Sunday, February 08, 2015

19(1)-ன் கீழ் முதல் மேல் முறையீட்டு விண்ணப்பம்

விரைவு அஞ்சல் / பதிவு அஞ்சல்

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 19(1)-ன்
கீழ் முதல் மேல் முறையீட்டு விண்ணப்பம்

அனுப்புநர் :          கடித எண். ________ / 2014, நாள்.    -   -2014.
                  




பெறுநர் :

திரு. முதல் மேல் முறையீட்டு அலுவலர் அவர்கள்,
(தகவல் அறியும் உரிமை சட்டம் 2005),




******
பொருள் :    தகவல் அறியும் உரிமை சட்டம் 19(1)-ன் கீழ் முதல் மேல் முறையீட்டு விண்ணப்பம்
******
மதிப்பிற்குரிய அய்யா / அம்மா,

பார்வை : :    சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் கடித நாள். ____*____*______, பெற்றுக் கொண்ட நாள். ____*____*______

1    நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். பார்வையில் சொல்லப்பட்ட விண்ணப்பத்திற்கு, வரையறுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள், மேற்கண்ட எனது விண்ணப்பத்திற்குரிய தகவல்கள் / ஆவணங்களை, தங்கள் துறையின் பொது தகவல் அலுவலர் அவர்கள் வழங்க மறுத்துள்ளார்.

2    ஆகவே, சட்டப்பிரிவு 19(1)-ன் கீழ், மேற்கண்ட விண்ணப்பம், சமூகம் அவர்களிடத்தில் முதல் மேல் முறையீடு செய்யப்படுகிறது.

3    ஆகவே, வரையறுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள், இம் மேல் முறையீட்டு மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பித்து (பார்க்க : Govt Of India, Ministry Of Personnel, P. G. & Pensions (Department Of Personnel & Training), New Delhi, Office Memorandum, Dated 10-03-1995) விண்ணப்பத்திற்குரிய பதில்கள் / ஆவணங்கள் போன்றவற்றினை வழங்கிட வழிவகை செய்யுமாறு / உத்தரவு பிறப்பிக்குமாறு, சமூகம் அவர்களை தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

4    விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்கள் / ஆவணங்கள், தங்களுடைய அரசு அலுவலகத்திற்கு தொடர்பில்லாத போதும், விண்ணப்பத்தினை, சட்டப்பிரிவு 6(3)-ன் கீழ் கையாண்டு, தொடர்புடைய பொது அதிகார அமைப்பிற்கு மாற்றி அனுப்பி, மனுதாரருக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.

5    தவறும்பட்சத்தில், சட்டப்பிரிவு 19(3)-ன் கீழ், முதல் மேல் முறையீடு செய்து, நிவாரணம் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாக கருதுகிறேன்.

6    நன்றி ஐயா / அம்மா, வணக்கம்.

இடம் :    

நாள் :                                            மனுதாரர் ஒப்பம்.

இணைப்பு பார்வைகளில் சொல்லப்பட்ட கடிதங்களின் நகல்கள்


No comments:

Post a Comment