Thursday, July 30, 2020

6239 - அரசு ஆணை எண். 540-ன் கீழ் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரும் மனு, அவசரம், வட்டாட்சியர், சேந்தமங்கலம், 30.06.2020, நன்றி ஐயா. நல்வினை விஸ்வராஜூ, வழக்கறிஞர்.

ஆக்கிரமிப்பு அகற்ற
அரசாணை எண் 540
நீர் நிலைகள் குளம் குட்டை ஏரி போன்ற அரசு நிலங்கலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் படி அரசு ஆணை 540 வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையை பதிவிறக்கம் செய்ய ttp://www.stationeryprinting.tn.gov.in/extraordinary/2014/253-Ex-II-2.pdf
ஆக்கிரமிப்பினை அகற்ற கோரும் மனுவை வட்டாட்சியரிடம் கொடுக்க வேண்டும் அவர் 60 நாட்கள் கால கொடுவிற்க்குள் ஆக்கிரமிப்பு அகற்றல் பணியை செய்து முடிக்க வேண்டும்
முதலாவது மேல்முறையீடு கோட்டாட்சியரிடம் கொடுக்க வேண்டும் 30 நாட்கள்
சீராய்வு மனு மாவட வருவாய் அலுவல்ரிடம் காலகொடு 30 நாட்கள்
ஆலோசனை குழு மாவட்டாட்சியர்
வட்டாட்சியரிடம் மனு கொடுத்தவுடன் (முடிந்த வரை நேரில் கொடுப்பதை தவிற்க்கவும் ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் சிறந்தது) மனுவின் பதிவு எண் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்யவும் 60 நாட்கள் கால கொடுவில் வட்டாட்சியர் திருப்தியான நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற தவறினால் அல்லது கொடுத்த பதில் திருப்தி இல்லையென்றால் உடனடியாக (61-ம் நாளே) மேல்முறையீடு செய்யவும் . கூடுதலாக ஷை மனு தொடர்பான முழு கோப்பு நகல்களையும் (அலுவலக கோப்பு குறிப்புகள் உட்பட) வட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்து கோரவும்
வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு மனு கொடுத்தவுடன் (முடிந்த வரை நேரில் கொடுப்பதை தவிற்க்கவும் ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் சிறந்தது) மேல்முறையீடு மனுவின் பதிவு எண் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்யவும் 30 நாட்கள் கால கொடுவில் வருவாய் கோட்டாட்சியர் திருப்தியான நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற தவறினால் அல்லது கொடுத்த பதில் திருப்தி இல்லையென்றால் உடனடியாக (31-ம் நாளே) சீராய்வு மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் செய்யவும் கூடுதலாக ஷை மனு தொடர்பான முழு கோப்பு நகல்களையும் (அலுவலக கோப்பு குறிப்புகள் உட்பட) வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்து கோரவும்
மாவட்ட வருவாய் அலுவலரிடம் சீராய்வு மனுவை கொடுத்தவுடன் (முடிந்த வரை நேரில் கொடுப்பதை தவிற்க்கவும் ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் சிறந்தது) சீராய்வு மனுவின் பதிவு எண் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்யவும் 30 நாட்கள் கால கொடுவில் மாவட்ட வருவாய் அலுவலர் திருப்தியான நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற தவறினால் அல்லது கொடுத்த பதில் திருப்தி இல்லையென்றால் உடனடியாக (31-ம் நாளே) ஆலோசனை குழு தலைவரான ஆட்சியரிடம் செய்யவும் கூடுதலாக ஷை மனு தொடர்பான முழு கோப்பு நகல்களையும் (அலுவலக கோப்பு குறிப்புகள் உட்பட) மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்து கோரவும்
இதனிடையே முதல்வர் தனி பிரிவு, மாவட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அனைவருக்கும் தொடர்ந்து கோரிக்கை மனு ( அரசு ஆணை 540 -ஐ குறிப்பிடாமல்) மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரத்தை தகவல் அறியும் சட்டத்திலும் கேளுங்க
நீங்கள் விக்கிரமாதித்தன் என்றால்
அரசு அதிகாரிகள் வேதளங்களே !!!
விடாது கருப்பு !!!
இந்த பதிவில் இன்னும் திருத்தங்கள் உள்ளது தொடரும்
அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற

1 comment:

  1. சட்ட விழிப்புணர்வு பெட்டகமாக விளங்கும் திருப்பூர் கோவிந்தராஜ் அவர்களுக்கு எங்களின் நன்றியினை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் !

    ReplyDelete