தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையை, ஒரு சாதாரண கடிதப் போக்குவரத்தாக, பொ. த. அ., கருதியிருப்பது, வருந்தக்கது.
பொ. த. அ., தன்னை, "Right Information Officer" என்றும், இவ்-ஆணையத்தை, "Right Information Office" என்றும் குறிப்பிட்டுள்ளது, பொறுப்பற்ற முறையிலும், கவனமற்ற முறையிலும், கடிதம் அனுப்பபட்டுள்ளதை, தெளிவாக்குகிறது.
மேல்முறையீட்டாளரின் குறையை தீர்ப்பதற்கு, எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்பது, மிகவும் வருந்தக்கது ஆகும்.
சட்டப்பணிகள் குழுவின், பண வசதி இல்லாதவர்களுக்கு, இலவச சட்ட உதவி வழங்குவதாகும்.
மேல் முறையீட்டாளருக்கு, அவருடைய பத்திரம் திரும்ப கிடைக்காது என முதலிலேயே தெரிந்திருந்தால், அவர், ஒருவேளை, சமாதான உடன்படிக்கைக்கு ஒப்புக் கொள்ளாமல், இருந்திருக்கலாம். அப்பொழுது, அதை தெரிவிக்காதது மட்டுமின்றி, மீண்டும் அதன் நிலைமை பற்றி தெரிந்து கொள்ள, மேல் முறையீட்டாளர் செய்த முயற்சிக்கு, தகுந்த பதில் தரப்படவில்லை.
No comments:
Post a Comment