09/11/2015

3669 - 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal

தபால் ஒப்புகை அட்டையுடன் 
.09.2015. 


அறிவிப்பு எண்: 001 / 2015 / V. BHOOPATHI ./ T.N.E.B.

15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு. 


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், முன்னூர் கிராமம், வேலம்பாளையம் ஊரில் வசிக்கும் வேலுச்சாமி கவுண்டர் மகன் திரு. பூபதி வயது சுமார் 52 வருடங்கள் ஆகிய நான்;


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் க.பரமத்தியில் உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான பதிவுத் கழகம், உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் ( இயக்கலும் காத்தலும் ) உதவி மின்பொறியாளராகப் பணியாற்றும் தங்களுக்கு அளிக்கும் 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு இதுவாகும். 


1. தங்களது கடிதம் எண் உ.மி.பொ./ இ.கா / க.பரமத்தி / கோ.வி.வ. / அ.எண் 153 /15 / நாள் / 11.௦3.15 –ல் ஒரே புல எண்ணில் ஒரே பெயரில் இரண்டு மின் இணைப்பு வழங்க இயலாது என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். ஆனால், தங்களது பதில் எந்தவிதத்திலும் எனக்கு பொருந்தாது. தொடர்பற்றதைத் தொடர்பு படுத்தி வேண்டுமென்றே எனக்கு தீங்கு செய்து உள்ளீர்கள். சட்ட முரணாகச் செயல்பட்டு உள்ளீர்கள். 


2. பணியாற்றும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? என்ற வரைமுறைகளை வேண்டுமென்றே மீறிச் செயல்பட்டு தண்டிக்க தக்க குற்றச் செயல் புரிந்து உள்ளீர்கள். தங்களது செயல் இ.த்.சா.பிரிவு 166-ன் கீழ் குற்றம் எனத் தெரிகிறது. 


3. தங்களது முறையற்ற செயலால் எனக்கு தீங்கு நேரிடும் என்று தெரிந்தே முறைகேடாகச் செயல்பட்டு உள்ளீர்கள். அரசு ஊழியர்களுகான நடத்தை விதிகளை மீறிச் செயல்பட்டு உள்ளீர்கள். நல்ல எண்ணமின்றி செயல்பட்டு உள்ளீர்கள். 


4. சட்டப்படியான கடமையில் இருந்து வேண்டுமென்றே தவறி இ.த.ச. பிரிவு 108 –ன் படியான குற்றச் செயலைப் புரிந்து உள்ளீர்கள். 


5. தங்களது முறையற்ற செயலால் எனக்கு ஏற்பட்டு உள்ள நஷ்டத்திற்கு தங்களிடம் இருந்து 5 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன். 


6. இவ்வறிவிப்பு கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள், இதில் கண்டுள்ள குற்றச் சாட்டுகளுக்கு தாங்கள் உரிய பதில் அளிக்காவிட்டாலோ அல்லது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டாலோ இதில் கண்டுள்ள சங்கதிகளை சட்டப்படி தங்கள் அப்படியே ஒப்புக் கொண்டதாதவே ஆகும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 


7. மேலும், உரிய அதிகார அமைப்புகளிடம் முறையீடு செய்யவும் உரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும், இதுவே தங்களுக்கு எதிரான தகுமுறை சாட்சியமாகவும் சான்று ஆவணமாகவும் ஆகிவிடும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


. இப்படிக்கு 
. சட்டப்படியான அறிவிப்பு அளிப்பவர்

. திரு. பூபதி த / பெ வேலுச்சாமி கவுண்டர்.

No comments:

Post a comment