Thursday, March 22, 2018

5859 - மாநகராட்சி ஆணையருக்கு, 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு., நன்றி ஐயா. Thindal Subramanian Perumal

மாநகராட்சி ஆணையருக்கு மாதிரி அறிவிப்பு.
பதிவுத் தபால் ஒப்புகை அட்டையுடன்.
15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு
.............. மாவட்டம் ..............வட்டம் .......................பகுதியில் .........................என்ற முகவரியில் வசித்து வரும் ...................என்பவரின் மகன் .................. திரு செந்திகுமார் (வயது 32) ஆகிய நான்,
.............. மாவட்டம் ..............வட்டம் .......................பகுதியில் .........................என்ற முகவரியில் உள்ள மாநகராட்சியில் ஆணையராகப் பணியாற்றும் தங்களுக்கு அளிக்கும் 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு இதுவாகும்.
1. வரி செலுத்தாதவர்களின் குடிநீர்க் குழாய் இணைப்பை முன் அறிவிப்பு இன்றி துண்டிக்கப் போவதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகிறீர்கள். . இதனால் மக்கள் பெரும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகின்றனர்.
2. எந்த சட்டப்படி தாங்கள் இந்த அறிவிப்பை வெளியிடுகிறீர்கள். ? என்பதை 15 தினங்களுக்குள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மாநகராட்சிகளின் சட்டம் தங்களுக்கு பொருந்தாதா ?
3. சட்டப்படியன்றி வேறு விதமாக செயல்பட தங்களுக்கு அதிகாரம் உள்ளதா ? தங்களின் செயல் எதேச்சதிகாரம் என்று ஏன் தீர்மானிக்க கூடாது ? தங்களின் செயல் அரசியல் சாசனத்திற்கு என்று ஏன் தீர்மானிக்க கூடாது ? என்பதை 15 தினங்களுக்குள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
.
4. தாங்கள் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றத் தகுதி அற்றவர் என்று ஏன் தகுதி வினவும் நீதிப் பேராணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் கூடாது என்பதற்கான காரணங்களை 15 தினங்களுக்குள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
5. மனித உரிமைப் பாதுகாப்பு சட்டத்தையும் அரசியல் சாசனத்தையும் தங்கள் தங்கள் மீறிச் செயல்படுகிறீர்கள் என்று ஏன்முடிவு செய்யக் கூடாது ? என்பதை இவ்வறிவிப்புக் கிடைக்கப் பெற்ற 15 நாட்களுக்குள் தெரிவிக்கவும்.
.
5. இதை தாங்கள் அலட்சியப் படுத்தினாலோ அல்லது உரிய பதில் அளிக்கவில்லை என்றாலோ இதில் குறிப்பிட்ட சங்கதிகளை தாங்கள் சட்டப்படி அப்படியே ஒப்புக் கொண்டதாகவே ஆகிவிடும் என்பதைப் பணிந்து அறிவித்துக் கொள்கிறேன்.
.
6. மேலும், இதுவே தங்களுக்கு எதிராக உரிய அதிகார அமைப்புகளிடமும் நீதிமன்றத்திலும் பயன் படுத்தத் தகுமுறை சான்றாவனமாகவும் சாட்சியமாகவும் ஆகிவிடும் என்பதை பணிந்து அறிவித்துக் கொள்கிறேன்
இப்படிக்கு,
திரு செந்திகுமார்
இடம்: ஈரோடு
தேதி : 09.03.2018.
நகல் பெறுவோர்:
1. PORTFOLIO JUDGE,ERODE DISTRICT.
2. REGISTRAR GENERAL,CHENNAI

No comments:

Post a Comment