. AR Suriyamoorthy

5947 - எதிரிகள் தங்களுக்கு உரிமையுள்ள விஸ்தீரணத்தைவிட கூடுதலாக விற்பனை செய்துள்ளதால், குற்ற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு, மாவட்ட பதிவாளர், திருப்பூர், 20.02.2012, நன்றி ஐயா. AR Suriyamoorthy

5946 - இ. த. ச. 419, உ-இ 34, 420 உ-இ 34, 465 உ-இ 34, 467 உ-இ 34, 468 உ-இ 34, 471 உ-இ 34, 408-ன் கீழ் குற்றவாளிகள் என இந் நீதிமன்றம், முடிவு செய்கிறது, CC. No. 73/2005, 20-01-2016, JM2, SIVAGANGAI.