Thursday, June 04, 2015

1977 - நாமக்கல் மாவட்டத்தில் இந்திய அரசியல் சாசனத்தை அமுல்படுத்த கோருதல் தொடர்பாக மனு, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal அவர்கள்

பதிவுத் தபால் ஒப்புகை அட்டையுடன்
கடிதம் எண் : ௦3/NDC/TSP/2015……………………..03.08.2015.ERODE.
அனுப்புதல் :
திரு. பெ. சுப்ரமணியன் வயது 6௦ வருடங்கள்
த/ பெ பெருமாள்,
எண்: ௦6, ரோஜாகார்டன், திண்டல், ஈரோடு- 638012…………………… Rs. 2/- court fee stamp.
பெறுதல்:
திரு மாவட்ட ஆட்சியர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்செங்கோடு சாலை, நாமக்கல்.
மதிப்பிற்குரிய அய்யா, வணக்கம்.
பொருள்:
1. நாமக்கல் மாவட்டத்தில் இந்திய அரசியல் சாசனத்தை அமுல்படுத்த கோருதல் தொடர்பாக மனு.
2. நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு இந்திய அரசியல் சாசனத்தை கற்பிக்க ஆவன செய்யக் கோருதல் தொடர்பாக ...
பார்வை:
1. இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 19 (1) (அ).
2. இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 19 (1) (ஆ).
3. இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 35௦.
4. இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 356.
5. திரு. பூமொழி அவர்கள் நாமக்கல் துணைக் காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் அளித்த மனு நாள் 30.05.2015.
1. இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 5-ன் படி நான் இந்தியக் குடிமகன் ஆவேன். தாங்கள் தமிழக அரசின் ஒரு அதிகாரி ஆவீர்கள். இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 35௦ -ன் படி இம்மனுவைக் கேட்க வேண்டியது உங்கள் கடமை ஆகும். உங்கள் கடமையை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
2. திரு. பூமொழி அவர்கள் நாமக்கல் துணைக் காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் அளித்த மனு நாள் 30.05.2015 க்கு இன்று ௦3.௦6.2௦15 வரை கூட காவல் துறையினர் ஒப்புகை சீட்டு அளிக்கவில்லை எனத் தெரிகிறது. இது அரசு ஆணையை மீறிய செயல் ஆகும். இ.த.ச. பிரிவு 1௦8 மற்றும் 166 –ன்படி குற்றச் செயல் ஆகும்.
3. திரு. பூமொழி அவர்கள் நாமக்கல் துணைக் காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் அளித்த மனு நாள் 30.05.2015 க்கு இன்று ௦3.௦6.2௦15 வரை கூட பதில் ஏதும் அளிக்கவில்லை. இது காவல் துறையினர் நல்ல எண்ணத்துடன் செயல்படவில்லை என்பதற்கு சான்று ஆகும். மேலும் இதுவே, நாமக்கல் காவல் துறையினர் அரசியல் சாசனக் கோட்பாடு 35௦ ஐ மதித்து ஏற்றுச் செயல்படவில்லை என்பதற்கு தகுமுறைச் சான்று ஆகும். .
4. இந்திய அரசியால் சாசனக் கோட்பாடு 19 (1) (அ) ன்படி ௦4.௦6.2௦15 கண்டனத்தை தெரிவிக்கும் கூட்டம்
நடத்தவும், இந்திய அரசியால் சாசனக் கோட்பாடு 19 (1) (ஆ) ன்படி ௦4.௦6.2௦15 அன்று கூடவும் அனுமதி மறுத்து செயல்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. இது அரசியல் சாசனத்தை அமுல்படுத்த விடாமல் மறுத்து, தடுத்து மக்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்.
5. இந்தியாவில் இந்திய அரசியல் சாசனமே வலிமையான, செல்லக் கூடிய மற்றும் செயல்படுத்தக் கூடிய சட்டமாகும். இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரான காவல் துறையின் சட்டங்கள் இருப்பின் அவை தாமாகவே செல்லாது என்பதைப் பணிந்து நினைவு படுத்துகிறேன். செல்லாத சட்டங்களை நாமக்கல் காவல் துறை செயல்படுத்தக் கூடாது.
6. நாமக்கல் காவல் துறையினரின் செயல்பாடுகளால், இந்திய அரசியல் சாசனத்தை செயல்படுத்த இயலாத நிலை நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது.
7. இந்திய அரசியல் சாசனத்தை செயல்படுத்த இயலாத நிலை நாமக்கல் மாவட்டத்தில் உள்ளதால், இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 356 -ன்படி செயல்படும்படி மேதகு ஜனாதிபதிக்கு மக்கள் மனுக் கொடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள்.
8. மேற்படி மனுவை பொதுமக்கள் மேதகு ஜனாதிபதிக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாமக்கல் காவல் துறையினர் தள்ளி உள்ளனர் என்பதை தமிழ்நாடு அரசுக்கு தெளிவு படுத்திக் கொள்கிறேன்.
9. தாங்கள் உடனே உரிய நடவடிக்கை எடுத்து நாமக்கல் காவல் துறையினர் இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 35௦ -ன்படி செயல்பட ஆவன செய்யும்படி தாழ்மையுடன் செய்ய வேண்டுகிறேன்.
10. நாமக்கல் மாவட்ட ஆட்சியரான தாங்கள், நாமக்கல் மாவட்டத்தில் அரசியல் சாசனத்தை அமுல்படுத்த தேவையான உத்திரவுகளையும் மற்றும் தாங்கள் தேவையெனக் கருத்தும் பிற உத்திரவுகளையும் பிறப்பித்து நீதி வழங்கும்படி பணித்து கேட்டுக்கொள்கிறேன்.
நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு இந்திய அரசியல் சாசனத்தை கற்பிக்க ஆவன செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
. இப்படிக்கு,
. தங்கள் உண்மையுள்ள,
( பெ.சுப்ரமணியன் )

No comments:

Post a Comment