Wednesday, August 05, 2015

2525 - தங்களின் தகவல் ஏற்கத் தக்ககது அல்ல, தங்களின் தகவல் ... .திருப்பி அனுப்பப்படுகிறது, நஷ்டஈடு கோருதல் தொடர்பாக, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal

மாதிரி.....பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் .. 00.08.2015. 

Letter No : 2/மா.ஆ/ 2௦15/ T.S.P/ERODE. ஈரோடு.

அனுப்புனர் :

திரு. பெ.சுப்ரமணியன் 
த/பெ பெருமாள்,Organiser, 
Law Foundation, ERODE.6, ரோஜா கார்டன், ஈரோடு மாவட்டம்
ஈரோடு - 638012.

பெறுனர் : 
திருமதி கு. இராதாமணி
தனித்துணை ஆட்சியர் ( ச.பா.தி),
 திண்டல், ஈரோடு - 638009.


அம்மா, 

பொருள்: 
1. தங்களின் தகவல் ஏற்கத் தக்ககது அல்ல என்பது – தொடர்பாக..

2. தங்களின் தகவல் ந.க.1998/2015 ஐதனி4 நாள் 28.072015. திருப்பி அனுப்பப்படுகிறது என்பது - தொடர்பாக.

3. நஷ்டஈடு கோருதல் தொடர்பாக. 

பார்வை ; தங்களின் தகவல்... ந.க.1998/2015 ஐதனி4 நாள் 28.072015. 

1) மாவட்ட ஆட்சியரிடம் இருந்து தகவலைப் பெற்று தாங்கள் அளிக்கவில்லை எனத்தெரிகிறது. எனவே அளிக்கப்பட்ட தகவல் திருப்பி அனுப்பப்படுகிறது.
2) தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்கப்பட்ட தகவலுக்கு பொதுத்தகவல் அலுவலர் அல்லாத தாங்கள் அளித்துள்ள தகவல் ஏற்கத் தக்கது அல்ல. எனவே அளிக்கப்பட்ட தகவல் திருப்பி அனுப்பப்படுகிறது.
3) தகவல் அறியும் உரிமை சட்டப்படி அளிக்கும் தகவலில் மேல்முறைஈட்டாளர் முகவரி இருக்கவேண்டும். ஆனால்அளிக்கப்பட தகவலில் மேல்முறைஈட்டாளர் முகவரி இல்லை, எனவே அளிக்கப்பட்ட தகவல் திருப்பி அனுப்பப்படுகிறது.
4) அளிக்கப்பட்ட தகவல் 1 –ல் சட்டப் பிரிவு 6 (3 )-ன்படி தகவல் வழங்க இயலாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது தவறான தகவல் ஆகும்.
5) அளிக்கப்பட்ட தகவல் 1 –ல் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்து மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளீர்கள். 

a. அளிக்கப்பட்ட தகவல் 1 –ல் குற்றம் புரிந்த அதிகாரிகளுக்கே மனுவை மாவட்ட ஆட்சியர் திருப்பி அனுப்பும் சட்டம் அல்லது விதிகள் இல்லை என்று தகவல் அளித்து உள்ளீர்கள். அப்படியிருக்க, சட்டப் பிரிவு 6 (3 )-ன்படி தகவல் வழங்க இயலாது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளீர்கள். முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்து உள்ளதால் அளிக்கப்பட தகவல் திருப்பி அனுப்பப்படுகிறது.
6) தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6 (3 ) தங்களுக்குத் தெரியவில்லை என்பதற்கு தாங்கள் அளித்துள்ள ஆவணமே தகுமுறை சாட்சியமாகும். சட்டம் தெரியாத தங்களின் தகவல் ஏற்க இயலாது. எனவே, அளிக்கப்பட்ட தகவல் திருப்பி அனுப்பப்படுகிறது.
7) குற்றம் புரிந்த அதிகாரிகளுக்கே மனுவை மாவட்ட ஆட்சியர் திருப்பி அனுப்பும் சட்டம் அல்லது விதிகள் இல்லை என்று தகவல் அளித்து உள்ளீர்கள். ஆனால், குற்றம் புரிந்த அதிகாரிகளுக்கே மனுவை மாவட்ட ஆட்சியர் திருப்பி அனுப்பி வருகிறார். அதற்கான காரணங்களை தாங்கள் அளிக்கவில்லை. முழுமையான தகவல் அளிக்க வில்லை. எனவே, தாங்கள் அளித்த தகவல் திருப்பி அனுப்பப்படுகிறது.
8) குற்றம் புரிந்த அதிகாரிகளுக்கே மனுவை மாவட்ட ஆட்சியர் திருப்பி அனுப்பி வருகிறார். அது தொடர்பாக ஒளிவு மறைவற்ற முழுமையான தகவலை சட்டப்படி தாங்கள் அளிக்கவில்லை. எனவே, தாங்கள் அளித்த தகவல் திருப்பி அனுப்பப்படுகிறது.
9) RIGHT TO BE HEARD IS THE RIGHT OF TH CITIZEN ….கேட்கப்படுவதற்கான உரிமை குடி மக்களுக்கு உள்ளது. ஆனால், மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் மீது உரிய விசாரணை செய்வது இல்லை. மாவட்ட ஆட்சியரின் நீதித்தன்மை வாய்ந்த முடிவல் பாதிக்கப்பட்ட எனக்கு அதற்கான காரணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு படி தங்கள் அளிக்கவில்லை.
10) குற்றம் புரிந்த அதிகாரிகளுக்கே மனுவை மாவட்ட ஆட்சியர் திருப்பி அனுப்புவது இந்திய அரசியல் சாசனத்தின் எந்த சட்டத்திற்கு உட்பட்டது ? என்று தாங்கள் தகவல் அளிக்கவில்லை. எனவே, தாங்கள் அளித்த தகவல் திருப்பி அனுப்பப்படுகிறது.
11) இந்திய அரசியல் சாசனம் யாருக்கும் எதேச்சததிகாரம் அளிக்கவில்லை.
அப்படியிருக்க, பொது மக்களிடம் இருந்து பெறும் மனுவை குற்றம் புரிந்த அதிகாரிகளுக்கே மாவட்ட ஆட்சியர் திருப்பி அனுப்புவது ஏன் ? என்ற தகவல் தாங்கள் அளிக்கவில்லை. எனவே, தாங்கள் அளித்த தகவல் திருப்பி அனுப்பப்படுகிறது.
12) அரசியல் சாசனப்படி சட்டப்படியன்றி வேறு எந்தவிதமாகவும் ஒருவரது உரிமை பறிக்கப்படக் கூடாது. அப்படி இருக்க, அளிக்கப்பட்ட தகவல் 1 –ல் குற்றம் புரிந்த அதிகாரிகளுக்கே மனுவை மாவட்ட ஆட்சியர் திருப்பி அனுப்பும் சட்டம் அல்லது விதிகள் இல்லை என்று தகவல் அளித்து உள்ளீர்கள். இது முன்னுக்குப் பின் முரணான தகவல் ஆகும்.
மாவட்ட ஆட்சியர் சட்ட முரணாக செயல்படுவதாக தங்கள் அளித்துள்ள தகவல் மூலம் உணர முடிகிறது, எனவே, தாங்கள் அளித்த தகவல் திருப்பி அனுப்பப்படுகிறது.
13) இந்திய அரசியல் சாசனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செல்லும் என்று தகவல் அளித்து உள்ளீர்கள். ஆனால், அரசியல் சாசனத்தின் எந்த சட்டப்படி குற்றம் புரிந்த அதிகாரிகளுக்கே மனுவை மாவட்ட ஆட்சியர் திருப்பி அனுப்பகிறார் என்று தகவல் இல்லை. எனவே, தாங்கள் அளித்த தகவல் திருப்பி அனுப்பப்படுகிறது.
14) தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6 (3 ) தங்களுக்குத் தெரியவில்லை என்பதற்கு தாங்கள் அளித்துள்ள ஆவணமே தகுமுறை சாட்சியமாகும். அரசுப் பணியில் இருக்க தங்களுக்கு தகுதி இல்லை. தங்களுக்கு எதிராக தகுதி வினவும் நீதிப் பேராணை செய்ய வேண்டி உள்ளது. எனவே, தாங்கள் அளித்த தகவல் திருப்பி அனுப்பப்படுகிறது.
15) உரிய தகவல்களை தகவல் உள்ள இடத்தில் இருந்து பெற்று அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
16) தெளிவாகக் கேட்கப்பட்ட தகவலைப் புரிந்து கொண்டு தாங்கள் தகவல் அளிக்கவில்லை. எனவே, தங்கள் தகவல் சட்டப்படி உரிய மற்றும் சரியான தகவல்களை ஒளிவு மறைவு இன்றி தகவல்களை அளிக்க வேண்டும் என்று பணிந்து கேட்டுக்கொள்கிறேன். தங்கள் தகவல் சட்டப்படி உரிய மற்றும் சரியான தகவல்களை அளிக்கவில்லை என்றால், தங்கள் எனக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு அளிக்கவேண்டுமாய்ப் பணித்து கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
திரு. பெ.சுப்ரமணியன்,
Law Foundation, ERODE.
இணைப்பு : தங்களின் தகவல்... ந.க.1998/2015 ஐதனி4 நாள் 28.072015

No comments:

Post a Comment