Wednesday, April 04, 2018

5869 - உயிலை கட்டாயம் மெய்ப்பித்தல் வேண்டுமா? Probate Of Will, Thanks to Adv. Mr. Dhanesh Balamurugan

உயில் எழுதியவரின் ஆயுட்காலத்துக்கு பிறகுதான் அமலுக்கு வரும் என்பது அநேகமாக எல்லாருக்கும் தெரியும். ஆனால் சில குறிப்பிட்ட இடங்களில் உள்ள சொத்துக்கள் பற்றிய உயிலை, மெய்ப்பிதழ் (ப்ரொபேட் செய்தல்) செய்த பின்னர் தான் அமல்படுத்த முடியும் என்பது சிலருக்கு தெரியாது. மேலும் உயிலை மெய்ப்பிதழ் செய்ய என்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரியாது.
எனவே அதனை பற்றி தெரிந்து கொள்ளவே இந்த கட்டுரை.
மெய்ப்பிதழ் செய்தல் என்றால் என்ன?
தகுதி வாய்ந்த நீதிமன்றம், உயிலின் நகலில், அதுதான் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட உயில் என்று கூறி சான்றிதழ் செய்வதுதான் "மெய்ப்பிதழ்" ஆகும். இறந்து போனவர் எழுதிய கடைசி மற்றும் இறுதியான உயில் அதுதான் என்பது அந்த மெய்ப்பிதழ் மூலம் நிரூபணம் ஆகிறது. ஒரு குற்ற உயில்தான் இறந்தவர் எழுதிய கடைசி மற்றும் இறுதியான உயில், அதனை எழுதியவர் இறந்து விட்டார் என்பவை எல்லாம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட பிறகு, அந்த உயிலின் மூலப்பத்திரம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு, அதன் நகலில் நீதிமன்ற முத்திரை கொண்ட சான்றிதழ் வழங்கப்படும். அதுவே மெய்ப்பிதழ் செய்தல் ஆகும்.
அந்த உயிலை நிர்வகிக்கும் ஒருவரோ அல்லது உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள உயிலை நிறைவேற்றுபவரோ, அத்தகைய சான்றிதழ் இல்லாமல் உயிலில் உள்ள விதிகளை (ஷரத்துகளை) நிறைவேற்ற முடியாது.
உயில் மெய்ப்பிதழ் செய்யப்பட்ட பிறகு "கொடிசில்" என்கிற உயில் இணைப்பு கண்டுபிடிக்கப் பெற்றால் (உயிலில் விடுபட்ட அல்லது சிறிய மாற்றங்கள் கொடிசிலில் இடம் பெற்றிருக்கும். எல்லா உயில்களுக்கும் கொடிசில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை). அந்த கொடிசிலும் தனியே மெய்ப்பிதழ் செய்யப்பட வேண்டும். (கொடிசில் எழுதுவது மற்றும் மெய்ப்பிதழ் செய்வது இரண்டுமே உயிலுக்கு உள்ள மாதிரி தான்). அவ்வாறு கொடிசில் தனியே மெய்ப்பிதழ் செய்யப்படும் போது (அந்த கொடிசிலில் வேறு நிறைவேற்றுபவர் நியமிக்கப்படாமல் இருந்தால்) உயிலின் நிறைவேற்றுபவரிடமே கொடிசிலின் மெய்ப்பிதழும் நீதிமன்றத்தால் வழங்கப்படும்.
உயிலை எழுதுபவர் அதனை எழுதும் போதே அந்த உயிலை நிறைவேற்றுவதற்கு ஒரு குறிப்பிட்ட நபரை நியமிப்பார். அவர்தான் அந்த உயிலின் நிறைவேற்றுபவர் (executor) என்று அழைக்கப்படுவார். அந்த உயிலில் உள்ள ஷரத்துகளின்படி இறந்தவரின் சொத்துக்களை பிரித்து கொடுப்பது நிறைவேற்றுபவரின் கடமையாகும். நீதிமன்றம் மெய்ப்பிதழ் சான்றிதழை உயிலில் நியமிக்கப்பட்டுள்ள நிறைவேற்றுபவரிடம் தான் கொடுக்கும். உயில் எழுதுபவர் ஒருவரையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவரையோ நிறைவேற்றுபவர்களாக நியமிக்கலாம்.
உயிலில் குறிப்பாக சொல்லப்பட்டிருந்தால் தவிர, உயிலினால் நிறைவேற்றுபவருக்கு எந்தவிதமான நன்மைகளும் கிடையாது. உயிலில் உள்ள சொத்துக்களை அதில் கூறப்பட்டுள்ள பயனாளிகள் அடையும் வரை அதனை பாதுகாக்க வேண்டியது, இறந்தவரின் சொத்து விவரங்களை அறிந்து கொள்வது, இறந்தவரின் ஈமச்சடங்குகளுக்கு தேவைப்பட்டால் பணம் கொடுப்பது, இறந்தவருக்கு வர வேண்டிய கடன்களை வசூலிப்பது, அவர் கொடுக்க வேண்டிய கடன்களை திருப்பிக் கொடுப்பது, தேவைப்படும் போது நீதிமன்றத்தில் மெய்ப்பிதழுக்கு மனு செய்வது ஆகியவை தான் கடமைகள் ஆகும். அத்துடன் தொடர்புடைய நபர்களுக்கோ, வங்கி அல்லது இதர நிறுவனங்களுக்கோ இறந்தவரின் சொத்துக்கள் பற்றிய கணக்கு கொடுக்க வேண்டியதும் இருக்கலாம். எனவே பொறுப்பான நபரை நிறைவேற்றுபவராக தேர்ந்தெடுக்க வேண்டும்.
எல்லா உயில்களிலும் நிறைவேற்றுபவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நிறைவேற்றுபவர் நியமிக்கப்படாத உயிலை எழுதியவர் இறந்துவிட்டால், அந்த உயிலை இணைத்து நீதிமன்றத்தில் இருந்து "நிர்வாக கடிதம்" (Letter of Administration) பெற்று அதனை அமல்படுத்தலாம்.
உயில் என்பது "இந்திய மரபுரிமைச் சட்டம் 1925" ன் கீழ் வருகிறது. கீழ்க்கண்ட எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால் தக்க மாற்று ஏற்பாடுகளுக்கு வழிவகைகள் உள்ளது.
உயிலை எழுதியவர்
1. நிறைவேற்றுபவரை நியமனம் செய்யாதிருந்தால்
2. அல்லது நியமிக்கப்பட்ட நிறைவேற்றுபவர் சட்டப்பூர்வமாக செயல்பட இயலாத நிலையில் இருந்தால் அல்லது உயிலை நிரூபிக்கும் முன்பாகவே அவர் இறந்து விட்டால்
3. அல்லது உயிலை நீரூபித்த பிறகு அதனை நிறைவேற்றும் முன்பாக இறந்து போயிருந்தால் யாரிடம் மெய்ப்பிதழ் வழங்கப்படும்.
இந்திய மரபுரிமைச் சட்டம் 1925 ன் பிரிவு 222 ன்படி மெய்ப்பிதழ், உயிலில் நியமிக்கப்பட்டுள்ள நிறைவேற்றுபவரிடம் தான் வழங்கப்பட வேண்டும். அந்த நிறைவேற்றுபவர் வயதுக்கு வராத மைனராக இருந்தாலோ (அவர் மேஜராகும் வரை) புத்தி சுவாதீனம் இல்லாதவராகவோ இருந்தால் அவர்களிடம் வழங்கப்பட மாட்டாது.
உயில் எழுதியவர் இறந்து 7 நாட்கள் முடியும் வரை மெய்ப்பிதழ் வழங்கப்பட மாட்டாது.
எல்லா உயில்களும் மெய்ப்பிதழ் செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மெய்ப்பிதழ் செய்வது பாதுகாப்பானது.
சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற மாகாண நகரங்களில் உள்ள சொத்துக்கள் பற்றிய உயில்கள் கட்டாயம் மெய்ப்பிதழ் செய்யப்பட வேண்டும்.
இந்திய மரபுரிமைச் சட்டம் 1925 ன் பிரிவு 276 ன்படி மெய்ப்பிதழ் வழங்கக் கோரும் மனு, உயிலில் நியமிக்கப்பட்டுள்ள நிறைவேற்றுபவரால் ஒரு வழக்கறிஞர் மூலமாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
அந்த மனுவுடன் மூல உயில் இணைக்கப்பட வேண்டும்.
உயிலை மெய்ப்பிதழ் செய்வதற்கு இறந்தவரின் உறவினர்களோ அல்லது பொதுமக்களில் எவருமோ ஆட்சேபனை ஏதும் தெரிவிக்காமல் இருந்தால் மெய்ப்பிதழ் வழங்க 3 முதல் 6 மாதங்கள் ஆகும்.

1 comment:

  1. Are you having trouble in opening the Binance wallet app? If your Binance wallet app is not working on ios and android and you’re looking for ways to deal with queries, you can always ask for help from the team of elite professionals who are ready to support and fix all the queries in no time. You can call on Binance customer support number (833) 993-0690 which is functional and users can have conversation with the team anytime for providing quality and result-driven solutions and remedies in no time.

    More info visit here:

    Binance customer support
    crypto customer support

    ReplyDelete