நிலச்சீர்திருத்தம்:
விவசாய நில உடைமைகளில் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, ஏழைகளுக்கு நிலம் வழங்கும் நோக்கத்திற்காக, தமிழ்நாடு நிலச்சீர்திருத்த சட்டம் 1961(தமிழ்நாடு சட்டம் 58/61) இயற்றப்பட்டது.
இத்திட்டத்தின்படி அமலில் உள்ள உச்சவரம்பு
5 நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு – 15 தர ஏக்கர்
ஒவ்வொரு கூடுதல் உறுப்பினருக்கு – 5 தர ஏக்கர்
மொத்த உச்சவரம்பு – 30 தர ஏக்கர்
1-3-1972-இல் இருந்த நம்பகங்களுக்கு(Trust) – 5 தர ஏக்கர்
குறிப்பு: ஒரு தர ஏக்கர் என்பது நிலத்தின் தீர்வைக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. இது ஒரு சாதாரண ஏக்கருக்கும் குறைவாகவோ (அ) அதிகமாகவோ இருக்கும்.
1-3-1972-க்குப் பிறகு எந்த நம்பகமும் விவசாய நிலங்கள் பெறுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பிரிவு 37-B-யின் கீழ் அரசின் அனுமதி பெற்று கல்வி மற்றும் மருத்துவமனை நோக்கங்களுக்காக ம்ட்டுமே நிலங்கள் வாங்கலாம்.
சட்டப்பிரிவு 37-A-யின் கீழ் அரசின் அனுமதி பெற்று தொழில் மற்றும் வணிக நோக்கங்களுக்காக நிலங்கள் வாங்கலாம்.
VAO-வின் கடமைகள்
நிலச் சீர்த்திருத்த சட்டப்படி உச்ச வரம்புக்குமேல் நிலங்களை வைத்திருக்கின்ற நில உரிமையாளர்/நிறுவனங்களின் பட்டியலை உதவி ஆணையருக்கு கிராமக் கணக்குகளிச்ன் நகல்களுடன் அனுப்ப வேண்டும்.
ஒப்படை செய்யப்பட்ட பின்பு விதி விலக்கு அளிக்கப்பட்ட இனங்களில்(தோப்பு முதலியவை) நிபந்தனைகள் மீறப்பட்டால், அதனை நிலச் சீர்திருத்த உதவி ஆணையருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment