திருமணமான ஒருவர், தனது Nominee ஐ, தனது அம்மாவை நியமனம் செய்துவிட்டால், அவர் இறப்புக்கு பின்னர், அவருடைய இறப்பு பலன், அவருடைய தாயாருக்கு மட்டும்தான் கிடைக்குமா? அவருடைய மனைவி & மக்களின் கதி? - பாமரன் கேள்வி!
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wdlhqVjEyV2dUWG8/view?usp=sharing
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wdlhqVjEyV2dUWG8/view?usp=sharing
Umapathy Vakkil தவறு. Nominee என்பவர், உயிருடன் இருக்கும் ஒருவரால் தனக்கு பின் தன்னுடைய இறப்புபலன்களை பெற(கவனிக்கவும்-அடையஅல்ல) நியமிக்கப்படுகிறார்.. இறப்புக்கு பின்னர், nominee அவற்றை -பணபலன்களை-பெற்று , இறந்தவரின் அனைத்து வாரிசுகளுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். Nominee க்கு அனைத்து தொகையும் சென்றடையாது...அம்மா நியமிக்கப்பட்டால், அம்மா, மனைவி,, மகள், மகன் பயன்பெறுவர்.அம்மா மட்டும் பணம் பெற்றுவிட்டால், துறைமீது வழக்கிட்டு, பணத்தை திரும்ப வாரிசு அடிப்படையில் பெற வாய்ப்பு உள்ளது.. உயர்நீதிமன்றமே சிறந்தது.
ReplyDelete1 hr · Unlike · 2
A Govindaraj Tirupur அப்படி என்றால், Nominee இறப்பு பலனை பெற்றாலும், இறந்தவரின் வாரிசுகள், அந்த இறப்பு பலனில் பணம் பெற வாய்ப்பு உள்ளது அல்லவா ஐயா?
1 hr · Like
Umapathy Vakkil நிச்சயமாக வாய்ப்புள்ளது...
1 hr · Unlike · 1
A Govindaraj Tirupur நன்றி ஐயா!
1 hr · Like · 1
A Govindaraj Tirupur நீங்கள் சொன்னது சரிதான் ஐயா. ஏனெனில், மேற்படி உத்தரவில், இறந்தவரின் பணபலன் வேண்டும் என கோரியவர், அதற்கான வாரிசு சான்றிதழ் தாக்கல் செய்யவில்லை என ஒரு வரி வருகிறது! சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா
1 hr · Like