Monday, April 17, 2017

5760 - வழக்கறிஞர் சட்டம் 1961 பிரிவு 34(1), சட்டத்திருத்தம் 14-ன் படி புகார், நன்றி ஐயா. Asthulasisah

*மாவட்ட பிரதம நீதிமன்றம் செங்கல்பட்டு முன்பாக*
*வழக்கறிஞர் சட்டம் 1961 பிரிவு 34(1)*
*சட்டத்திருத்தம் 14-ன் படி புகார்*
*D,L,S,P, No. 28 / 2017*
A.S.தசரத சா. வயது 64 இந்து
S/o A.V.சுப்பிரமணி சா
No.70. நடுத்தெரு, சேக்குப்பேட்டை.
காஞ்சிபுரம் - 631 501,
*மனுதாரர்/வாதி*
*Vs*
வழக்கறிஞர் திரு, B.இரமேஸ்குமார்
168. செங்கழுநீரோடை வீதி.
காஞ்சிபுரம் - 631 502,
*எதிர்மனுதாரர்/பிரதிவாதி*
*வழக்கறிஞர் சட்டம் 1961 பிரிவு 34(1)*
*சட்டத்திருத்தம் 14-ன் படி புகார்*
*மேன்மை தங்கிய கனம் நீதிபதி அவர்கள்*
*மாவட்ட பிரதம நீதிமன்றம் செங்கல்பட்டு முன்பாக*
ஐயா.
*பொருள்:*
OS.No.16/2015 மேற்படி வழக்கில் 11-4-2017 வாய்தா. மாவட்ட பிரதம நீதிமன்றம் ll காஞ்சிபுரம். வழக்கறிஞர் திரு, A.K.இரமேஷ் அவர்களை நியமித்துள்ளேன், வழக்கறிஞர் திரு, B.இரமேஸ்குமார் அவர்களுக்கு அளித்த அறிவிப்பு நாள் 9-1-2017 க்கு எந்த பரிகாரமும் கிடைக்கவில்லை, எனவே. வழக்கறிஞர் திரு, B.இரமேஸ்குமார் அவர்கள் மீது வழக்கறிஞர் சட்டம் 1961 பிரிவு 34 (1) சட்டத்திருத்தம் 14-ன் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் சமர்ப்பித்த புகார் மனு,
மேன்மை தங்கிய கனம் நீதிபதி மாவட்ட பிரதம நீதிமன்றம் செங்கல்பட்டு அவர்களை வணங்கி வணக்கத்தை தெரிவித்து பணிந்து A.S.தசரத சா அளிக்கும் புகார் மனு,
வழக்கறிஞர் திரு, B.இரமேஸ்குமார் அவர்களுக்கு அறிவிப்பின் வழியே தெரிவித்தது என்னவென்றால்.
வழக்கறிஞர் திரு, B.இரமேஸ்குமார் ஆகிய உங்களுக்கு A.S.தசரத சா அகிய நான் இந்த அறிவிப்பின் வழியே தெரிவிப்பது என்னவென்றால்
மாவட்ட பிரதம நீதிமன்றம் ll காஞ்சிபுரம் OS.No.16/2015 மேற்படி வழக்கில் 3வது பிரதிவாதியாக A.S.தசரத சா மற்றும் 1வது பிரதிவாதியாக A.S.கணுபா சா சேர்க்கப்பட்டு உள்ளோம்,
மேற்படி வழக்கில் (வழக்கறிஞர் திரு, B.இரமேஸ்குமார்) ஆகிய உங்களை நியமித்து 11-3-2015 அன்று வக்காலத்து தாக்கல் செய்தேன்,
11-3-2015 நாள் அன்று நீதிமன்றத்திற்கு மேற்படி வழக்கிற்காக நீங்கள் வருகை தந்தீர்கள், பின்வரும் வாய்தாக்கள் எதிலும் வருகை தரவில்லை,
திரு, A.S.கணுபா சா மகன் G.நல்லா சா (எ) ஜெயராம் சா மூலமாக வழக்கறிஞர் கட்டணம் ரூபாய் 20.000/- (இருபது ஆயிரம்) கொடுத்தேன்,
உங்கள் அலுவலகத்திற்கு பல முறை வந்தேன், சந்தித்தபோது வழக்கில் சமாதானமாக போகவும் என கூறினீர்கள்,
வழக்கை நீங்கள் நடத்த வேண்டுமெனவும். சமாதானத்தில் ஈடுபடும் செயலை என் தம்பி வழக்கில் 4வது பிரதிவாதி A.S.துளசி சா பார்த்துக் கொள்வார் என கூறினேன்,
நான் வழக்கை நடத்த உள்ளதாகவும். நான் இதற்கென தங்களை நியமித்து உள்ளேன் என கண்டிப்புடன் தங்கள் இடத்தில் கூறியும். வழக்கை நடத்தாமல். எந்த வாய்தாவிலும் நீதிமன்றத்தில் வழக்கில் வருகை ஆகாமலும் உள்நோக்கத்துடன் தட்டிக்கழித்து வந்தீர்கள் இதனால் நான் மன உளைச்சளுக்கு ஆளானேன்,
மேற்படி வழக்கை என் தம்பி 4வது பிரதிவாதி A.S.துளசி சா Party in person ஆக வழக்கை நடத்தி வந்ததால் நீதி மன்றத்தில் என் வழக்கின் நிலை அவ்வப்போது அறிந்து கொண்டு வந்தேன்,
மீண்டும் தங்கள் அலுவலகத்திற்கு வந்து உங்களை சந்தித்தபோது வழக்கில் சமாதானத்தில் ஈடுபட்டு வழக்கை முடித்து கொள்ளவும் என கூறி என்னை அனுப்பி வைத்து விட்டீர்கள்,
தங்களால் மேற்படி வழக்கில் எனக்கு எதிரான. பாதகமான சூழ்நிலை ஏற்படும். ஏற்படுத்தும் உள்நோக்கத்துடனும் நீங்கள் நடந்து வருகின்றீர்கள் என்பதை நான் உணர்ந்தேன்,
வழக்கறிஞர் நிலை மறந்து கமிஷன் ஏஜெண்டாக மாறினீர்கள் என்பதை உணர்ந்தேன்,
1வது பிரதிவாதி A.S.கணுபா சா அவர்களை. நீங்கள் மூளை சலவை செய்து. தவறாக வழி நடத்தி இவ்வழக்கில் Ex- party ஆனால் தங்களுக்கு சாதகமான முதல் நிலை தீர்ப்பு வாங்கி தருவதாக கூறி மோசடி செய்து உள்ளீர்கள்,
26-10-2016 நாள் வாய்தாவில் Written Statement அளிக்க வேண்டும் எனவும். தவறும் பட்சத்தில் Ex-party செய்யப்படும் என எனது தம்பி A.S.துளசி சா மூலமாக அறிந்தேன்,
26-10-2016 நாள் வாய்தாவில் என் வழக்கை தற்காலிகமாக நான் ஏற்று நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன், எனவே Written Statement டை party in person ஆக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி தாக்கல் செய்து என்னை நானே என் வாழ்வாதாரத்தை காத்து கொண்டேன், நீதிமன்றத்தில் முன்னிலை பட வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டேன்,
26-10-2016ம் நாள் வாய்தாவில் நீங்கள் நீதிமன்றத்திற்கு வராததால் 1வது பிரதிவாதி A.S.கணுபா சா அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உடன் வருகை தராததால் Written Statement தாக்கல் செய்யாததால் Ex-party ஆனார்,
மாவட்ட பிரதம நீதிமன்றம் ll காஞ்சிபுரம். மேன்மை தங்கிய கனம் நீதிபதி அவர்கள் 26-10-2016 வாய்தாவில். 3வது பிரதிவாதி A.S.தசரத சா வழக்கறிஞரை நியமித்து உள்ளாரா என வினா எழுப்பினார், எனது தம்பி A.S.துளசி சா விளக்கம் அளித்தார், A.S.தசரத சா வழக்கிறஞரை நியமித்து உள்ளார், வழக்கறிஞர் சமாதானத்தில் ஈடுபட்டு வழக்கை முடித்து கொள்ளவும் என கட்டாயப்படுத்துவதாகவும், எனவே நீதிமன்றதிற்கு மதிப்பு அளித்து தற்காலிகமாக 3வது பிரதிவாதி A.S.தசரத சா Party in person ஆக Written Statement தாக்கல் செய்வதாக என் தம்பி மேன்மை தங்கிய கனம் நீதிபதி அவர்களுக்கு விளக்கம் அளித்தார்,
அதன் பின்பு எனது அண்ணன் மகன் G.ஜெயராம் சா என்னிடத்தில் நீங்கள் எனது வழக்கை ஏற்று நடத்த விருப்பம் இல்லை என்பதால் வழக்கறிஞர் வழக்கு ஏற்று நடத்த கட்டணம் ரூபாய் 20.000/- (இருபது ஆயிரம்) திருப்பி அளித்து விட்டதாகவும் கூறினார், 2-1-2017 ஆம் நாள் அன்று பணத்தை பெற்றுக் கொண்டேன்,
உங்களுக்கு நான் பணம் எத்தகைய பாக்கியும் இல்லாத நிலையில் என் வழக்கின் தேவைக்கு வேறு வழக்கறிஞரை நியமித்து கொள்ள Bar Council of India Rules மற்றும் The Advocate Act விதிகளின் படி எத்தகைய தடையும் எனக்கு இல்லை,
இதற்கு வழக்கறிஞர் திரு, A.K.இரமேஷ் அவர்களை சந்தித்து மேற்படி வழக்கை ஏற்று நடத்த வேண்டுமென கேட்டுக்கொண்டேன், மேற்படி வழக்கறிஞர் வக்காலத்தில் தங்களிடம் ஒப்புதல் கேட்டு வரும்படி உங்கள் இடத்தில் 5-1-2017 ஆம் நாள் அனுப்பி இருந்தார், ஒப்புதல் அளிக்க நீங்கள் மறுத்துவிட்டதோடு. மேற்படி வழக்கை எந்த வழக்கறிஞரும் ஏற்று நடத்த விடமாட்டேன் என என் இடத்தில் தகராறு செய்தீர்கள்,
மேற்படி வழக்கில் வழக்கறிஞர் திரு, A.K.இரமேஷ் அவர்களை வழக்கு ஏற்று நடத்த வக்காலத்து தாக்கல் செய்வதாகவும் எனது தம்பி 4வது பிரதிவாதி A.S.துளசி சா மேன்மை தங்கிய கனம் நீதிபதியின் முன்பு கூறினார், 6-1-2017 வக்காலத்து தாக்கல் செய்யப்பட்டது, மேற்படி வக்காலத்தில் வழக்கறிஞர் திரு, B.இரமேஸ்குமார் ஒப்புதல் கையொப்பம் அளிக்க மறுப்பதாகவும். மேன்மை தங்கிய கனம் நீதிபதி அவர்கள் முன் எனது தம்பி A.S.துளசி சா கூறினார், வழக்கறிஞர் திரு, A.K.இரமேஷ் அவர்கள் அடுத்து வரும் வாய்தா அன்று வழக்கில் முன்னிலைப்படுத்த வேண்டுமாய் நீதிபதி அறிவுறுத்தினார்,
மேற்படி வழக்கை நடத்தவிடாமல் பிரதிவாதிகளை தடுத்து நிறுத்திவிட்டால் இச்சொத்தினை விற்பனை செய்யும் நிலைக்கு கொண்டு வந்து விடலாம் எனவும். அதில் பல லட்சம் ரூபாய் கமிஷனாக கிடைக்கும் என்ற தங்கள் நோக்கம் எடுபடவில்லை என்ற உள்நோக்கத்தால் வழக்கறிஞர் திரு, A.K.இரமேஷ் அவர்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கின்றீர்கள், எனக்கு 20-1-2017க்குள் மாவட்ட பிரதம நீதிமன்றம் ll காஞ்சிபுரம் கட்டில் உள்ள வக்காலத்தில் ஒப்புதல் அளித்து வழக்கறிஞரின் கண்ணியத்தை தக்க வைத்துகொள்ள வேண்டுமாய் இந்த அறிவிப்பின் வழியே தங்களை கேட்டுக் கொள்கின்றேன்,
வழக்கில் நீங்கள் கவனக்குறைவாகவும். அஜாக்கிரதையாகவும். நுண்ணிய சட்ட கல்வி அறிவு இன்றி செயல்பட்டு எனக்கு ஏற்படுத்திய மனஉலைச்சலுக்காகவும். அலைச்சலுக்காகவும். எனக்கு ஏற்படுத்திய செலவினத்திற்கும் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கும் கஷ்டத்திற்கும் தங்கள் மீது நீதிமன்றத்தில் ரூபாய் 30.00.000/- (மூப்பது லட்சம்) ரூபாய் நஷ்ட ஈடு ஆக கேட்டு தக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வேன்,
நீங்கள் நுண்ணிய சட்டகல்வி அறிவு இன்றி செயல்பட்டதால். எங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் செய்பட்டதால். வக்காலத்தில் ஒப்புதல் அளிக்க மறுப்பதால் Bar Council of India Rules மற்றும் The Advocate Act ன்படி தங்கள் மீது வழக்கு தொடுத்து தாங்கள் தொடர்ந்து வழக்கறிஞராக செயல்படாமல் தகுதி இழப்புக்கு ஆவண செய்யப்படும் எனவும் கவனத்தில் கொள்ளவும்,
நீதிமன்றத்தில் தங்கள் நடவடிக்கை அனைத்தும் எனக்கு எதிராக உள்ளது, தீய உள்நோக்கத்துடன் எனது சொத்தை என்னிடத்தில் இருந்து பறிக்க மேற்படி வழக்கில் வாதியுடன் இணைந்து கூட்டு சதி செயலில் ஈடுபடுகின்றீர்கள், இத்தகைய நம்பிக்கை மோசடியை மேற்படி குற்ற செய்கைக்காக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் எனவும். இந்த அறிவிப்பின் வழியே தெரிவித்துக் கொள்கின்றேன்,
*தேவையான பரிகாரம்*
OS.No.16/2015 மேற்படி வழக்கில் 11-4-2017 வாய்தா வழக்கறிஞர் திரு, A.K.இரமேஷ் அவர்களை நியமித்து உள்ளேன், எனவே ஒப்புதல் எழுத்து பூர்வமாக வழக்கறிஞர் திரு, B.இரமேஸ்குமார் அவர்களை மாவட்ட பிரதம நீதிமன்றம் ll காஞ்சிபுரத்தில் கண்ணியத்துடன் அளித்து நடந்துகொள்ள தக்க உத்தரவினை பிறப்பிக்க வேண்டுமாய் கனம் நீதிபதி அவர்களை பணிந்து வணங்கி வேண்டிக் கொள்கின்றேன்,
*விசாரணை தேவை*
வழக்கறிஞர் திரு, B.இரமேஸ்குமார் செய்கையால் வழக்கில் என்னைப்போன்று மற்றவர்கள் பாதிக்காமல் இருக்க மற்றும் எனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும் வழக்கறிஞர் திரு, B.இரமேஸ்குமார் மீது விசாரணை கொண்டுவர வேண்டும் எனவும் விசாரணையில் வழக்கறிஞர் ஒழுங்கீனமாக செயல்பட்டு உள்ளமைக்கு வழக்கறிஞர் தொழில் பார்க்கத்தடை விதிக்க வேண்டுமாய் மேன்மை தங்கிய கனம் நீதிபதி மாவட்ட பிரதம நீதிமன்றம் செங்கல்பட்டு அவர்களை பணிந்து வணங்கி கேட்டுக் கொள்கிறேன்
மனுதாரர்
A.S.தசரத சா
எனது சார்பாக என் தம்பி A.S.துளசி சா விசாரணை நாள் அன்று வருகைதந்து ஆஜர் ஆகவும் அனுமதி அளிக்க வேண்டும்,
மனுதாரர்
A.S.தசரத சா
புகார் மனு ஏற்க. விசாரணை நடத்த கட்டணம் இருப்பின் செலுத்த தயாராக உள்ளேன்,
*வழக்கறிஞர் திரு, B.இரமேஸ்குமார் அவர் வக்காலத்து திரும்ப பெறமறுத்து விட்டார் என*
*மாவட்ட பிரதம நீதிமன்றம் ll காஞ்சிபுரம்.*
*மேன்மை தங்கிய கனம் நீதிபதி*
*உயர்திரு, G.கருணாநிதி B.Sc., M.L., அவர்கள் 11_4_2017 வாய்தா நாள் அன்று தெரிவித்தார்*
*கடமை.*
*கண்ணியம்.*
*கட்டுப்பாடு.*
*கடைபிடிக்கும் நீதிஅரசர்,*
*மனிதருள் மாணிக்கம்*
*கறும் புள்ளி இல்லா வைரம்*
மாவட்ட பிரதம நீதிமன்றம் ll காஞ்சிபுரம். நீதிமன்றத்தில் OS,No.16/2015 மேற்படி வழக்கில் 11_4_2017 வாய்தாவில் 3_வது பிரதிவாதி A.S.தசரத சா அவர்களுக்காக வழக்கறிஞர் திரு, A.K.இரமேஷ் B.Com., B.L., அவர்கள் ஆஜர்ஆக வக்காலத்து ஏற்று கொண்டமைக்கு,
*இவன் A.S.துளசி சா வணங்கி நன்றியினை தெரிவிக்கின்றேன்.*

No comments:

Post a Comment