Saturday, January 11, 2020

6083 - Written Argument in TNSIC Case, Thanks to Mr. Leenus Leo Edwards

Written Argument என்பது ஒரு வழக்கின் விசாரணை முடிந்ததும் நீதிமன்றத்தில் வழக்கறிஞரால் சமர்பிக்கப்படும் வழக்கின் மொத்த சாராம்சமாகும். முகநுால் நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மாண்புமிகு தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முன் சமர்பிக்கும் வகையில் எழுத்துமூல விவாத உரையின் ஒரு மாதிரி படிவத்தை இணைத்துள்ளேன்.
.
இந்த பதிவிலான “எழுவினாக்கள் (issues) மற்றும் விவாதங்கள் இந்த பிரச்சனைக்கு மட்டுமே பொருந்தும். மற்ற பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு எழுவினாக்கள் மற்றும் வாதங்களை முன் வைக்க வேண்டும்.
.
மாண்புமிகு தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வழக்கானது குறிப்பிட்ட தேதியில் விசாரணைக்கு வருகின்றது என்று அறிவிப்பானை கிடைத்ததும், கீழ்கண்டவாறு எழுத்துமூல விவாத உரையினை முன்னரே தயாரித்து வைத்திருந்து, அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். எழுத்துமூல விவாத உரையில் அனைத்தும் நிகழ்வுகளும் தொடர்ச்சியாக குறிப்பிடப்பட்டிருப்பது என்பது விசாரணையை இலகுவாக எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும்.
.
(மாண்புமிகு தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் இரண்டாம் மேல் முறையீடு செய்ய அவர்கள் கொடுத்திருக்கும் படிவத்தை உபயோகப்படுத்துவது என்பதே சரியானதாகும்.)
.
நான் இதுவரை தமிழ்நாடு தகவல் ஆணைய விசாரணைக்கு சென்றதில்லை என்பதால், இந்த எழுத்துமூல விவாத உரை எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கும் என்று ஏற்கனவே விசாரணைக்கு சென்றவர்கள்தான் கருத்து கூறவேண்டும். எனது முயற்சியில் தவறுகள் இருக்கும் பட்சத்தில் ஆலோசனை வழங்கினால், உரிய திருத்தங்களை (எழுத்து பிழைகள் உட்பட) மேற்கொள்ள தயாராக இருக்கின்றேன். ...


நன்றி Mr. Leenus Leo Edwards

https://drive.google.com/open?id=1VbwUAc4oiCXfazIoQtTDkQeiIL4dzIve
https://drive.google.com/open?id=1ryvAJNFII8DE5s7mutyA9iXPksGXlkxs
https://drive.google.com/open?id=1a9NZgudzFPk3X3aYSkU1MLxyhir4qDUh
https://drive.google.com/open?id=1Uh6YI0ZIE9bpxl_QMrgwF3e6gH3nfDnR
https://drive.google.com/open?id=1s7niLfA-Ojv5w5WJCnDy75jcH3WYbgZ0
https://drive.google.com/open?id=1seCDETpsrrhHYvVDL9vJT4m34E5_Qhb9
https://drive.google.com/open?id=1BBnL0mp8q6Rel8DTHGdqbPumrWv6j4O2
https://drive.google.com/open?id=1o20NQyc_onrZmFeAqYJaBTw5EAMje8nf

No comments:

Post a Comment