Monday, January 25, 2016

4772 - PSO - 559 - குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு, அதிகார வரம்புடைய காவல் நிலையம் எது என்பது குறித்து, ஐயம் ஏற்படுகையில் வழக்குகளைப் பதிவு செய்தல்

Registry of cases when station limits of occurence are doubtful...

1. இரண்டு காவல் நிலையங்களுக்கு இடையே உள்ள ஒரு எல்லைக்கு அருகில் ஒரு குற்றம் செய்யப்பட்டு, அது எந்த காவல் நிலைய வரம்புக்குள் நிக்ழந்தது என்னும் ஐயம் ஏற்படுகையில், அது முதலில் அறிவிக்கப்பட்ட காவலர், வழக்கைப் பதிவு செய்து, புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்; அதை வைத்துக் கொள்ள வேண்டிய காவல் நிலையத்தைப் பிற்பாடு நிர்ணயிக்க வேண்டும்.

2. ரயில் காவல் அதிகார வரம்பிற்குள் செய்யப்பட்ட ஒரு குற்றமானது, அந்த ரயில் பாதை வழியில் உள்ள ஒரு மாவட்டக் காவல் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டால், இரண்டாவதாக சொல்லப்பட்ட காவல் நிலையம் சம்பந்தப்பட்ட ரயில் காவல் நிலையத்திற்கு உடனடியாக அதனைத் தந்தி செய்தி மூலம் அறிவிக்க வேண்டும்; அத்தந்திச் செய்தியைத் தொடர்ந்து, மேற்படி வழக்கை மாற்றும் வகையில், முதல் தகவல் அறிக்கை ஒன்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அதிகார வரம்புள்ள ரயில் காவல் நிலையத்துக்கு அவ்-வழக்கை மாற்றும் முதல் தகவல் அறிக்கையை மிக மிக விரைவான செய்தி அறிவிப்பாகவும் ரயில் காவலர், பயணச் சிப்பந்தி மூலமாகவும் உடனடியாக அனுப்ப வேண்டும்

No comments:

Post a Comment