Saturday, July 25, 2015

2413 - 32 நீதிமன்ற சீர்திருத்தங்கள், நன்றி ஐயா. Thindal Subramanian Perumal அவர்கள்

1. நீதிமன்றத்திற்கு வரும் பொது மக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். 
.
2. நீதிமன்றத்திற்கு வரும் பொது மக்களுக்கு அமர வசதி செய்து கொடுக்க வேண்டும்.
.
3. நீதிமன்றத்திற்கு வரும் பொது மக்களுக்கு சுத்தமான சுகாதாரமான குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
.
4..நீதிமன்றத்திற்கு வரும் பொது மக்களுக்கு வேண்டிய தகவல் அளிக்க வேண்டும்.
.
5. நீதிமன்றத்திற்கு வரும் பொது மக்களிடம் கனிவுடன் பேச வேண்டும்.
.
6. நீதிமன்றத்திற்கு வரும் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்..
.
7 . நீதிமன்றத்திற்கு வரும் பொது மக்களுக்கு கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும். ...
.
8. புகார் பெட்டி வைக்க வேண்டும்.
.
9. மனுப் பெட்டி வைக்க வேண்டும்.
.
1௦. நீதிமன்றத்திற்கு வரும் பொது மக்களையும் வக்கீல்களையும் சமமாக நடத்த வேண்டும்.
.
11. அன்றைய தினம் விசாரணைக்கு வரும் வழக்குகளின் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
.
12. வாய்தாப் போடப்பட்ட வழக்குகளின் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
.
13.நீதிபதிகள் மீது செய்யப்படும் புகார் யாரிடம் அளிக்க வேண்டும் ? என்ற அறிவிப்பு இருக்க வேண்டும்.
.
14.பொது மக்கள் முன் விசாரணை செய்ய வேண்டும்.
.
15. சுய வழக்களிகளை அவமதிக்க கூடாது.
.
16. அரசியல் சாசனம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
.
17. பொய் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உடந்தையாயிருக்கும் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.
17. மனித உரிமை ஆணைய முகவரி மற்றும் பதிவாளர் முகவரி ஆகியன பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
.
18. எதேச்சதிகாரமாக நடக்கக் கூடாது.
.
19. நீதிமன்றத்திற்கு வரும் பொது மக்களுக்கு வாகனங்களை நிறுத்த வசதி செய்து கொடுக்க வேண்டும். ..
.
20. அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
.
21. மனித உரிமை மீறல்களில் ஈடுபடக் கூடாது.
.
22. நீதிமன்றத்தில் தரப்பினர் வருகைப் பதிவு ஏடுகள் பாராமரிக்கப்பட வேண்டும்.
.
22. பொது ஊழியர்களுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் வரைமுறைகளை நீதிபதி மீறக் கூ டாது.
.
23. வழக்கு விசாரணையின் போது பதிவு செய்ய வேண்டும் C.C.T.V. CAMERA வேண்டும்.
.
24. வாய்தா வழங்க வரைமுறை வேண்டும்.
,
25. செல்லாத சட்டங்ககளை நீக்க வேண்டும்.
.
26. வக்கீல்களின் வாதத்தைடே தீர்ப்பாக அளிக்க கூடாது.
.
27. அளித்துள்ள தீர்ப்புகளை தகுந்த முறையான ஆய்வு மற்றும் கண்காணிப்பு செய்ய வேண்டும்.
.
28. அனுபவமில்லாதவர்கள் நீதிபதியாவதை தடுக்க வேண்டும்.
.
29. தேர்வு எழுதினால் நீதிபதி என்ற முறை ஒழிக்கப்பட வேண்டும்.
.
3௦. குற்றம் சாட்டப்பட்டவருக்கும் நீதிபதிக்கும் இடையே 10 அடிக்கு மேல் இடைவெளி இருக்க கூடாது.
.
31. ஒரு வழக்கு விசாரணையின் போது அவ்வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத வக்கீல்கள் நீ்திமன்ற அறையில் இருக்க அனுமதிக்க கூடாது.
.
32. நீதிபதிகள் வக்கீல்களுக்கு சாதகமாக மற்றும் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதைக் கண்காணிக்க வேண்டும்

1 comment:

  1. இவையெல்லாம் சட்டத்தில் இருக்கிறதா எந்த சட்டத்தில்

    ReplyDelete