பதிவுத் தபால் ஒப்புகை அட்டையுடன்.
அறிவிப்பு எண் ௦/ 2016 / P.M. / போலீஸ்..
7 ஏழு தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு. .
ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் மலையம் பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் ஆகிய தங்களுக்கு அளிக்கும் ஏழு தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு இது ஆகும். .
1. பணியாற்றும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? என்ற வரைமுறைகளை மீறிச் செயல்பட்டு எனக்கு தீங்கு செய்துவருகிறீர்கள். காவல் நிலையத்தில் மனுக் கொடுத்தால் வங்க மறுத்து வருகிறீர்கள்..
2. தபாலில் புகார் அளிக்க கூடாது என்று சொல்லி எனது சட்டப்படியான கடமையை செய்யவிட்டாமல் மிரட்டுகிறீர்கள்.
3. F.I.R. நகல் மற்றும் C.S.R. தர மறுக்கிறீர்கள். மேலும் நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளும்படி தவறான வழி காட்டுகிறீர்கள்.
4. கு.வி.மு.ச. பிரிவு 154 (1) – ன் படி செயல்பட மறுத்து கடமையில் இருந்து வேண்டுமென்றே தவறி உள்ளீர்கள்.
5. உச்சநீதிமன்றமானது லலிதகுமாரி எதிர் உத்திரப்பிரதேச அரசு வழக்கில் அளித்த தீர்ப்பின் படியும் வழிகாட்டுத்தல் படியும் செயல்பட மாறுகிறீர்கள்.
6. நல்ல எண்ணம் இன்றி செயல்பட்டு எனக்கு மன உளைச்சல்ஏற்படுத்தி வருகிறீர்கள்.
மனித உரிமை மீறல் செய்து வருகிறீர்கள்.
மனித உரிமை மீறல் செய்து வருகிறீர்கள்.
7. .இ.த.ச. .பிரிவு 107, 108, 166-A, 217, 219 ஆகியவைகளின் படியான குற்றச் செயல் புரிந்து உள்ளீர்கள். இ.த.ச. பிரிவு 378, 441 ஆகியவைகளை ஏற்க மறுத்து TANGFDCO அதிகாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறீர்கள்.
8. இந்த அறிவிப்ப்பு கிடைத்த 7 ஏழு தினங்களுக்குள் இவ்வறிவிப்புக்கு உரிய பதிலைத் தங்கள் அளிக்க வேண்டும் என்று பணிந்து கேட்டுக் கொள்கிறேன். உரிய நடவடிக்கையை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்...
9. இந்த அறிவிப்பை தாங்கள் அலட்சியப்படுத்தினாலோ அல்லது உரிய பதில் அளிக்கவில்லை என்றாலோ இந்த அறிவிப்பில் குறிப்பிட்ட சங்கதிகளை தாங்கள் சட்டப்படி அப்படியே ஒப்புக் கொண்டதாகவே ஆகும் என்பதை பணித்து அறிவித்துக் கொள்கிறேன்.
10. மேலும், இந்த இதுவே தங்களுக்கு எதிரான தகுமுறை சன்றாவணமாகவும் மற்றும் சாட்சியமாகவும் ஆகிவிடும் என்பதைப் அறிவித்துக் கொள்கிறேன்.
. இடம் : ................................................ சட்ட அறிவிப்பு அளிப்பவர்
தேதி: ....1௦.2016.
No comments:
Post a Comment