07/07/2017

5814 - ஊழல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு., CIC, 02.07.2017, நன்றி ஐயா. Rti Rajendran

ஊழல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு
02-07-2017
புதுடில்லி: ஒவ்வொரு துறையிலும் ஊழல் புகாருக்கு உள்ளான அரசு அதிகாரிகள் பட்டியலை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக ஆணையத்தின் கமிஷனர் யசோவர்தன் ஆசாத் கூறியதாவது: ஊழல் புகாருக்கு உள்ளான அரசு அதிகாரிகள் பட்டியலை பொது தளத்தில் வைக்க வேண்டும். அவர்கள் மீதான வழக்கு விபரம், கோர்ட் வழக்கு, துறை ரீதியிலான கண்காணிப்பு, குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள அவரது பதவி விவரம் ஆகியவை இடம்பெற வேண்டும். இதுபோன்ற விவரங்ளை வெளியிடுவதன் மூலம், சிறந்த நிர்வாகத்திற்கு உதவியாக இருக்கும். பொது மக்களுக்காக அதிகாரிகள் பணியாற்ற உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a comment