நிலமாற்றம்:
வருவாய் நிலை ஆணை எண் 23
இத்திட்டத்தின் கீழ் அரசு புறம்போக்கு நிலங்களை மைய அரசுத் துறைகளுக்கு, வழக்கமான சந்தை மதிப்பினை வசூலித்துக் கொண்டு நிலமாற்றம் செய்யப்படுகிறது.
பள்ளிக் கட்டடங்கள், மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற வணிக நோக்கமில்லாத காரணங்களுக்காக நிலக்கிரயமின்றி, நிலமதிப்பு வசூல் மட்டும் செய்து கொண்டு நிலமாற்றம் செய்யப்படுகிறது.
வருவாய் நிலை ஆணை எண் 24
பொது நோக்கங்களுக்காகவும் சமுதாய நலனை முன்னேற்றுவதற்காகவும் அரசு சார்பு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை பல்கலைக்கழகங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களுக்கு சில நிபந்தனைகளுக்குட்பட்டு அரசு நிலங்களை உரிமை மாற்றம் செய்கின்றன.
எந்த நோக்கத்திற்காக நிலமாற்றம் செய்யப்பட்டதோ, அவற்றிற்காக முழுமையாகப் பயன்படுத்தப்படாத பட்சத்தில் அத்தகைய நிலங்கள் மீளப் பெறப்படும்.
அதே நேரத்தில் உரிமை நிபந்தனைகள் மீறப்பட்டிருப்பின் எந்தவிதமான இழப்பீட்டுத் தொகையையும் வழங்காமல் நிலங்கள் அரசால் மீளப் பெறப்படும்.
கிராம நிர்வாக அலுவலரின் பணிகள்:
நிலமாற்றம் நேர்வில், கேட்புத் துறைக்கு நிலம் வழங்குவது குறித்து, கிராமத்தில் தண்டோரா மூலம் கிராம நிர்வாக அலுவலர் விளம்பரம் செய்ய வேண்டும்.
பொதுமக்களிடம் ஆட்சேபணை இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் நிலத்தின் சந்தை மதிப்பினை நிர்ணயம் செய்ய அக்கம் பக்கத்திலுள்ள நிலங்களின் உண்மை மதிப்பினை தெரிவிக்க வேண்டும்.
No comments:
Post a Comment