31/03/2017

5724 - பிளான் அனுமதி பெறாத ஆஸ்பத்திரி கட்டடத்தை இடிக்க அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவு சரிதான், உயர்நீதிமன்றம் உத்தரவு, செய்தி, 31-03-2017, நன்றி ஐயா. Chandru Karur

பிளான் அனுமதி பெறாத ஆஸ்பத்திரி கட்டடத்தை இடிக்க அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவு சரிதான்: சென்னை ஐகோர்ட் ஜனவரி 2014 ல் தீர்ப்பு.
சட்ட விரோத கட்டிடத்தை அனுமதி இல்லாத கட்டிடங்களை இடிக்க நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊராட்சி செயலாளர் இடித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அரசாணை; Housing & Urban Development ( UD4-1) Department GO( ms)No.289: dated;16-10-2010.
அரசு ஊழியர் அனைவரும் ஒரு குற்றம் நடக்க இருக்கிறது என்பதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும் அதற்கான சட்டப்படியான வழிகளை கையள வேண்டிய கடமையும் அது பற்றி தகவல் தெரிந்தால் சட்டப்படி செயல்படாமல் இருப்பது இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 2- ன் படி குற்றமாகும்.
குவிமுச( Cr.P.C)1973 பிரிவு 36- ன்படி தமது வட்டார வரம்பிற்குள் எவ்விதமான குற்றமும் நடைபெறாமல் தடுக்க வேண்டியது,நடைபெற்ற குற்றத்திற்கு தண்டனை வாங்கி கொடுப்பதும் அரசு ஊழியரின் கடமையாகும்.

No comments:

Post a comment