11/03/2016

5095 - இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 19, 21 மற்றும் இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 101 –இன் கீழ் தன்னிலை விளக்கம் மற்றும் கு. வி. மு. ச. 1973 பிரிவு 2(4) மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு 28(1) இன் கீழ் முன் அறிவிப்பு, நன்றி ஐயா. சட்ட ராஜசேகரன்

The deputy GNERAL Manager sbi coimbatore அவர்கள் முன்னிலையில்
S.ராஜசேகரன் (வயது 40).த/பெ.சிவனாண்டி
மாநில பொது செயலாளர் Law Foundation Reg.No -26/2010
68,பிள்ளையார் கோவில் தெரு
குப்பிநாயக்கன் பட்டி,
போடிநாயக்கனூர்-625513
தேனி மாவட்டம் செல்லிடபேசி 
9842277232, sivam7475@gmail.com – மனுதாரர்/ தகவல் தருபவர்

எதிர்
The Deputy General Manager,
State Bank of India, Administrative Unit,
Network-2/Kurinji Complex,
State Bank Road,
Coimbatore - எதிர்மனுதாரர்

இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 19, 21 மற்றும் இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 101 –இன் கீழ் தன்னிலை விளக்கம் மற்றும் குற்ற விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 2(4) மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு 28(1) இன் கீழ் முன் அறிவிப்பு …..
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா, போடிநாயக்கனூர் அஞ்சல், குப்பிநாயக்கன்பட்டி,68,பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் S.ராஜசேகரன் த/பெ. V.சிவனாண்டி, (வயது 39), இந்து, ஆகிய நான் இந்திய சாட்சிய சட்டம் 1872 – இன் பிரிவு 70 - இன் கீழ் ஏற்புரை செய்து, இந்திய சாட்சிய சட்டம் 1872 – இன் பிரிவு 57(1) படி நாட்டில் அமலிலுள்ள சட்டங்களை நீதிமுறையில் கவனத்தில் எந்த வழக்கிறகும் குந்தகமின்றி தங்கள் கடிதத்தில் Geetha.S W/o Shyam. P.R.,No.202, Nitya Enclave,M.T.P.Road,Kavundanpalayam, Coimbatore: 641 030 Mob:9677941959 Email:gee_geko@yahoo.com நபருக்காக விளக்கம் கோரி தாக்கல் செய்வது யாதெனில்,
1. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 51அ(ஓ)-இன் கடமையாக இந்த பதில்மனு சமர்பிக்கப்படுகிறது.
2.ஒரு குற்றம் நடக்க இருக்கிறது என்பதை தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பும் அதற்கான சட்டபடியான வழிகளை கையாள வேண்டிய கடமையும்,அதுபற்றி தகவல் தெரிந்தவர்கள் சட்டபடி செயல்படாமல் இருப்பது இந்திய தண்டனைச் சட்டம் 1860-இன் பிரிவு 2-இன் கீழ் குற்றமாகும் அதன் அடிப்படையில் இந்த பதில் மனுசமர்பிக்கப்படுகிறது.
3. இந்திய அரசியலமைப்பு 1950 கோட்பாடு 19(1) - இன் கீழ் வழங்கிய அடிப்படை உரிமை மற்றும் இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடுகள் 29(1)மற்றும் 350-இல் தமிழில்இம்மனுசமர்பிக்கப்படுகிறது. 
4.இந்திய அரசமைப்பு 1950 - இன் கோட்பாடு 375-இன் படி “இந்திய அரசமைப்பில் விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளுக்கு கட்டுபட்டு உரிமையியல் குற்றவியல் மற்றும் வருவாய்த்துறை ஆகிவற்றிற்கான அதிகாரவரம்புள்ள நீதிமன்றங்களும் மற்றும் நீதித்துறை செயல்துறை நிர்வாகத்துறை அலுவலர்களும் அவர்களுடைய அலுவல்களைத் தொடர்ந்து நடத்தி வரவேண்டும்” என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
.
5.மாண்பமை உச்சநீதிமன்றம், “நீதிபதிகள் இடமாற்ற வழக்கின் போது, ஏழு நீதிபதிகள் குழுவின் தீர்ப்பில் வறுமை அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் நீதிமன்றத்தை அணுக முடியாதவர் குறையை களையக்கோரி, நேரடியான பாதிப்புக்கு ஆளாகாதவர் நீதிமன்றத்தை அணுக முடியுமா என்ற விவாதத்தை தீர்த்து வைத்தது. இத்தகையோரது சட்டப்பூரவமான அல்லது அரசமைப்பு சட்ட உரிமைகளை நிலை நாட்டும் பொருட்டு போதுமான ஈடுபாடு கொண்ட எந்த ஒரு பொதுமனிதனும் ஒரு சாதாரண அஞ்சலட்டையின் மூலமாக கூட நீதிமன்றத்தை நாடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது" (எஸ்.பி.குப்தா மற்றும் ஏனையோர் எதிர் குடியரசுத்தலைவர் மற்றும் ஏனையோர் (ஏ.ஐ.ஆர் 1982 எஸ்சி 149) என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்..

6.தங்களுடைய வங்கியில் மேற்படி கீதா அவர்கள் கார் Car Loan No. 32829046016 for Rs 8,00,000 (Rupees Eight lakhs only) 2013 முதல் கடன் கொள்முதல் ஒப்பந்தத்தில் (Skoda Rapid) கார் வாங்கியுள்ளார் கடன் தவணைகள் கடந்த மூன்று வருடங்களாக முறையாக செலுத்தி வந்துள்ளார் கடந்த வருடம் 2015 மே, ஜூன் மாதம் தவணை ரூபாய் 28000(இருபத்தெட்டாயிரம்) மட்டும் பாக்கியுள்ள நிலையில் பேங்க் மேனேஜர் அவர்களிடம் நேரடியாக தவணையை கட்ட ஜூன் மாதம் 10 ந்தேதி டைம் கேட்டுள்ளார். அவரும் சம்மதித்துள்ளார். இந்நிலையில் எஸ் பி ஐ ரெகவர் ஏஜெண்ட் என்று கூறி கொண்டு Mr. Gunaseelan Mobile No.+918903953376, Sri Vari Buisness Consultants India Pvt Ltd No 411 A 1st Floor, Bharathiar Road, Sidhapudur, Coimbatore – 641044 திரு.ஷியாம் அவர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் பேசியதுடன் உங்கள் காரை “ சீஸ் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்துவிடுவோம் மேலும் சிவில் வழக்கு போட்டு உங்கள் மீது லட்சக்கணக்கில் பணம் ரிகவரி செய்துவிடுவோம் என்றும் தவணை கட்டவில்லை என்றால் உங்களை அசிங்கபடுத்தி விடுவோம்” என்று மிரட்டினார்கள் என்றும் மேற்படி மிரட்டல் சம்பவம் சம்பந்தமாக 08-06-2015 அன்று The Deputy General Manager ஆகிய உங்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
7. இந்நிலையில் கடந்த 20-02-2016 அன்று வீட்டிலிருந்த காரை அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத குண்டர்கள் மூலம் திருடி சென்று, தங்கள் வங்கி கிளையில் நிறுத்தி வைத்துள்ளதாகவும் மேற்படி சம்பவம் தொடர்பாக வங்கி மேலாளர் அவர்களிடம் மூன்று தவணைகள் கட்ட தயார் நிலையில் இருந்தபோதும் கிளை மேலாளர் அவர்கள்,” நீங்க வாகன கடன் முழுவதும் கட்டினால் தான் கரை எடுத்தசெல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார். மேலும் காரை பார்வையிட்டபோது கார் முன் பக்கம், பக்கவாட்டு பகுதி அனைத்திலும் சேதம் சுமார் 100000(ஒரு லட்சம்) ஆகியிருக்கிறது பற்றி புகாரும் வங்கி மேலாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீதா அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்க கார் சாவியை தரவும் இல்லையென்றால் கரை உடைத்து டுப்ளிக்கேட் சாவி 75000 (எழுபத்தைந்தாயிரம்)செலவில் போட்டுக்கொள்வோம். அதுவும் உங்கள் கடன் கொள்முதல் கணக்கில் சேர்த்துக்கொள்வேம் என்று மிரட்டுவதாகவும், மேற்படி விசயமானது சட்டம் மற்றும் நியாயத்திற்கு புறம்பானது என்பதோடு நுகர்வோர் கீதா அவர்களுக்கு வீண்தொல்லையும், மனதில் பீதியையும் ஏற்படுத்த வேண்டும் என்ற அற்ப நோக்கில் வேண்டுமென்றே தெரிந்தே செய்தது. மேற்படி சட்டவிரோத செயல் குறித்து எங்கள் அமைப்பிற்கு உங்கள் வங்கி மீது தக்க நடவடிக்கை எடுத்து அவருடைய காரை மீட்டுத்தருமாறு புகார் தெரிவித்துள்ளார்.

8. இந்திய ஒப்பந்த சட்டம் 1872 பிரிவு 10-இன் படி கடன் கொள்முதல் ஒப்பந்தம் முடிய 48 மாதங்கள் உள்ள நிலையில் சட்டவிரோதமாகவும் இந்திய உச்ச நீதிமன்றம் 2007SCCLCOM204 CIVIL APPEAL NO:267 /2007 MANAGER ICICI BANK VS PRAKASH KAUR என்ற வழக்கில் சட்டபூர்வமான முறையின்றி குண்டர்கள் பயன்படுத்தி வகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது உத்திரவுக்கு மீறி சட்ட விரோதாமாக வழுக்கட்டாயமாக கீதா அவர்களின் காரை திருடி சென்றது இது அரசமைப்பு 1950 கோட்பாடு 19 மற்றும் 14, 21க்கு எதிரானது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
9. National Consumer Disputes Redressal REVISION PETITION NO. 737 OF 2005
Citicorp Maruti Finance Ltd. vs S. Vijayalaxmi on 27 July, 2007http://164.100.72.12/ncdrcrep/judgement/00RP73705.htm 
வழக்கில் சட்டபூர்வமான முறைகளின்றி சட்ட விரோதமாக பறிமுதல் செய்த வாகனத்திற்கு இழப்பீடு தொகை வழங்க உத்திரவிட்டது. மேலும் வாகன கடன் கொள்முதல் ஒப்பந்த விதிமுறைகள் பற்றி தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது இந்த வழக்கின் தீர்ப்புக்கு விரோதமாக திருமதி கீதா அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளீர்கள் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். 
10.மேற்கண்ட சட்ட விரோத செயலால் மனவேதனை அடைந்து கீதா அவர்கள் கடந்த ஒரு மாதமாகவும் இன்று வரை வாடகை கார் எடுத்து அவருடைய பணிகளை பார்த்து வருகிறார் என்றும் வாடகை கார் எடுத்த விதத்தில் அவருக்கு 2000X30 = 60000 ( அறுபதாயிரம் ) செலவாகியுள்ளது என்றும் அவருடைய சொந்த வாகனம் இருந்தும் வாடகை காரில் வெளியே செல்ல வேண்டிய நிலையை உறுவாக்கியுள்ளனர் என்றும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். கடந்த ஜூன் மாதம் 2015 முதல் வங்கியில் இருந்து குண்டர்கள் அடங்கிய குழு தொடந்து கீதா அவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினரையும் அவதூறாகவும் ஆபாசமாகவும் கொலை மிரட்டல் மற்றும் காரை பறிமுதல் செய்திருக்கிறார்கள், அவர்களின் இச்செயல் ரிசர்வ் பேங்க் ஆப் இந்திய விதிமுறைகள் படி. “வங்கிகளின் கடன்வசூல் முகவர்கள் – வரைவு விதிமுறைகள்” (http://www.rbi.org.in/scripts/NotificationUser.aspx…) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளில், 
1. கடன் வசூல் நடவடிக்கைகளில் உரிய கவனம், 
2. வசூல் முகவர்கள் குறிப்பிட்ட தொலைபேசி எண்களில் இருந்து மட்டுமே பேசவேண்டும், 
3. கடன் வசூல் நடைமுறையில் உள்ள குறைகள் குறித்து புகார் தெரிவிக்க உரிய அமைப்பு ஏற்படுத்த வேண்டும், 
4. கடன் வசூல் முகவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.” எதிராக செயல்பட்டுகொண்டிருக்கிறார்கள் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் இச்செயல் இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 294(ஏ),506(1) 378,486 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்குறிய குற்றமாகும் என்பதையும் SBI CAR Loan வாகன கடன் கொள்முதல் ஒப்பந்த வட்டி வீதம் ரிசர்வ் வங்கி விதித்த வட்டி விகிதத்தைவிட அதிகம் என்பதையும் தமிழ் நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு தடுப்பு சட்டம்(கந்துவட்டி ஒழிப்பு சட்டம்) 2003 பிரிவு 3-இன் படி 100க்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதம் 2% மேல் வசூல் செய்யும் வட்டிகள் வரம்பிகந்த வட்டி எனப்படும். வரம்பிகந்த வட்டி வசூல் செய்யும் நபர்கள் மீது மேற்படி சட்டம் 4-இன் படி மூன்றாண்டுகள் மற்றும் 3000 அபராதம் விதிக்கப்படும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்

11. மேற்கண்ட சட்டவிரோத செயல்கள் குறித்து STATE BANK OF INDIA மீது கீதா அவர்கள் குற்ற விசாரணை முறை சட்டம் 1973 (CRPC1973) பிரிவு 154(1)இன் கீழ் காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம்(IPC) 1860 பிரிவு 294(ஏ),506(1) 378,486 ஆகிய பிரிவுகளின் கீழ் புகார் கொடுக்க இருக்கிறார் என்பதையும் கீதா அவர்களுக்கு ஏற்பட்ட மன உளச்சல் மற்றும் சேவைகுறைபாடுக்கு நஷ்ட ஈடு ரூபாய் 5,00,000 (ஐந்து லட்சம் மட்டும் ) கோரி கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு 12 –இன் கீழ் வழக்கு தாக்கல் செய்யவும். ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வழங்கிய STATE BANK OF INDIA க்கு வழங்கிய வங்கி சாரா நிதி நிறுவனத்திற்கான(NBFC) (RBI ACT1934 Sec 45 l A)அனுமதியை ரத்து செய்யவும் புகார் கொடுக்கப்படும் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

எனவே இந்த நோட்டீஸ் கண்ட ஒரு வாரத்திற்குள் மேற்படி காரை கீதா அவர்களிடம் ஒப்படைக்கவும் தவறும் பட்சத்தில் குற்ற விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 200 –இன் கீழ் இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவுகள்294(ஏ),506(1) 378,486 மற்றும் தனி நபர் வழக்கும் உரிமையியல் விசாரணைமுறை சட்டம் 1903 கட்டளை 4 விதி 1-இன் கீழ் மற்றும் குறித்தவகைப் பரிகாரம் சட்டம் 1963 மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு 12 –இன் கீழ் வழக்கு இன் கீழ் வழக்கு தொடர்ந்து தக்க நிவாரணம் பெறப்படும் என்பதையும் இது மனுதாரரின் இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 97-இன் கீழ் தற்காப்பு உரிமை என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். 
இந்த நோட்டீஸ்க்கு தாங்கள் பதில் தெரிவிக்காமல் போனாலும் அல்லது பதில் தெரிவிக்காமல் அலட்சிய படுத்தினாலும் இந்திய சாட்சிய சட்டம் 1872-இன் பிரிவு 106 இன்கீழ் இதில் உள்ள சங்கதிகளை ஒத்துக்கொண்டதாகும் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.


ஒப்பம்,
S.Rajasekaran
11/03/2016


தக்க நடவடிக்கை எடுக்கவும்,பதிலுக்காகவும் நகல் சமர்பிக்கப்படுகிறது:
1.குற்ற விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 2(7)இன் கீழ் தலைமை குற்றவியல் நடுவர் அவர்கள் ஒருங்கினைந்த நீதிமன்றங்கள் வளாகம் கோயம்புத்தூர்
2.இந்திய அரசமைப்பு 1950 கோட்படு 226 –இன் கீழ் நடவடிக்கைகளுக்காக தபால் மூலம் சார்பு திருமிகு.தலைமை நீதியரசர் அவர்கள் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் சென்னை

3.COMPANY LAW BOARD,Southern Region/Addl. Principal Bench Company Law Board, Shastri Bhawan, Block-1, 26, Haddows Road, Chennai.
dgm.customer@sbi.co.in , agmcppc.lhoche@sbi.co.in, contactcentre@sbi.co.in

No comments:

Post a comment