Thursday, April 12, 2018

5896 - குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20., நன்றி ஐயா. Dhanesh Balamurugan

மனைவி குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 18,19,20,22 ஆகியவற்றின் கீழ் பரிகாரங்கள் கேட்டு கணவர் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்காக மாவட்ட சமூகநல அலுவலர் அவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மாவட்ட சமூகநல அலுவலர் விசாரணை நடத்தி 14.12.2017 ல் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் மனைவிக்கும் அவரது குழந்தைகளுக்கும் சட்டப்படி ஆற்ற வேண்டிய கடமைகளை கணவர் செய்யவில்லை என்றும் கணவர் மனைவியோடு சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று கணவர் கூறியதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் மனைவி பிரிவு 23 ன் கீழ் இடைக்காலமாக 4 வகையான பரிகாரங்களை வழங்க வேண்டும் என்று கூறி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவிற்கு கணவர் எதிருரை தாக்கல் செய்தார். கணவர் தெர்மல் பவர் ஸ்டேஷனில் பொறியாளராக வேலை பார்த்து வருவதன் மூலம் மாதம் ரூ 1,00,000/- சம்பளம் பெற்று வருவதால் தனக்கும், குழந்தைகளுக்கும் இடைக்கால ஜீவனாம்சமாக ரூ. 20,000/- தர உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நடுவர் இரண்டு பரிகாரங்களை வழங்கி உத்தரவிட்டார்.
ஆனால் உத்தரவின் முடிவில் இந்த உத்தரவு மேல் நடவடிக்கைக்காக மாவட்ட சமூகநல அலுவலருக்கு அனுப்பப்படுகிறது என்று கூறியுள்ளார்.
ஆனால் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் பண நிவாரணம் வழங்கி உத்தரவிடலாம். பிரிவு 20(4) ன்படி உத்தரவின் நகலை புகார்தாரருக்கும், எதிர்மனுதார் மற்றும் அவரது எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பொறுப்பு அலுவலருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றுதான் கூறுகிறது. மாவட்ட சமூகநல அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறவில்லை.
மேலும் உத்தரவுப்படி கணவர் இடைக்கால ஜீவனாம்ச தொகையை தர மறுத்ததால், நடுவர் கணவருக்கு சம்பளம் போடும் அதிகாரியை பணத்தை பாதிக்கப்பட்ட மனைவிக்கு நேரிடையாகவோ அல்லது நீதிமன்றத்திலோ செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கலாம் என்று கூறுகிறது.
சட்டம் இப்படியிருக்க நடுவர் உத்தரவு நகலை மேல் நடவடிக்கைக்காக மாவட்ட சமூகநல அலுவலருக்கு அனுப்பி வைத்திருப்பது சட்டப்படி தவறுதானே? நண்பர்களே
மாவட்ட சமூகநல அலுவலர் ஏற்கனவே தனது அறிக்கையை சமர்ப்பித்த பிறகு மேல் நடவடிக்கை எடுக்க என்ன அதிகாரம் உள்ளது?
இடைக்கால உத்தரவுகளை நிறைவேற்ற என்ன அதிகாரம் உள்ளது?


No comments:

Post a Comment