Thursday, August 06, 2015

2536 - அரசு வழக்கறிஞர், தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் கட்டுப்பட்டவரா / இல்லையா? எனது கருத்து.

1. தமிழ்நாடு அரசால் பணி நியமனம் செய்யப்பட்டவர்.....
2. தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 2(ஏ)-பொது அதிகார அமைப்பு என்பது (இ) "மாநிலச் சட்டமன்றம் செய்த வேறு சட்டம் எதனாலும்" கட்டுப்படுத்தக் கூடிய அமைப்பு, பொது அதிகார அமைப்பே!
3. தமிழ்நாடு அரசு” என அரசு முத்திரை இடப்பட்ட கடிதத்தில் பதில் அளிப்பதால், மாநில அரசில் தாம் இல்லையென்பது  ஏற்கத்தக்கது அல்ல
4. "இந்திய தண்டனை சட்டம் 1860"-ன் உட்பிரிவு 21(6), "நீதிமன்றத்தாலொ / வேறு அதிகாரம் பெற்ற அமைப்பாலோ ஒரு விவகாரத்தைப் பரிசீலித்து முடிவு செய்வதற்காக நியமிக்கப்பட்ட மத்யஸ்தர் அல்லது நபர்" பொது ஊழியர் ஆவார்.
5. பொது ஊழியர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள், "இந்திய சாட்சிய சட்டம் 1872"-ன் பிரிவு 74-ன் கீழ் பொது ஆவணங்கள் ஆகும்
6. பொது ஆவணங்கள் உள்ள அலுவலகம், பொது அதிகார அமைப்பு ஆகும்
7.  பொது அதிகார அமைப்பான, அரசு வழக்கறிஞர் அலுவலகம், தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் கட்டுப்பட்டது ஆகும்.


No comments:

Post a Comment