From
To.
To.
மதிப்பிற்குரிய அய்யா, வணக்கம்
F.I.R. பதிவு செய்ய உத்திரவிடக் கோரும் மனு. கு.வி.மு.ச. பிரிவு 156 (3) ன் கீழ் மனு
கைது செய்வதற்குரிய குற்றம் என்று குற்றவியல் சட்டத்தில் வரையறை செய்துள்ள குற்றச் செயல் நடைபெற்றுள்ளது என்று கு.வி.மு.ச. பிரிவு 154 (1) ன்படி ........................... அன்று ..........................காவல் நிலையத்தில் நேரில் தகவல் கொடுத்து உள்ளேன். அதே மனுவை பதிவுத் தபாலிலும் .....................காவல் நிலையத்திற்கு அனுப்பி சார்வு செய்து உள்ளேன். அதன் நகல் இத்துடன் இணைத்து உள்ளேன்.
......................... காவல் நிலையத்தில் F.I.R. பதிவு செய்யவில்லை. எனவே, மு.வி.மு.ச.பிரிவு 154 (3 ) ன் கீழ் .....................மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பதிவுத் தபாலில் மனு அனுப்பி உள்ளேன். அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. F.I.R. பதிவு செய்யவில்லை. எனது மனு கேட்கப்படவில்லை. எனது அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு உள்ளது. அதன் நகல் இத்துடன் இணைத்து உள்ளேன்
மேற்படி காவல் ஆய்வாளருக்கு F.I.R. பதிவு செய்ய உத்திரவிட்டு நீதி வழங்கலாம் எனப் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்
மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் இம்மனுவை தங்களிடம் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளேன்
கு.வி.மு.ச. பிரிவு 156 (3) ன் கீழ் இம்மனுவை தங்களிடம் பணித்து சமர்ப்பிக்கிறேன்.
.
No comments:
Post a Comment