விசாரணையில், மனுதாரர், தகவல்கள் எவ்வாறு தவறாக வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆவண சாட்சியங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார்.
மனுதாரரின் பட்டாவில், தன்னுடைய கவனத்திற்கு வராமலே, மூன்றாம் நபர் பெயர் எவ்வாறு சேர்க்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை கேட்கிறார்.
பொது அதிகார அமைப்பு, "மூன்றாம் நபர், மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு பத்திரங்களின் அடிப்படையில், பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக" தெரிவிக்கிறார்.
அதில், ஒரு பத்திரம், மேற்படி அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை, மற்ற ஒன்றில், Survey Number குறிப்பிடப்பவில்லைஎன தெரிவிக்கிறார்.
ஆகவே, பொது அதிகார அமைப்பின் பதில்கள், சட்டப்பிரிவு 20-ன் கீழ் தண்டிக்ககூடிய, தவறான, முழுமையுறாத & தவறாக வழி நடத்தும் தகவல் ஆகும்.
ஆகவே, மாவட்ட ஆட்சியர், துணை மாவட்ட ஆட்சியருக்கு நிகரான ஓர் மூத்த அதிகாரி அவர்கள் முன்னிலையில், மோசடி பத்திரங்கள் தாக்கல் செய்து, பட்டா மாற்றம் செய்யப்பட்டது குறித்து, விசாரணை அறிக்கை அளிக்க உத்தரவிடபப்டுகிறது.




Use full link thank you sir.
ReplyDelete