விரைவு அஞ்சல் / பதிவு அஞ்சல்
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் 19(3)-ன் கீழ்
இரண்டாவது மேல் முறையீட்டு விண்ணப்பம்
“இந்திய அரசியலமைப்பு சட்டம் (2006 திருத்தப்படி) 19-A” உறுபு படி,
எனக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமையில், கீழ்க்கண்ட விவாதங்களை வைக்கிறேன். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தால், இழப்பீடு வழங்க கேட்டுக் கொள்கிறேன். தீர்வு எண். Appeal No. CIC / SG / A / 2011 / 003062, dt. 23.01.2012.
(நன்றி : திரு. மோகன்ராம், சேலம்)
அனுப்புநர்
: கடித எண். __________ / 2014, நாள்.
பெறுநர் :
உயர்திரு. இரண்டாவது மேல் முறையீட்டு அலுவலர் அவர்கள்,
தமிழ்நாடு தகவல் ஆணையம், எண். 2, சர் தியாகராய சாலை,
ஆலயம்மன் கோவில் அருகில், எல்டாம்ஸ் சாலை விரிவு,
தேனாம்பேட்டை, சென்னை 600 018
அய்யா / அம்மா,
பார்வை :
1
2
3
4
1 மனுதாரர் ஆகிய நான் மேற்கண்ட முகவரியில் நிரந்தரமாக வசித்து வருகிறேன். “இந்திய அரசியல் சாசனம் 1950-ன் கோட்பாடு 19-அ”-ன் படி, மேற்சொன்ன இவ்-வழக்கு தொடர்பாக, கீழ்க்கண்ட விவாதங்களை எழுத்துப்பூர்வமாக வைக்கிறேன்.
2 தகவல் அறியும் உரிமை
சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 6(1)-ன்
கீழ், பார்வை எண். 1-ல்
சொல்லப்பட்ட கடிதத்தினை கடந்த
____________-ம்
தேதியில் பெற்றுக் கொண்ட, தொடர்புடைய பொது அதிகார அமைப்பு, வரையறுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள், விண்ணப்பத்திற்குரிய எந்தவொரு
தகவல்களும் / ஆவணங்களும் அளிக்கவில்லை / முழுமையுறாத தகவல்கள்
/ ஆவணங்கள் அளித்துள்ளனர்.
3 விண்ணப்பத்திற்குரிய பதில்கள்
/ ஆவணங்கள் கிடைக்க பெறாததால்,
சட்டப்பிரிவு 19(1)-ன் கீழ், தொடர்புடைய
முதல் மேல் முறையீட்டு அமைப்பிற்கு,
கடந்த ____________-ம் தேதியில்
மனு அனுப்பபட்டு, அதனை ____________-ம்
தேதியில் பெற்றுக் கொண்டு, அதற்கான SPEAKING
ORDER, No. P 13023 / 1 /94-AT, DOPT dt. 10 MARCH 2005-ன் படி எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
4. தொடர்புடைய பொது அதிகார அமைப்பு மற்றும் அதனை சார்ந்துள்ள மற்ற பொது அதிகார அமைப்பின் அலட்சிய போக்கும், சட்டத்தினை அவமதிக்கும் நோக்குமே, மனுதாரரை வீணாக, சென்னை விசாரணைக்கு வரவழைத்து, வீணான பண செலவு, கால விரையம், மன உளைச்சல் போன்றவற்றிற்கு உள்ளாக்குகின்றனர். இதனை மனுதாரர் / மேல் முறையீட்டாளர் ஆகிய நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆகவே, சென்னை வந்து செல்வதற்குரிய வழக்கு செலவுத் தொகையினை, தொடர்புடைய பொது அதிகார அமைப்பிடமிருந்து பெற்றுத் தருமாறு வேண்டுகிறேன்.
5. மேலும், விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள இனங்களுக்குரிய தகவல்கள் / ஆவணங்கள் வழங்காததால், சட்டப்பிரிவு 18(1)-ன் கீழ், இக்கடிதத்தினையே புகாராக சமர்ப்பித்து, தொடர்புடைய பொது அதிகார அமைப்பின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, உரிய தீர்வு வழங்க வேண்டுகிறேன்.
6 நன்றி ஐயா, வணக்கம்.
இடம் :
நாள் : ஒப்பம்.
இணைப்பு : பார்வைகளில் சொல்லப்பட்டுள்ள அனைத்து
கடிதங்களின் நகல்களும்.
No comments:
Post a Comment