Showing posts with label TNSIC. Show all posts
Showing posts with label TNSIC. Show all posts

Thursday, February 11, 2016

4891 - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, நன்றி ஐயா. Mohandas Samuel

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
சட்டம் எதற்கு?
************************
அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும். தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.
எங்கிருந்து தகவல் பெறலாம்?
************************************************
மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல் பெறலாம்.
தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.
என்ன தகவல் பெறலாம்?
*************************************
அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகள். ஆவணங்கள், சுற்றறிக்கைகள். ஆணைகள், ஈமெயில்கள், நோட் பைல் எனப்படும் அலுவலக குறிப்புகள் ஆகியவை பெறலாம். இது தவிர சாலை போடுதல், அரசு கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் மாதிரிகள் கேட்டுப் பெறலாம்.
எடுத்துக்காட்டாக,
1. நமது மாவட்ட எம்.பி. அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (5 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?
2. அதேபோல் நமது தொகுதி எம்.எல்.ஏ. அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (2 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?
எவ்வாறு பெறுவது?
******************************
ஒரு தகவல் பெறுவதற்கென தனியான படிவம் ஏதும் கிடையாது. ஒரு சாதாரண வெள்ளைத் தாளில் வேண்டிய தகவல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம்,
மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும்.
குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும்,
அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி (இவை இரண்டும் கட்டாயமில்லை) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.
மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும்.
மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.
மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும்
தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.
நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.
கட்டணம் விவரம்:
*****************************
மத்திய அரசும். தமிழ்நாடு அரசும் தகவல் பெற ரூ.10/- என கட்டணம் நிர்ணயித்துள்ளன. இக்கட்டணத்தை ரொக்கமாகவோ, வரைவேலையாகவோ, நீதிமன்ற கட்டண வில்லை மூலமாகவோ செலுத்தலாம். நகல் பெறுகையில் ஒரு தாளுக்கு ரூ. 2/- எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யாரிடம் தகவல் கேட்பது?
****************************************
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் உதவிப் பொதுத் தகவல் அலுவலர் அல்லது பொதுத்தகவல் அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பொதுத் தகவல் அலுவலர்களின் மத்திய அரசுக்கான பட்டியல்www.tn.gov.in என்ற தளத்திலும் உள்ளன.
தகவல் ஏன் கேட்கிறோம் என சொல்ல வேண்டுமா?
***************************************************************************
பிரிவு 6 (2)ன்படி தகவல் கேட்பவர் எதற்காக தகவல் கேட்கப்படுகிறது என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டியதில்லை. பதில் அனுப்ப ஒரு தொடர்பு முகவரியைத் தவிர வேறு எந்த விபரத்தையும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எவ்வளவு நாட்களில் தகவல் பெறலாம்?
****************************************************************
பிரிவு 7 (1)ன் படி ஒரு பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தர வேண்டும். கேட்கப்படும் தகவல் ஒரு நபரின் உயிர்ப்பாதுகாப்பு பற்றிய செய்தியாக இருந்தால் 48 மணி நேரத்தில் தர வேண்டும்.
முதல் மேல் முறையீடு:
************************************
பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல் திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு 19ன் கீழ் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடம் 30 நாட்களுக்குள் முதல் மேல் முறையீடு செய்யலாம்.
மேல் முறையீட்டு அதிகாரியின் பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்களுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல் முறையீடு செய்யலாம்.
முகவரி:
*************
மாநில தலைமை தகவல் ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
ஆலையம்மன் கோவில் அருகில்
தியாகராயர் ரொடு,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 018
தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580
தகவல் தராவிட்டால் தண்டனை உண்டா?
***************************************************************
பிரிவு 20ன் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள், உரிய நியாயமான காரணங்கள் எதுவுமின்றி தகவல் தர மறுத்தாலோ, தவறான தகவல் அளித்தாலோ அரைகுறையான முழுமையற்ற தகவல்கள் அளித்தாலோ, தகவல்களை அழித்தாலோ பிரிவு 20ன் கீழ் அதிகபட்சமாக ரூ.25,000/- அபராதம் மற்றும் துறை நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு.
விதி விலக்குகள் :
******************************
பிரிவு 8ன் படி நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருக்கும், சட்டமன்ற, பாராளுமன்ற உரிமைகள் மீறும், வியாபார ரகசியங்கள், வெளிநாடுகளிலிருந்து அரசுக்கு வந்த ரகசியங்கள், காவல் துறையின் ரகசிய தகவலாளர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தகவல்கள், புலனாய்வில் உள்ள வழக்குகள், அமைச்சரவை கூட்ட குறிப்புகள் போன்றவை இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
மேலும் பிரிவு 24ன் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பட்டியலிடப்படும் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை நிறுவனங்கள் ஆகியன இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறு இச்சட்டத்தை உபயோகமாய் பயன்படுத்தலாம்?
***************************************************************************************
இச்சட்டத்தை பயன்படுத்திட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிமேம்பாடு நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்று கேட்கலாம்.
நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் வழங்கப்படும் நிதிகள் எவ்வாறு செலவிடப்படுகிறது எனக் கேட்கலாம்.
ஊழல் நடைபெறக் கூடும் என்று சந்தேகப்படும் அலுவலகங்களில் தகவல் கேட்கலாம்.
உங்கள் தெருக்களில் போடப்படும் சாலைகளிலோ அரசு கட்டுமானப் பணிகளிலோ மாதிரிகள் எடுத்து சோதனைக் கூடங்களுக்கு அனுப்பலாம்.
டெண்டர் விபரங்களைக் கேட்கலாம்.
இதற்கான இணையதளங்கள்:
*********************************************
http://www.righttoinformation.gov.in/
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.com/ என்ற தளத்தைப் பார்வையிடலாம்.

Tuesday, August 04, 2015

2518 - தட்டச்சு செய்பவரின் கவனக்குறைவால், தட்டச்சு செய்யப்பட்டுள்ளதை, பெயரை வேண்டுமென்றே, தவறாக குறிப்பிட்டுள்ளதாக முடிவு செய்ய இயலாது, TNSIC, வழக்கு எண். 31987/விசாரணை/மா.த.த/2014, 18.06.2015

2517 - மாவட்ட ஆட்சியரின் 1951-ம் ஆண்டு பதிவேடுகள், 62 ஆண்டுகள் கடந்துவிட்டபடியால், ஆவணங்கள் இருப்பின் வழங்கவும், அழிக்கப்பட்டிருப்பின் அழிப்பிற்கான ஆணை & அழிப்பு பதிவேட்டின் நகல் வழங்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். 32220/ஏ/2014(4036/ஏ/2014), 04.06.2015

Friday, July 31, 2015

2487 - சென்னை மாநகரில், காவல் சாவடிக்கு, எந்த ஆவணத்தின் அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டது? TNSIC, Case No. 13511 / Enquiry / F / 2014, Dated 16-06-2015

1. கொடுக்கப்பட்ட மின் இணைப்பு, under commercial rates / residential rates?
2. சென்னை மாநகரில் உள்ள 11 கோட்ட, பொது தகவல் அலுவலர்களும், மனுதாரருக்கு பதில் அளிக்க உத்தரவு.
3. ஏதேனும் குறை என்றால், மனுதாரர், உரிய முறையில், ஆணையத்தை அணுகலாம்.
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wczkwUWRDY2YyaTg/view?usp=sharing

2486 - விசாரணையில் கலந்து கொள்ள இயலவில்லை, சமர்ப்பித்த மேல் முறையீட்டின் தீர்வு செய்ய வேண்டும்-மனுதாரர், TNSIC, Case No. 22835 & 22841/A/2014, Dated 16-06-2015, நன்றி ஐயா. Adv. Ramesh Balasubramaniam அவர்கள்

1. மனுதாரர் கட்டாயம் ஆஜராக வேண்டும் என சொல்லவில்லை.
2. மனுதாரர் கோரிக்கை தொடர்பான தீர்ப்பு நகல், அலுவலகத்தில் இல்லை என சொல்லப்பட்டுள்ளது.
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wWE91X3p5MkRkMzg/view?usp=sharing
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wcGlWYWttSEhucjA/view?usp=sharing

2485 - தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 11-ஐ பற்றிய விளக்கம், TNSIC, Case No. 34307 / விசாரணை / A / 2014, 11-06-2015

Tuesday, July 21, 2015

2400 - வழங்கும் தகவல்களில், பொ. த. அலுவலரின் கையொப்பம் & அலுவலக முத்திரை, "த. அ. உ. ச 2005-ன் கீழ் வழங்கப்பட்ட தகவல்" இடம் பெற வேண்டும், TNSIC, 16-06-2015

2399 - முதல் மேல் முறையீட்டு அலுவலர், பொது தகவல் அலுவலர் எடுத்த முடிவு சரியானதா / இல்லையா என ஆய்வு செய்ய வேண்டும், TNSIC, 25-06-2015

2398 - 1912-ம் வருடத்திய தொன்மை வாய்ந்த ஆவணத்தின் கையாள முடியாததால், அலுவலக நேரத்தில் பார்வையிடலாம், சார் பதிவாளர், TNSIC, 23-06-2015

2397 - பொது தகவல் அலுவலர் அனுப்பிய கடிதம், மனுதாரருக்கு கிடைக்க பெற்றதா / இல்லையா என்பதை உறுதி செய்யப்படா சூழ்நிலை, TNSIC, 23-06-2015

Monday, July 20, 2015

2394 - ஆணையத்தின் அழைப்பாணை மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறிய, பிரிவு எழுத்தர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு, TNSIC, 25-06-2015

2393 - முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அனுப்பிய மனுவினை தேடிக்கண்டுபிடித்து தகவல் வழங்க உத்தரவு, TNSIC, 08-06-2015

2392 - மனுதாரர் கோரிய பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது, பொ. த. அலுவலர், TNSIC, 05-06-2015

2391 - அங்கீகரிக்கப்பட்ட / படாத மனைப்பிரிவுகள் தகவல்கள் வழங்க உத்தரவு, TNSIC, 08-06-2015