குற்றவாளிகளை ரகசியமாக தூக்கிலிடக் கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, மே 28, 1:01 PM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது11 Share/Bookmark printபிரதி
குற்றவாளிகளை ரகசியமாக தூக்கிலிடக் கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, மே 28, 1:01 PM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது11 Share/Bookmark printபிரதி
குற்றவாளிகளை ரகசியமாக தூக்கிலிடக் கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி, மே 28-
சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, ஷப்னம் என்ற பெண் தனது காதலனுடன் சேர்ந்து தன் குடும்பத்தினர் 7 பேரைக் கொன்ற வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகளை ரகசியமாக தூக்கிலிடக் கூடாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தங்களின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷப்னம் தன்னுடைய காதலர் சலீமுடன் சேர்ந்து, 10 மாதக் குழந்தை உட்பட தன் குடும்பத்தினர் 7 பேரைக் கொலை செய்தார். இந்தக் குற்றத்துக்காக உத்தரப்பிரதேச நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேல் முறையீட்டில் அந்த தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றம் தண்டனை உறுதி செய்த ஒரு வாரத்திற்குள்ளாகவே கடந்த 15-ம் தேதி, உத்தரப்பிரதேச நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் தூக்கு தண்டனைக்கான வாரண்ட்டை பிறப்பித்தது. இந்த வழக்கை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் யு.யு.லலித் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, இவ்வளவு விரைவாக தூக்கு தண்டனை வாரண்ட் பிறப்பித்ததால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அந்த வாரண்டை ரத்து செய்தனர்.
தூக்கு தண்டனையில் இருந்து வெளியே வருவதற்காக தனக்குள்ள அனைத்து வாய்ப்புகளையும் ஒரு குற்றவாளி பயன்படுத்தி முடிக்கும் வரை அவரை தூக்கிலிடுவது தவறு. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கும், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரிடம் கருணை மனு அளிப்பதற்கும் போதிய கால அவகாசத்தை குற்றவாளிக்கு அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மரண தண்டனைக் கைதிகள் தங்களுடைய குடும்பத்தினரை சந்திப்பதற்கு அனுமதி வழங்காமலும், தண்டனையை நிறைவேற்ற இருப்பது குறித்து முன்பே கைதிகளுக்கு தகவல் தெரிவிக்காமலும் கைதிகளை தூக்கிலிடக் கூடாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்
No comments:
Post a Comment