பார்வையிடுங்கள் www.selvampalanisamy.in
1 ஏக்கர் நிலம் மோசடி;
தாசில்தார் மீது வழக்கு!
விழுப்புரம்; மூதாட்டியிடம், 1 ஏக்கர் நிலத்தை மோசடி செய்தது தொடர்பாக, தாசில்தார் உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அருகே தொடர்ந்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னம்மாள், 86; இவர் கடந்த, 10ம் தேதி எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார்:
- என் கணவர் இறந்து விட்டார். பெண் குழந்தையும், சிறு வயதிலே இறந்து விட்டதால், உறவினர் மகனை தத்தெடுத்து, வளர்த்து வருகிறேன்.
- குடும்ப சொத்தான, பானாம்பட்டு கிராமத்தில் உள்ள, ஒரு ஏக்கர், 5 சென்ட் இடத்தை அனுபவித்து வருகிறேன்.
- எங்கள் ஊரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர், 2016ம் ஆண்டு, விழுப்புரம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.
- காப்பீடு திட்டத்தில் சேர்ப்பதாக கூறி, என் சொத்தை அவர் பெயருக்கு மாற்றிக் கொண்டார்.
- வெளியூரில் பணிபுரிந்த என் வளர்ப்பு மகன் வந்த பிறகே இது தெரிந்தது.
- இதற்கு, அப்போதிருந்த விழுப்புரம் தாசில்தார், வளவனுார் வருவாய் ஆய்வாளர், தொடர்ந்தனுார் வி.ஏ.ஓ., உடந்தையாக இருந்துள்ளனர்.
- மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துஇருந்தார்.
- மனு மீது விசாரணை நடத்த, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, எஸ்.பி., ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
- நிலமோசடி தொடர்பாக, அப்போது பணிபுரிந்த தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ., பத்திர எழுத்தர் மற்றும் சுந்தர்ராஜன் உட்பட, ஏழு பேர் மீது மோசடி உள்ளிட்ட, ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 12.08.2020
No comments:
Post a Comment