Monday, June 29, 2015

2170 - முதன்மைக் குற்றவியல் நடுவர் அவர்களே! நன்றி ஐயா. Thindal Subramanian Perumal

முதன்மைக் குற்றவியல் நடுவர் அவர்களே ........
.
இ.த.ச. பிரிவு 108,166,167, 219, 471 அகியவைகளின்படி தண்டிக்க தக்க குற்றம் செய்து உள்ளீர்கள். 
.
குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 190 (1) (இ) ன் படி கொடுத்த மனுவை பெற்றுக் கொண்டு, குற்ற நடைமுறைச் சட்டத்தில் பிரிவு 190 (1) (இ) இல்லை என்று திரித்து தகவல் அளித்து உள்ளீர்கள். இதற்கு தாங்கள் அளித்து உள்ள தகவலே தகுமுறை சாட்சியம் ஆகும். 
.
நல்ல எண்ணத்துடன் தங்கள் செயல்படவில்லை என்பதற்கு தங்கள் அளித்த தகவலே தகுமுறை சாட்சியம் ஆகும். இந்திய சாட்சிய சட்டம் கோட்பாடு 134 -ன்படி வேறு சாட்சியங்கள் தேவை இல்லை.
.
மேலும், இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 35௦ நீதித்துறைக்கு பொருந்தாது என்றும் தகவல் அளித்து உள்ளீர்கள் .
.
தங்களின் இந்த செயல் குறித்து இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 19 ( 1) ( அ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 விதிவிலக்கு 4 & 5 ன்படி ஏன் பத்திரிகைகளில் வெளியிடக் கூ டாது ? என்பதற்கான காரணங்களை 15 நாட்களுக்குள் தெரிவிக்கவும்.
.
இல்லையெனில், தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கருதி சட்டப் பஞ்சாயத்து, ஊழல் ஒழிப்புச் செய்தி போன்ற பத்திரிக்ககைகளில் தங்களின் செயல்பாடுகளை உள்ளது உள்ளபடி சட்டத்திற்கு உட்பட்டு வெளியிட வேண்டியது அவசியமானதாகி விடும் ...என்பதைப் பணிந்து அறிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment