தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் பிரிவு 22,
இப்பிரிவின் படி இச்சட்டம் செயலாக்கம் வருவதற்கு முன்னர், ஏற்கனவே, பாராளுமன்றம் / சட்ட மன்றங்களின் மூலம் இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்கள், இச்சட்டத்தின் பிரிவுகளுக்கு முரண்பாடாக இருப்பினும், மேலும் அலுவலக இரகசிய சட்டம், 1923 (19/1923) / முறை ஆவணம் எதிலும் வேறுபாடான வகையில் என்ன கூறப்பட்டு இருந்தாலும், இந்த சட்டத்தின் வகையங்கள் செயலாக்கம் உடையதாக இருக்கும் என தெரிவிக்கிறது.
எனவே, பொது தகவல் அலுவலர் இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள பிரிவுகளுக்கு உட்பட்டு, கோரிய தகவலை வழங்க வேண்டும். அவரவர் துறைகள் / நிறுவனங்களில் செயல்படுத்தப்படுகின்ற சட்டங்களின் பிரிவுகளை எடுத்துக் காட்டி, இச்சட்டத்தின் கீழ் கோரப்படும் தகவல்களை தர இயலாது என தெரிவிக்கக் கூடாது. எனவேதான், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இது, முக்கிய பிரிவாக கருதப்படுகிறது.
ஆதாரங்கள் இதோ!
No comments:
Post a Comment