Wednesday, October 07, 2015

3327 - “இந்திய சாட்சிய சட்டம் – 1872”-ன் பிரிவு 76-ன் கீழ் மனு மாதிரி

கோவிந்தராஜ்
/ பெ. அங்கமுத்து,
பாதிக்கப்பட்டோர் கழகம்-உறுப்பினர்,
3/269பி, திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி அருகில்,
இடுவம்பாளையம் அஞ்சல், முருகம்பாளையம், திருப்பூர் 641 687
90035-05555,  goindhu@yahoo.com
விரைவு அஞ்சலில்

“இந்திய அரசியல் சாசனம் 1950”-ன் கோட்பாடு 19 (1) (அ), 14, 21 &
“இந்திய சாட்சிய சட்டம் – 1872”-ன் பிரிவு 76-ன் கீழ் மனு

கடித எண். AG-IEL-00 / 0000, நாள். 00-00-0000   
பெறுநர் :

...........................................
...........................................
...........................................
...........................................

***********
பொருள் : “இந்திய சாட்சிய சட்டம் – 1872”-ன் பிரிவு 76-ன் கீழ் மனு
***********

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஐயா / அம்மா அவர்களுக்கு

பார்வை

1    நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். கீழ்க்கண்ட தொடர்பான ஆவணங்கள், இவ்-வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக தேவைப்படுவதால், இம்மனு, ரூ. 20/-க்கான நீதிமன்ற கட்டண வில்லையுடன், அவசர அவசியமாக தாக்கல் செய்யப்படுகிறது.

2   இந்திய சாட்சிய சட்டம் 1872”-ன் பிரிவு 21-ன் கீழ், தாங்கள் பொது ஊழியர் பட்டியலில் வருகிறீர்கள் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

3   “இந்திய அரசியல் சாசனம் 1950”-ன் கோட்பாடு 21-ன் படி, எவருக்கும் ஏதேச்சதிகாரம் அளிக்கவில்லை, “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என வலியுறுத்தியுள்ளது. சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படி அன்றி, வேறெந்த விதமாகவும், ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் உயிரையும் பறிக்க கூடாது என சொல்லப்பட்டுள்ளது.

4   “இந்திய அரசியல் சாசனம் 1950”-க்கு முரணாக சட்டங்கள் இருந்தால், அந்த சட்டங்கள் அனைத்தும், “இந்திய அரசியல் சாசனம் 1950”-ன் கோட்பாடு 13(1)-ன் படி செல்லத்தக்கது அல்ல.

5   நாட்டில் அமுலில் உள்ள சட்டங்களில் ஒன்றான, இந்திய சாட்சிய சட்டம் – 1872” ஆனது, தங்களுடைய அரசு அலுவலகத்தில் அமுலில் உள்ளது என நம்புகிறேன்.

6   கீழ்க்கண்ட சங்கதிகளை கொண்ட ஆவணங்கள் அனைத்தும், இந்திய சாட்சிய சட்டம் 1872”-ன் பிரிவு 74-ன் படி பொது ஆவணங்கள் ஆகும்.

7   இந்திய சாட்சிய சட்டம் 1872”-ன் பிரிவு 76-ல், “எவருக்கும் பார்வையிடுவதற்கு உரிமையுள்ள, ஒரு பொது ஆவணத்தைப் பாதுகாப்பில் வைத்துள்ள, ஒவ்வொரு பொது அலுவலரும், அந்த நபரின் வேண்டுதலின் பேரிலும், அதற்குரிய சட்டப்படி விதிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தியதன் பேரிலும் அதன் நகல் ஒன்றை அளிக்க வேண்டும்...” என சொல்லப்பட்டு்ள்ளது. இப்பிரிவில் சொல்லப்பட்டுள்ள, “வேண்டுதல்” என்பது, எவ்வழியில் என வரையறை செய்யப்படவில்லை.

8   இந்திய சாட்சிய சட்டம் 1872”-ன் பிரிவு 76-ன் படி, பார்வையிடுவதற்கு உரிமையுள்ள, மனுதாரர் ஆகிய நான், மேற்படி மனுவில் சொல்லப்பட்டுள்ள, இந்திய சாட்சிய சட்டம் 1872”-ன் பிரிவு 74-ன் படி பொது ஆவணங்களை பாதுகாப்பில் வைத்துள்ள, தங்களிடத்தில், NCDRC, New Delhi, Revision Petition No. 2135 of 2000, Dated 08-07-2002, உத்தரவு, பக்கம் எண். 7, பத்தி 3-ல், “The Grant of certified copies of orders of courts is not a sovereign function but it is an administrative function. Since it is not a judicial function” என்றும்,சான்று நகல்கள் பெறுவது, நீதித்துறையை சார்ந்தது அல்ல, மாறாக அது நிர்வாகத்துறையை சார்ந்ததுஎன சொல்லியுள்ளபடி, ரூ. 20/- நீதிமன்ற கட்டண வில்லையுடன், திரு. முதன்மை நிர்வாக அதிகாரியான தங்களுக்கு, இம்மனு, தாக்கல் செய்யப்படுகிறது.

9   மேலும், மேற்படி உத்தரவில், “இந்திய சாட்சிய சட்டம் 1872”-ன் பிரிவு 76-ன் கீழ் சான்று நகல்கள் கோரும் மனுதாரர், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் “நுகர்வோர்” எனவும் சொல்லப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவில், மூன்றாம் நபருக்கு, வழக்கின் உத்தரவு நகல் வழங்கப்பட்டுள்ளது.

10 மாண்பமை. உச்சநீதிமன்றம், Crl. App. No. 19 / 2003, 28-04-2009-ல் சொல்லியுள்ள, “தீர்ப்பின் காரணங்களை கூற மறுப்பது, நீதி மறுப்பிற்கு சமம்” என உத்தவிட்டுள்ளதன் அடிப்படையில், இம்மனு ஏற்க மறுக்கப்பட்டால், அதற்கான காரணங்களை, தயவுகூர்ந்து வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

11  மேற்படி பொருள் குறித்து, சில உத்தரவுகளை, தங்களின் மேலான பார்வைக்கு இதன் மூலம் பணிவுடன் வைக்கிறேன். ஆகவே, கீழ்க்கண்ட உத்தரவுகளின் படி, இம்மனுவினை, கருணையுடன் பரிசீலணை செய்யுமாறு வேண்டுகிறேன்.

a.  உச்சநீதிமன்றம், வழக்கு எண். 6237 / 1990, நாள். 05-11-1993-ல் சொல்லப்பட்டுள்ள உத்தரவின் படி, ஒரு அரசாங்க பணிக்கு யார் பொறுப்பு?” என்பதை உச்சநீதிமன்றம் சட்ட விளக்கம் அளித்துள்ளது.

b.  தகவல் தர மறுப்பது, மனித உரிமை மீறல்என மாண்பமை நீதிமன்றங்களால், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பார்க்க : (1) The Superintendent Of Police, DVAC, Chennai Vs. R. Karthikeyan & TNSIC, Chennai, High Court Madras, W. P. Nos. 23507 & 23508 of 2009, Dated 12-01-2010, Hon’ble Justice, K. Chandru, (2) Union Of India Vs. Scientific Workers Assn. (Regd), Supreme Court Of India, Judgement dated 18-03-1994

c.  இந்திய சாட்சிய சட்டம் 1872:”-ன் சட்டப்பிரிவு 74 & 76-ன் கீழ் சான்று நகல்கள் பெறுவது தொடர்பாக, கீழ்க்கண்ட உத்தரவுகளை, தங்களுடைய மேலான பார்வைக்கு இதன் மூலம் வைக்கிறேன். மத்திய தகவல் ஆணையம், புதுடில்லி, வழக்கு எண் & நாள். CIC / MA / A / 2006 / 00121, நாள். 08-08-2006, CIC / SG / A / 2008 / 00043 / SG/ 1288 & Appeal No. CIC / SG / A / 2008 / 00043, நாள். 10-02-2009, CIC / PA / A / 2009 / 000010, நாள். 31-12-2009, CIC / SS / C / 2010 / 000051, நாள். 16-08-2010, CIC / LS / A / 2012 / 000603, நாள். 06-09-2012, CIC / SA / A / 2014 / 000462, நாள். 29-12-2014 & CIC / DS / A / 2013 / 001754-SA, நாள். 03-11-2014, உயர்நீதிமன்றங்களின் உத்தரவுகள் ; Smt. Rekha Rama & Ors. Vs. Smt. Ratnashree Jain on 17 August, 2005, High Court, Madhya Pradesh, V. J. Thomas Vs. State Of Kerala on 23 January 1970, High Court, Kerala & Ganeshan and 4 others Vs. Sundaraja Thevar and 5 others on 28 July 1989, High court, Madras, உச்சநீதிமன்ற உத்தரவுகள் : Criminal Appeal No. 82 of 2004, Dated on 07-10-2005, State through Inspector Of Police, A. P. Vs. K. Narasimhachary
***********

12 “இந்திய சாட்சிய சட்டம் 1872”-ன் பிரிவு 76-ன் கீழ் தேவைப்படும் ஆவணங்கள் பின்வருமாறு :

1    “இந்திய அரசியல் சாசனம் 1950”-ன் கோட்பாடு 14 & 21, தங்களை கட்டுப்படுத்தாது எனில், அதற்குரிய விவரங்கள் & ஆதாரங்களின் சான்று நகல்கள் வழங்க வேண்டுகிறேன்

2   “இந்திய சாட்சிய சட்டம் 1872”-ன் பிரிவு 76-ன் கீழ் தாங்கள் / பதில் அளிக்க வேண்டியதில்லை / கட்டுப்படுத்தாது எனில், அதற்குரிய விவரங்கள் & ஆதாரங்களின் சான்று நகல்கள் வழங்க வேண்டுகிறேன்

3   “தகவல் அறியும் உரிமை சட்டம் 2005”-ஆனது, தங்களை  கட்டுப்படுத்தாது / பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனில் அதன் விவரங்கள் & ஆதாரங்களின் சான்று நகல்கள் வழங்க வேண்டுகிறேன்

4   ..........

5   ..........

6   ..........

***********

13 மேற்படி பதில்கள் & ஆவணங்கள் அனைத்தும், மேற்படி சொத்து தொடர்புடைய வழக்குகளில், சமர்ப்பிக்க வேண்டி, அவசர அவசியமாக தேவைப்படுகிறது. ஆகவே, அதன் பொருள் உணர்ந்து, மேற்படி விண்ணப்பத்திற்குரிய பதில்கள் & ஆவணங்களை, மனுதாரர் ஆகிய எனக்கு அளித்திடுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

14 மேற்கண்ட ஆவணங்களுக்குரிய கட்டணம் எவ்வளவு மற்றும் எவ்வகையில் செலுத்துவது என்பது குறித்த தகவல்களை தெரிவித்தால், கட்டணத்தினை செலுத்திவிட தயாராக உள்ளேன் என்பதை சமூகம் அவர்களின் மேலான பார்வைக்கு இதன் மூலம் கொண்டு வருகிறேன்.

15 நன்றி ஐயா, வணக்கம்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
இடம் :   
நாள் :    00-00-00                              


குறிப்பு :   மனுதாரரின் / புகார்தாரரின் கடித எண். மற்றும் நாள் போன்றவற்றினை குறிப்பிட்டு பதில் தரவும்.

1 comment:

  1. என்ன ஆவணம், எந்த துறை சம்மந்தப்பட்ட ஆவணம் என்று குறிப்பிடப்படவில்லை

    ReplyDelete