Friday, May 22, 2015

1859 - குற்ற வழக்கு பதியப்பட்டதால் மனுதாரரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட வழக்கு, உயர்நீதிமன்றம், சென்னை, 03-02-2015

இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 19, 21க்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட உடனே ஓட்டுனர் உரிமம் 6 மாதங்களுக்கு எவ்வதமான விசாரனையின்றி ரத்து செய்வது சட்டவிரோதம் தொடர்பான தீர்ப்பு................ விபத்து ஏற்படுத்தியதாக இ.த.ச.304-A வில் குற்ற வழக்கு பதியப்பட்டதால் மனுதாரரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட வழக்கு
சூழல் : 
மனுதாரர் மீது குற்ற வழக்கு பதியப்பட்டதால் அவருடைய ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ஆறு மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டது.

கேள்வி : 
குற்ற வழக்கு பதியப்பட்டவுடனே ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படலாமா ?

பதில் : 
முடியாது. குற்ற வழக்கில் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்ட பிறகுதான் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட நடவடிக்கை எடுக்கலாம். குற்ற வழக்கு பதிந்தவுடன் உரிமத்தை ரத்து செய்தது சரியல்ல.




No comments:

Post a Comment