07/02/2016

4890 - மோசடியாண ஆவணங்களை கொண்டு பதிவு செய்யபடும் பத்திரபதிவுகளை ரத்து செய்ய பதிவுத்துறைதலைவர் பிறப்பித்த சுற்றறிக்கை. Circular No.67, dated 03.11.2011,W. P. No. 16747 / 2015, நாள். 20-07-2015, உயர்நீதிமன்றம், சென்னை


மோசடியாண ஆவணங்களை கொண்டு பதிவு செய்யபடும் பத்திரபதிவுகளை ரத்து செய்ய பதிவுத்துறைதலைவர் பிறப்பித்த சுற்றறிக்கை. Circular No.67, dated 03.11.2011 (C.No.52338/C1/2011) பத்திரப்பதிவு துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண். 67 / 03-11-2011-ன் படி, மோசடிப் பத்திரங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு, உயர்நீதிமன்றம், சென்னை, W. P. No. 16747 / 2015, நாள். 20-07-2015. நிலமோசடியில் ஈடுபடுபவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், போலி பத்திரங்களை ரத்து செய்யவும், பத்திர பதிவுத் துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நில மோசடியால் பாதித்தவர்கள், பத்திர பதிவு அலுவலகத்தில் புகார் அளித்தாலும், பெரிதாக எதுவும் நடந்து விடாது. விசாரணை நடத்தும் பத்திர பதிவுத் துறை அதிகாரிகள், அனைத்து ஆவணங்களை சரிபாார்த்து, போலியானவை என, தெரிந்தும், பாதித்தவர்கள் பக்கம் இருப்பதில்லை. 'போலி பத்திர பதிவை நீக்க, தங்களுக்கு அதிகாரம் இல்லை. சிவில் கோர்ட்டிற்கு சென்று உத்தரவை பெற்று வாருங்கள்' என்று கைகழுவி விடுவர். காவல் துறை அதிகாரிகளும் நில மோசடியில் ஈடுபடுவர்கள் மீது எப்.ஐ.ஆர் போடுவதில்லை. இந்த பழங்கால நடைமுறைகள் களையப்பட்டு போலி பத்திரங்களை நீக்க, பத்திர பதிவு துறைக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் அண்மையில் நடந்த சிவில் வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை எப்படி இதன்படி, இனி, போலி பத்திரம் குறித்து புகார் எழுந்தால் மாவட்ட பதிவாளர் நேரடியாக விசாரிப்பார். இரு தரப்பின ருக்கும் சம்மன் கொடுக்கப்படும். இரண்டு தரப்பினரும் நேரில் ஆஜரானதும், அந்தந்த பகுதியில் உள்ள வி.ஏ.ஓ., சர்வேயர் உதவியுடன் சொத்து பத்திர ஆவணம் ஆராயப்படும். இரண்டு மாதங்களுக்குள்ளாகவே இந்த விசாரணை முடிக்கப்படும். ஆவணம் போலியானது என தெரிந்தால் போலி பத்திரம் ரத்து செய்யப்படும். அத்துடன் நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி எப்.ஐ.ஆர்., பதிய வேண்டும் என, காவல் துறைக்கு, துறை ரீதியாக பரிந்துரை செய்யப்படும். இது தொடர்பாக, சார் பதிவாளர் பத்திர பதிவு அலுவலகங் களில் தனி ஆவணங்கள் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

1 comment: