Wednesday, June 08, 2016

5441 - குற்றம் சாட்டப்பட்டவருக்கே, குறைதீர் மனு விசாரணைக்கு அனுப்பி வைத்தது குறித்து, மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் மாதிரி. நன்றி ஐயா. Thindal Subramanian Perumal

மாதிரி மனு.
. .
பதிவுத் தபால் ஒப்புகை அட்டையுடன்.
.
அனுப்புதல்:

திரு. பெ. சுப்ரமணியன் த / பெ பெருமாள்
.6, ரோஜா கார்டன், திண்டல், ஈரோடு - 638012.
.
பெறுதல்:
.
ஈரோடு மாவட்ட ஆட்சியர்
ஆட்சியர் அலுவலகம்,
பெருந்துறை ரோடு,
ஈரோடு.
மதிப்புக்குரிய ஐயா, வணக்கம்.
பொருள்:
.
1. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கும் புகார் மனு குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கே ஏன் விசாரணைக்கு அனுப்பப்படுகிறது ? எந்த சட்டப்படி அனுப்பப்படுகிறது ? என்பது குறித்து விளக்கம் அளிக்கக் கோருதல் ----- தொடர்பாக.
. ************
.
1. குற்றம் செய்தவரே தான் செய்த குற்றம் குறித்து தானே விசாரிப்பது சர்வாதிகாரம் ஆகும் மற்றும் அநீதியாகும்.
.
2. இந்திய அரசியல் சாசனம் யாருக்கும் எதேச்சதிகாரம் அளிக்கவில்லை. இப்படியிருக்க, அரசு அலுவலர் தான் செய்த குற்றம் குறித்து தானே விசாரிக்கும்படி செய்ய தாங்கள் பயன்படுத்தும் சட்டம் எது ? என்று தெரிவிக்க வேண்டுகிறேன்.
.
3. அரசியல் சாசனத்திற்கு எதிராக மாவட்ட ஆட்சியர் செயல்படுவதாக நாங்கள் ஏன் கருதக் கூடாது ? என்பதற்கான காரணங்களை தெரிவிக்கும்படி பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.
.
இப்படிக்கு ,
தங்கள் உண்மை உள்ள ,
............................................
பெ. சுப்ரமணியன் ( கையொப்பம் )
.
இடம்:
.
தேதி.:

No comments:

Post a Comment