Tuesday, March 31, 2015

உட்பிரிவு தொடர்பான தகவல்கள் கோரியதில் உத்தரவு, TNSIC, 31-03-2009

பொதுமக்கள் நிலம் வாங்கும் பொழுது, உட்பிரிவு கட்டணம் வசூலிக்கப்பட்டு, சார் பதிவு அலுவலரால், கஜானாவில் செலுத்தப்படுகிறது. பொதுமக்களும் நேரடியாக பணம் கட்டுகிறார்கள்.

இதன் விவரம், 5 ஆண்டுகளில் தமிழகத்தில்,

1. உட்பிரிவு வகைக்கு செலுத்திய தொகை,
2. தொகைக்கான உட்பிரிவு எண்ணிக்கை,
3. சாங்சன் ஆன உட்பிரிவு எண்ணிக்கை,
4. நடவடிக்கை இல்லாததும், தள்ளுபடியுமான உட்பிரிவுக்கு உரிய தொகை 

போன்ற விவரங்கள், 31 மாவட்டங்களில், 206 தாலுகாவில் உள்ள பதிவேடுகளில் இருந்து திரட்ட வேண்டியுள்ளதால், மனுதாரர் எந்த மாவட்டத்திற்குத் தேவையோ, அந்தந்த வட்டாட்சியரிடம் தகவலைப் பெற்றுக் கொள்ளலாம்.



No comments:

Post a Comment