நில எடுப்பு:
அரசுத் துறைகள் / அரசு நிறுவனங்களுக்கு பொது நோக்கத்திற்காக நிலங்கள் தேவைப்படுகின்றன. அவ்வாறு தேவைப்படும் போது அரசு நிலங்கள் இல்லாவிட்டால், 1894- ஆம் ஆண்டு நில எடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டா நிலங்களைக் கையகப்படுத்தலாம்.
கையகப்படுத்தும் செயல்முறைகளை முடிப்பதற்கான கால அவகாசம் மூன்று ஆண்டுகள்.
அரசுக்கு மிக விரைவாக நிலங்கள் தேவைப்படும் போது பிரிவு17(1) மற்றும் பிரிவு 17(2)-இன் கீழ் உடனடியாக நிலத்தை கையகப்படுத்தலாம்.
கிராம நிர்வாக அலுவலரின் பணிகள்:
நில எடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தும் போது சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்படும் அறிவிப்புகளை கிராமத்தில் அவ்வப்போது விளம்பரம் செய்வதுடன் நோட்டீஸ்களை நில உரிமையாளரிடம் சரியான முறையில் சார்வு செய்ய வேண்டும்.
நிலத்தின் உண்மையான மதிப்பினை நில எடுப்பு அலுவலருக்குத் தெரிவிக்கவும், கிராமக் கணக்குகள் நகலை வழங்குவதும் கிராம நிர்வாக அலுவலரின் கடமையாகும்.
சில சமயங்களில் நிலத்திற்கு அதிக இழப்பீடு பெற, தீய நோக்கத்துடன் நிலமதிப்பை உயர்த்திக் காட்டி பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு கிராம நிர்வாக அலுவலர் நிலத்தின் உண்மையான மதிப்பை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார்
No comments:
Post a Comment