22/05/2017

5803 - சமரச அடிப்படையில், விவாகரத்து செய்து கொள்வதற்காக, கணவன் அனுப்பும் அறிவிப்பின் மாதிரி, நன்றி ஐயா. Adv. Dhanesh Balamurugan

அனுப்புனர் :

முகிலன் 
த /பெ பரமசிவன் 
52,திருவள்ளுவர் தெரு 
திருவைகுண்டம்
தூத்துக்குடி மாவட்டம்

பெறுநர் :

மல்லிகா
க /பெ முகிலன்
அண்ணா நகர்
பாளையங்கோட்டை
திருநெல்வேலி மாவட்டம்

1. தாங்களும், நானும் கணவன், மனைவி ஆவோம்.

2. தங்களுக்கும், எனக்கும், திருவைகுண்டம், சுபா கல்யாண மண்டபத்தில் வைத்து 3.6.2016 ம் தேதி திருமணம் நடைபெற்றது.

3. தங்களுக்கும், எனக்கும் திருமணம் நடந்த காலத்திலிருந்தே பிரச்சினை ஏற்பட்டு கருத்து வேறுபாடு அதிகமாகி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்.

4. தாங்கள் கடந்த 1.1.2017 ஆம் தேதி அன்று நான் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டை விட்டு தன்னிச்சையாக வெளியேறி தங்களது பெற்றோர் வீட்டில் நாளதுவரை வசித்து வருகிறீர்கள்.

5. நான் எனது உறவினர்களை வைத்து பலமுறை தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தாங்கள் என்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று உறுதியாக கூறிவிட்டீர்கள்.

6. ஒரு நல்ல மனைவியாக தாங்கள் என்னை பராமரித்து எனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அது தங்களின் கடமையாகும். ஆனால் தாங்கள் என்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாமலும், எனக்கு எவ்வித பணிவிடைகளும் செய்யாமல் தங்களது பெற்றோருடன் நெடுங்காலமாக வசித்து வருவதாலும் இனி நான் உங்களுடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை. இனிமேலும் தாங்களும் நானும் இணைந்து வாழ்வதற்கு வழியும் இல்லை.

7. எனவே இந்த அறிவிப்பு கிடைத்ததும் தாங்கள் என்னுடன் சேர்ந்து சமரச அடிப்படையில் விவாகரத்து பெற்றுக்கொள்ள முன் வரவேண்டும் என்றும் தவறினால் நான் விவாகரத்து கேட்டு தங்கள் மீது உரிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வேன் என்றும் அதனால் எனக்கு ஏற்படும் சகல செலவுகளுக்கும் தாங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று இதன்மூலம் அறிவிக்கிறேன்.

1 comment:

  1. திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு தாலுகா, சாணார்பட்டி ஒன்றியம், அஞ்சுகுழிப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட எல்லைப்பட்டி ஆதிதிராவிடர்கள் காலனிக்கு MLA நிதியில் இருந்து என்னென்ன. திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது அமைச்சர் நிதியில் இருந்து என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது MP நிதியில் இருந்து என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது ஆதிதிராவிடர்கள் நலத்துறை நிதியில் இருந்து என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது மத்திய அமைச்சர் நிதியில் இரு ந்து என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது, ஆதிதிராவிடர் காலனியில் என்னென்ன நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது அ ற்றின் பட்டியல் மற்றும் ஆண்டு மற்றும் எந்த நிதி, என்பது குறித்து " இந்திய சாட்சிய சட்டம் 1872 ன் பிரிவு 76" ன் கீழ் சான்று நகல் கள் கேட்டு சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு விண்ணப்பித்த. எ னது கடித எண் RP-IEA-001/2017, நாள்: 07-03-2017, சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஒப்புகை அட்டையில் கையொப்பம் இட்டு பெற்றுக் கொண்டது 09-03-2017. ஆனால் நாளது நாள் வரை எனக்கு சான்று நகல்கள் வழங்கவில்லை சட்டப்படி 30. நாட்களுக்குள் சான்று நகல்கள் வழங்கி இருக்க வேண்டும் ஆனால் சான்று நகல்கள் வழங்கினால் நிதி மோசடி வெளிப்பட்டுவிடும் என்ற நோக்கத்தில் நாளது நாள் வரை வழங்கவில்லை இது குறித்து CBI விசாரணைக்கு பரிந்துரை செய்வாரா? திண்டுக்கல் மா ட்ட ஆட்சியர், அல்லது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரே விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பாரா? இல்லையெனில் உயர்நீதி மன்்றத்தில் வழக்கு தொடர வாய்ப்பு கிடைக்குமா? பொருத்திருந்து பார்ப்போம்்

    ReplyDelete