Sunday, February 08, 2015

RTI-ஓர் புகார் மனு தொடர்பான தகவல்கள் / ஆவணங்கள் வேண்டும் மனு

விரைவு அஞ்சலில்

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் விண்ணப்பம்

அனுப்புநர்  





திரு. பொது தகவல் அலுவலர் அவர்கள்
(தகவல் அறியும் உரிமை சட்டம் 2005),
........................................அலுவலகம்,........................................அஞ்சல்,
........................................மாவட்டம் (பின் கோடு)

*********
பொருள் :     தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் விண்ணப்பம்
*********

மதிப்பிற்குரிய ஐயா / அம்மா அவர்களுக்கு,

பார்வை  (புகார் மனு பற்றிய விவரம்)

1    நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். இம்மனு, ரூ. 10/-க்கான நீதிமன்ற கட்டண வில்லையுடன் தாக்கல் செய்யப்படுகிறது.

2    கீழ்க்காணும் இனங்களில் எவையேனும் ஒரு சில இனங்கள், தங்களுடைய அரசு அலுவலகம் தொடர்பில்லாதபோதும், அதனை சட்டப்பிரிவு 6(3)-ன் படி மாற்றி அனுப்பி, அதன் விவரத்தை விண்ணப்பம் பெற்றுக் கொண்ட 5 நாட்களுக்குள், மனுதாரர் ஆகிய எனக்கு தெரியப்படுத்துமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

3   பார்வையில் சொல்லப்பட்டுள்ள, உத்தரவில் தொடர்புடைய விவரங்கள் / ஆவணங்கள் பின்வருமாறு

1  மேற்சொன்ன பார்வை 1-ல் சொல்லப்பட்ட புகார் கடிதத்தின் மீது எவ்வகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய தினசரி முன்னேற்ற அறிக்கைஎன்ற விவரங்களை / ஆதாரங்களை தரவும். ஆதாரம் : Petitions - Petitions presented to Government Officers - Procedures for dealing with grievance Petitions - Instructions Issued. G. O. Ms. No. 114, Dated : 02.08.2006. Personal and Administrative     Reforms (A) Department. Chief Secretary to Government).

2  மேற்சொன்ன பார்வை 1-ல் சொல்லப்பட்ட புகார் கடிதத்தின் மீது எந்தெந்த அரசு அதிகாரிகள் / அலுவலர்கள் வசம் இருந்தது, அவர்களின் பெயர்கள் மற்றும் பதவிகள் பற்றிய விவரங்கள் தயவு செய்து தரவும். எந்தெந்த அதிகாரிகளிடம் / அலுவலர்களிடம் எவ்வளவு காலம் இந்த புகார் இருந்த்து. அவர்கள் ஒவ்வொருவரும் இதன் மேல் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்ற விவரங்களை / ஆதாரங்களை தரவும். ஆதாரம் : From the Government Of India, Ministry Of Personal, Public Grievance and Pensions, New Delhi, D. O. No. G-13013 / 1 / 2006-PG Dt. 05.05.2006. TN GO Ms. No. 114, Dt. 02.08.2006

3  மேற்சொன்ன பார்வை 1-ல் சொல்லப்பட்ட புகார் கடிதத்தினை பெற்றுக் கொண்ட தங்கள் அரசு அலுவலகம் / பிற அரசு அதிகாரிகள் / அலுவலர்கள் ஒவ்வொருவரிடமும் என் விண்ணப்பம் பெறப்பட்டதற்கும் பின்னர் வேறு பிரிவுகளுக்கு அனுப்ப்பட்ட்தற்கும் உரிய விவரங்கள் / ஆதாரங்கள் தரவும். ஆதாரம் : G. O. Ms. No. 89, P & AR (A), Dept. Dt.13.05.1999 ).

4  மேற்சொன்ன பார்வை 1-ல் சொல்லப்பட்ட புகார் கடிதத்தினை பெற்றுக் கொண்ட தங்கள் அரசு அலுவலகம் / பிற அரசு அதிகாரிகள் / அலுவலர்கள் மேற்சொன்ன ஆதாரங்களின் படி, குறிப்பிட்ட காலவரையறைக்குள் தக்கவாறு செயல்படவில்லை. எனவே, இந்த அதிகாரிகள் விதிகளை மீறிய குற்றத்திற்கு உள்ளாகிறார்கள் எனில் நடத்தை விதிகளின்படி (Conduct Rules) தவறான நடத்தைக்கான குற்றத்திற்கும் ஆளாகிறார்களா என்பதையும் மேற்கண்ட விதிகளை மீறியதன் மூலம் அவர்கள் நடத்தை விதிகளை மீறிவிட்டதைக் காட்டும், இந்த அதிகாரிகளுக்கான, நடத்தை விதிகள்என்னென்ன என்பவை பற்றிய விவரங்கள் / ஆதாரங்கள் தரவும். ஆதாரம் : Para 167 (1) The Tamil Nadu Government Business rules and Secretariat Instructions) G. O. Ms. No. 66, P & AR (A) Dept. Dated 23.02.1993

5  மேற்கண்ட விதிகளை மீறியதற்காக மற்றும் நடத்தை விதிகளை மீறியதற்காக இந்த அதிகாரிகள் மீது, துறை ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் எத்தனை நாட்களுக்குள் அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்பவை பற்றிய விவரங்கள் / ஆதாரங்கள் தரவும். ஆதாரம் G. O. Ms. No. 26, P & AR (A) Dept. dated 15.02.2008

6  முன்னுரிமை கொடுக்கப்பட்டு சிறப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ட புகார்கள் / விண்னப்பங்கள் / திருப்பி அனுப்பபட்ட கடிதங்கள் / புகார்கள் / குறைகள் போன்றவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், கண்காணிப்புத்துறை எப்பொழுது அத்தகைய விசாரணையை மேற்கொள்ளும் என்பவை பற்றிய விவரங்கள் / ஆதாரங்கள் தரவும்

7  மேற்கண்ட பார்வை 1-யில் சொல்லப்பட்ட, எனது புகாருக்கு பிறகு பெறப்பட்ட புகார்கள் / விண்ணப்பங்கள் / திருப்பி அனுப்பபட்ட கடிதங்கள் / மேல் முறையீடுகள் / குறைகள் இவற்றில் ஏதேனும் அலுவல் கடித வரிசை எண் இல்லாமல் முன்னுரிமை கொடுக்கப்பட்டு விசேசமாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணங்கள் தரவும்

8  மேற்சொன்ன இனங்களுக்குரிய தகவல்கள் / ஆவணங்களில் எவையேனும், சட்டப்பிரிவு 8 (1) (b)-ன் படி தடை செய்யப்பட்டிருப்பின், ஆதாரங்களுடன் முழு விவரங்கள் தரவும்


9  சட்டப்பிரிவு 7 (8) (iii)-ன் படி, முதல் மேல் முறையீட்டு அலுவலரின் முழு முகவரி தரவும்

  மேற்கண்ட இனங்களுக்குரிய சான்றொப்ப ஆவணங்களுக்குரிய கட்டணத்தினை முறையாக எவ்வாறு செலுத்துவது என்பது குறித்து முறையாக தெரிவித்தால், அதனை முறையாக செலுத்த தயாராக உள்ளேன். மேலும், வரையறுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள், விண்ணப்பத்திற்குரிய முழுமையான, சரியான, தெளிவான விவரங்கள் / ஆவணங்கள் வழங்க வேண்டுகிறேன். நன்றி ஐயா, வணக்கம்.

இடம் :    

நாள் :                                                 மனுதாரர்

இணைப்பு  புகார் மனுவின் நகல்

No comments:

Post a Comment