Monday, April 18, 2016

5244 - திருமிகு. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில்...நன்றி ஐயா. சட்ட ராஜசேகரன்

திருமிகு. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில்...
S.ராஜசேகரன் (வயது 40) த/பெ.சிவனாண்டி
மாநில பொதுசெயலாளர்,
லா பவுண்டேசன் பதிவு எண்:26/2010
68,பிள்ளையார் கோவில் தெரு
குப்பிநாயக்கன்பட்டி,
போடிநாயக்கனூர்-625513
தேனி மாவட்டம் – மனுதாரர்/தகவல்தருபவர்

திரு.தங்கவேல் மக்கள் தொடர்பு அலுவலர்
செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம்,
தேனி - 625531
தேனிமாவட்டம்

திரு மகேந்திரபூபதி உதவிமக்கள் தொடர்பு அலுவலர் 
செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் 
தேனி - 625531
தேனி மாவட்டம் – எதிர்மனுதாரர்கள்

இந்திய அரசமைப்பு 1950 – இன் கோட்பாடு 19(1),21மற்றும் குற்றவிசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 2(4) மற்றும் தமிழ் நாடு அரசுபணியாளர்கள்( ஒழுங்கு & மேல்முறையீடு) விதிகள் 1973 பிரிவு 17(b) – இன் கீழ் நடவடிக்கை எடுக்க கோரும் மனு....... 

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா, போடிநாயக்கனூர் அஞ்சல், குப்பிநாயக்கன்பட்டி,68,பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் S.ராஜசேகரன் த/பெ. V.சிவனாண்டி, (வயது 40), இந்து, ஆகிய நான் இந்திய சாட்சிய சட்டம் 1872 – இன் பிரிவு 70 - இன் கீழ் ஏற்புரை செய்து, இந்திய சாட்சிய சட்டம் 1872 – இன் பிரிவு 57(1) படி நாட்டில் அமலிலுள்ள சட்டங்களை நீதிமுறையில் கவனத்தில் கொண்டு எந்த வழக்கிற்கும் குந்தகமின்றி தகவலாக இம்மனு தாக்கல் செய்வது யாதெனில்

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 51அ(ஓ)-இன் கடமையாக இம்மனு சமர்பிக்கப்படுகிறது.
1.ஒரு குற்றம் நடக்க இருக்கிறது என்பதை தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பும் அதற்கான சட்டபடியான வழிகளை கையாள வேண்டிய கடமையும்,அதுபற்றி தகவல் தெரிந்தவர்கள் சட்டபடி செயல்படாமல் இருப்பதும் இந்திய தண்டனைச் சட்டம் 1860-இன் பிரிவு 2-இன் கீழ் குற்றமாகும். மேலும் மாண்பமை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில்“ ‘ நீதிபதிகள் இடமாற்ற வழக்கின், ஏழு நீதிபதிகள் குழுவின் தீர்ப்பு, “வறுமை அல்லது வேறு ஏதாவது காரணத்தால் நீதிமன்றத்தை அணுக முடியாதவரது குறையை களையைக்கோரி, நேரடியான பாதிப்புக்கு ஆளாகாதவர் நீதிமன்றத்தை அணுக முடியுமா”, என்ற விவாதத்தை தீர்த்துவைத்தது. இத்தகையோரது அடிப்படை சட்டபூர்வமான அல்லது அரசமைப்பு சட்ட உரிமைகளை நிலை நாட்டும் பொருட்டு போதுமான ஈடுபாடு கொண்ட எந்த ஒரு பொது மனிதனும் ஒரு அஞ்சல் அட்டையின் மூலமாக கூட நீதிமன்றத்தை நாடலாம் ‘(எஸ்.பி.குப்தா மற்றும் ஏனையோர் எதிர் குடியரசுத்தலைவர் மற்றும் ஏனையோர்,AIR 1982 SC 149) என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் இம்மனு பணிவுடன் சமர்பிக்கப்படுகிறது.
2.குற்றவிசாரணை நடமுறை சட்டம் 1973 பிரிவு 36-இன் படி தமது வட்டார வரம்பிற்குள் எவ்விதமான குற்றமும் நடைபெறாமல் தடுக்கவேண்டியதும், நடைபெற்ற குற்றத்திற்கு தண்டனை வாங்கி கொடுப்பதும் தங்களின் கடமை என்பதால் இம்மனு தங்களிடம் சமர்பிக்கப்படுகிறது.
3.இந்திய அரசமைப்பு 1950 - இன் கோட்பாடு 375-இன் படி “இந்திய அரசமைப்பில் விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளுக்கு கட்டுபட்டு உரிமையியல் குற்றவியல் மற்றும் வருவாய்த்துறை ஆகிவற்றிற்கான அதிகாரவரம்புள்ள நீதிமன்றங்களும் மற்றும் நீதித்துறை, செயல்துறை, நிர்வாகத்துறை அலுவலர்களும் அவர்களுடைய அலுவல்களைத் தொடர்ந்து நடத்தி வரவேண்டும்” என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
4.மத்திய அரசாங்கம் அனுமதி மற்றும் THE REGISTRAR OF NEWSPAPERS FOR INDIA அவர்களின் அனுமதி, PRESS AND REGISTRATION ACT 1867 SECTION 3 இன் படி அங்கீகாரம் பெற்ற தமிழ் அஞ்சல் தினசரி பத்திரிகையில் தேனி மாவட்ட புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். கடந்த வாரம் தேனி மாவட்ட முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகத்திலிருந்து ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அதில் தேனி மாவட்டம் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் என்று சுமார் 80 பேர் கொண்ட பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தான் உண்மையான பத்திரிகையாளர்கள் என்வே இவர்களுக்கு மட்டும் தான் லஞ்சம் மற்றும் மாதம்மாதம் மாமூல், மற்றும் செய்தி,விளம்பரம் வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக தேனி மாவட்டம் முழுவதும் உள்ள பத்திரிகை நிருபர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் அரசு அலுவலர்கள் பற்றி செய்தி வராமல் இருக்க நிருபர்களுக்கு மாமூல் (லஞ்சம்) தரவேண்டும் என்று லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதாகவும், மீறி செய்தி ஏதாவது வந்தால் எதிர்மனுதாரர்கள் இருவரும் , “அரசு ஊழியரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் இந்த செய்தி பற்றி விளக்கம் கேட்டிருக்கிறார் உங்களை பற்றி நல்ல விதமாக அறிக்கை அளிக்கவேண்டும்,” என பணம் பறிப்பதாக அரசு ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் மாவட்ட கல்வி அலுவலர் வாசு அவர்களை பற்றி சீனியர் ரிப்போர்ட்டர் மாத இதழில் செய்தி வெளியிட்ட கம்பத்தை சேர்ந்த ஷாகுல்ஹமீது என்ற நிருபரை உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மகேந்திர பூபதி அவர்கள்,” ஷாகுல் இது தான் உனக்கு லாஸ்ட் இனி அதிகாரி பற்றி செய்தி போட்டால் உன்னை ஒழித்துகட்டிவிடுவேன் மேலும் பத்திரிகை தொழில் செய்யவிடாமல் ஆக்கிவிடுவேன் இனி இந்த அலுவலகம் பக்கம் வரக்கூடாதுனு” மிரட்டியிருக்கிறார் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்
.
5.அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையில் பணியாற்றும் மாவட்ட செய்தியாளர் மற்றும் புகைப்படகலைஞர் ஆகியோருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் அடையாள அட்டை மற்றும் இலவச பஸ்பாஸ் வழங்கக்கோரி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கடிதம் வழங்கியும் இது நாள் வரை வழங்க மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அவர்கள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் நேரில் சென்று கேட்கும் போது உங்களுக்கு வழங்க முடியாது என்று சொல்லி இனி இது சம்பந்தமாக இந்த அலுவலகத்திற்கு வரக்கூடாது என்று மனுதாரரை எதிர்மனுதாரர்கள் மிரட்டுகிறார்கள் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

6.எதிர்மனுதாரர்கள் பத்திரிகையாளர் என்று அவர்களுடைய பேச்சை கேட்கிற மற்றும் அவர் சொல்லுகிற செய்தியை மட்டும் லஞ்சம் கொடுத்து வெளியிடுகின்றவர்கள் மட்டுமே பத்திரிகையாளர்கள் என்றும் மற்ற THE REGISTRAR OF NEWSPAPERS FOR INDIA அவர்களின் அனுமதி, PRESS AND REGISTRATION ACT 1867 SECTION 3 இன்படி அனுமதி பெற்ற பத்திரிகையாளர் எல்லாரையும் போலி நிருபர் என்ற மாய தோற்றம் உருவாக்கி மற்றும் காவல் துறை அதிகாரிகளை தூண்டிவிட்டு நிருபர்கள் வாகன மீது பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது ஒட்டினால் மக்கள் முன்னிலையில் மிரட்டி கிழித்து நிருபர்கள் மீது கெட்டபெயர் ஏற்படுத்துவது, நிருபர்கள் மீது போலி நிருபர் என்று பொய் வழக்கு போடப்போவதாக மிரட்டுவது,
இந்த 2016 சட்டமன்ற தேர்தலில் பணம் கொடுத்து பொய்செய்தி வெளியிட வைப்பது பொதுமக்களுக்கு போட்டியிடும் வேட்பாளர் மீது நல்ல பெயர் இருப்பது போன்று செய்தி வெளியிடுவது, அவர்களுக்கு பிடிக்காத சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது அவதூறு மற்றும் பொய்யான செய்திகள் வெளியிட செய்வது,அவ்வாறு செய்தி வெளீயிட மறுக்கும் செய்தியாளர்கள் மீது பொய் வழக்கு போடுவது என பத்திரிகையாளர் மீது ஜனநாய கடமையை செய்யவிடாமல் தடுக்கும் வேலையை செய்யும் எதிர்மனுதாரர்களின் செயல் இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 19இன் வழங்கிய எழுத்துரிமை,கருத்துசொல்லும் உரிமையை பறிப்பதாகும் மேலும் இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 14,16 இன் படி சட்டத்தின் மும் அனைவரும் சமம் என்ற கோட்பாடுக்கு விரோதமாகும், என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
7.எதிர்மனுதாரர்களின் மேற்கண்ட செயல்கள் எல்லாம் தமிழ்நாடு அரசுபணியாளர்கள் (ஒழுங்கு மற்றும் நடத்தை விதிகள்) 1973 விதி 20 மற்றும் விதி 19 க்கு விரோதமானது மற்றும் இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவுகள் 166,167,193, கீழ் தண்டனைக்குறிய மற்றும் தமிழ்நாடு அரசுபணியாளர்கள் (ஒழுங்கு மற்றும் நடத்தை விதிகள்) 1973 விதி 17(B)இன் கீழ் தண்டனை வழங்கக்கூடிய குற்றம் என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
எனவே மரியாதைக்குரிய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இப்புகார் மனுவை பரிசீலனை செய்து,
1. சட்டவிரோதமாகசெயல்பட்ட தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு மாறாக செயல்படும் திரு.தங்கவேல் மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மகேந்திரபூபதி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அவர்கள் மீது தமிழ்நாடு அரசுபணியாளர்கள் ( ஒழுங்கு & மேல்முறையீடு) விதிகள் 1973பிரிவு 17(b) – இன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கவும்,
2.PRESS AND REGISTRATION ACT 1867 SECTION 3 – இன்படி அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஒரேமாதிரி நடத்தவேண்டுமெனவும் வருங்காலங்களில் இது போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறாவண்ணம் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு தக்க உத்திரவு பிறப்பித்தும் மக்கள் நலப்பணியில் பத்திரிகையாளர்கள் அச்சமின்றி சுயசார்பில் ஜனநாயக கடமையை ஆற்றிட தக்க நடவடிக்க எடுக்குமாறும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
தங்களின் உண்மையுள்ள
S.Rajasekaran
15/04/16

தக்க நடவடிக்கை எடுக்க நகல் சமர்பிக்கப்படுகிறது
1.திருமிகு.தமிழ்நாடு மாநில தேர்தல் அலுவலர் அவர்கள், சென்னை-

No comments:

Post a Comment