Monday, April 17, 2017

5759 - குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி வரும் எதிரியிடம் மாதிரி கையொப்பம் பெற காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்க முடியாது, CRL.R.C.(MD)No.540 of 2012, 26.11.2012, High Court, Madras, Thanks to Adv. Mr. Dhanesh Balamurugan

குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி வரும் எதிரியிடம் மாதிரி கையொப்பம் பெற காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்க முடியாது.
கு. வி. மு. ச பிரிவு 311(A)ன் கீழ் குற்றவியல் நடுவர்கள் ஒருவரிடமிருந்து மாதிரி கையொப்பம் அல்லது கையெழுத்து ஆகியவற்றை பெறலாம்.
கு. வி. மு. சட்டத்தில் 2005ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட மேற்படி சட்டத் திருத்தம் 23.6.2006 முதல் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட போதிலும், தமிழ்நாட்டில் மேற்படி பிரிவு 311(A) ஆனது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ("தமிழ்நாடு திருத்தச் சட்டம் 2006)ஆகியவற்றில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் நடைமுறையில் இல்லை
மேலும் புதிதாக கு. வி. மு. ச பிரிவு 311(A) ல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி காவல்துறையினரால் கைது செய்யப்படும் நபர்களுக்கு மட்டுமே மேற்படி பிரிவு பொருந்தும். முன்ஜாமீன் பெற்ற நபர்களுக்கு பொருந்தாது
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் 25/05ன் படி கு. வி. மு. ச பிரிவு 311(A) என்கிற பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டது. அந்த திருத்தப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டமானது 23.6.2006 முதல் நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கு. வி. மு. ச பிரிவு 311(A)ல் கொண்டு வரப்பட்ட திருத்தம், தமிழ்நாடு சட்டத் திருத்தம் 2006ன் படி நீக்கப்பட்டு விட்டது.
உச்சநீதிமன்றம் " State of U. P Vs Rambabu Misra (AIR-1980-SC-791)என்ற வழக்கில், சிறை கைதிகளை அடையாளம் காணும் சட்டம் (Identification of Prisoners Act) பிரிவு 5ல் குற்றவியல் நடுவருக்கு எந்த ஒரு நபரிடமிருந்தும், வழக்கு எதிரியிடமிருந்தும் மாதிரி கையொப்பங்களை பெறுவதற்கான அதிகாரங்களை வழங்குவது குறித்து சட்டத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் நடவடிக்கை (Proceedings) என்ற சொல்லிற்கு விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. அவ்வாறு விளக்கம் அளிக்கப்படாவிட்டாலும் கூட விசாரணை அல்லது பரிசீலனை (Enquiry or Trial) ஆகியவற்றை சட்ட நடவடிக்கைகளாக எடுத்துக் கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் கூறியுள்ளது.
உச்சநீதிமன்றம் "மாநில அரசு Vs பலிராம் (AIR-1979-SC-14)என்ற வழக்கில் ஒரு நீதிமன்றம் ஒரு எதிரியிடமிருந்து மாதிரி கையொப்பம் பெற்று அதனை கையெழுத்து நிபுணருக்கு அனுப்பி வைக்க அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
நமது நாட்டை பொறுத்தவரை பிரிவு 311(A) நடைமுறையில் இல்லை என்றாலும், இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 73ன்படி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வரும் எதிரியின் கையெழுத்தை ஒப்பிட்டு பார்ப்பதற்கு எதிரி கைரேகையை அளிக்க உத்தரவிடலாம்.
முக்கியமாக இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 73ல் வழங்கியுள்ள அதிகாரமானது நீதிமன்றத்தில் விசாரணையிலுள்ள வழக்கில் கையொப்பம் அல்லது கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்க மட்டுமே எதிரியிடம் மாதிரி கையொப்பம் மற்றும் கையெழுத்தை பெறலாம்.
புலனாய்வு செய்யும் அதிகாரி அல்லது புலனாய்வு துறையினர் அவ்வாறு எதிரியின் கையெழுத்தை ஒப்பிட்டு பார்ப்பதற்கு கோர முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRP. NO - 540/2012
S. Sundari Vs Inspector of police, DCB, TIRUNELVELI
(2012-CDJ-MHC-6211)

No comments:

Post a Comment