Monday, May 16, 2016

5367 - அவதூறு / வதந்தி / மாதிரி மனு, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal

அவதூறு / வதந்தி / மாதிரி மனு
.
பதிவுத் தபால் ஒப்புகை அட்டையுடன்.
.
அனுப்புனர்.

திரு. பெ. சுப்ரமணியன்
LAW FOUNDATION.
6, ரோஜா கார்டன், திண்டல்,
ஈரோடு – 638012

பெறுனர்;

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொதுத் தகவல் அலுவலர்,
ஈரோடு மாவட்டக் காவல் அலுவலகம்,
காந்திஜி ரோடு,
ஈரோடு – 638001.
மதிப்பிற்கு உரிய ஐயா, வணக்கம்.
பொருள் ; 1. கு.வி.மு.ச. பிரிவு 149 மற்றும் 150 –ன் கீழ் மனு. – அளிப்பது தொடர்பாக.
பார்வை : 1. இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு - 2.
2. இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 193, 499.
1. __________________________ முகவரியில் குடியிருக்கும் .................................................................... என்பவர் போனில் உரையாடலைப் பதிவு செய்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டு வதந்திகளை பரப்பி வருகிறார். மேலும் அவதூறு செய்து வருகிறார்.
2. மேலும் அவர் சட்டப்படி செய்யக் கூடாததை செய்து மற்றவர்களுக்கு தீங்கு செய்து வருகிறர். நேற்று 12.05.2016 காலையில் .......................................... என்ற செல் போனுக்கு போன் செய்து தேவை இல்லாமல் பேசி தொல்லை கொடுத்து உள்ளார். சம்பந்தம் இல்லாததைத் சம்பந்தம் உள்ளது போல பேசி மன உளைச்சலைக் கொடுத்து உள்ளார். சட்டப்படி செய்யக் கூடாததைச் செய்து குற்றம் புரிந்து உள்ளார்.
.
3. எந்தவொரு குற்றமும் நடை பெறாமல் தடுக்க வேண்டியது காவல் அதிகாரியின் கடமை ஆகும்.
4. கு.வி.மு.ச. பிரிவு 149 மற்றும் 150 –ன் கீழ் கைது செய்யக் கூடாத எந்தவொரு குற்றமும் நடைபெறாமல் தடுக்க வேண்டியது காவல் அதிகாரிகளின் கடமை ஆகும்.
5. கைது செய்யக் கூடிய குற்றம் புரிவதற்கான திட்டம் இவரிடம் உள்ளதை உணரமுடிகிறது.
6. சட்டப்படி அமைக்கப்பட்டு உள்ள அமைப்பு நடத்தும் கூட்டங்களுக்கு சென்று கைது செய்யக் கூடிய குற்றம் செய்வதற்கான திட்டம் அவரிடம் உள்ளது என்பதற்கு அவரது செயல்பாடுகளே ஆதாரமாக உள்ளது.
7. ஆகையால், தங்கள் இம்முறையீட்டை ஏற்றுக் கொண்டு கு.வி.மு.ச. பிரிவு 149 மற்றும் 150 –ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.
8. இப்படிக்கு
MANUTHAARA.
…………………. .
இடம் : கரூர்
தேதி : 12.05.2016.

No comments:

Post a Comment