இந்திய அரசமைப்பு 1950 கோட்படு 19,21,22(4),226
மற்றும்
குற்ற விசாரணை முறை சட்டம் 1973-பிரிவு 437,439
இன்
கீழ் நடவடிக்கை எடுக்க கோரும் மனு....
2. இந்திய அரசமைப்பு 1950 – இன் கோட்பாடுகள் 29(1),350 மற்றும் தமிழ்நாடு ஆட்சி மொழி சட்டம் 1956 பிரிவு-4–இன் படி இந்நீதிமன்றத்தின் மொழி தமிழ் என்பதால், இவ்வழக்கு தமிழில் நடைபெற மாண்பமை நீதிமன்றம் உத்திரவிட தாழ்மையுடன் கோருகிறேன்.
3.ஒரு குற்றம் நடக்க இருக்கிறது என்பதை தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பும் அதற்கான சட்டபடியான வழிகளை கையாள வேண்டிய கடமையும்,அதுபற்றி தகவல் தெரிந்தவர்கள் சட்டபடி செயல்படாமல் இருப்பது இந்திய தண்டனைச் சட்டம் 1860-இன் பிரிவு 2-இன் கீழ் குற்றமாகும் அதன் அடிப்படையில் இப்புகார் மனு சமர்பிக்கப்படுகிறது.
1. மேற்படி வழக்கில் விசாரணை கைதியாக உள்ள மதுரை வீரன் மற்றும் திருப்பதிராஜ் ஆகியோர்களை மேற்கண்ட முன்னுதாரண தீர்ப்புகளின் அடிப்படையிலும், இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 14,19,21,22(4) மற்றும் குற்றவிசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 439 கீழ் சொந்த ஜாமின் வழங்கி தக்க நடவடிக்கை எடுக்குமாறும்,
2.மேற்படி வழக்கில் இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு19,21,22 குற்ற விசாரணை முறைசட்டம் 57க்கு விரோதமாகவும் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு விரோதமாக செயல்பட்ட திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பரவாசுதேவன் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து நீதியை நிலை நாட்டிட வேண்டுமாய் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
1.குற்ற விசாரணை முறை சட்டம் 1973-இன் பிரிவு 2(7)-இன் கீழ் நடவடிக்கைகளுக்காக தபால் மூலம் சார்பு திருமிகு.மாவட்ட அமர்வு நீதிபதி,
அவர்கள்.திண்டுக்கல்
மாண்புமிகு.தலைமை நீதிபதி அவர்கள் முன்னிலையில்
மெட்ராஸ் உயர்
நீதிமன்றம், சென்னை
S.ராஜசேகரன்
(வயது 40).த/பெ.சிவனாண்டி
மாநில துணைத்தலைவர் Law Foundation Reg.No -26/2010
68,பிள்ளையார் கோவில் தெரு
குப்பிநாயக்கன் பட்டி,போடிநாயக்கனூர்-625513
தேனி மாவட்டம் – தகவல் தருபவர்
மாநில துணைத்தலைவர் Law Foundation Reg.No -26/2010
68,பிள்ளையார் கோவில் தெரு
குப்பிநாயக்கன் பட்டி,போடிநாயக்கனூர்-625513
தேனி மாவட்டம் – தகவல் தருபவர்
எதிர்
திரு.காவல்ஆய்வாளர்
அவர்கள்.(குற்றஎண்:711/2015)
திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம்
திண்டுக்கல் மாவட்டம் - எதிர்மனுதாரர்
திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம்
திண்டுக்கல் மாவட்டம் - எதிர்மனுதாரர்
இந்திய
அரசமைப்பு 1950 கோட்படு 19,21,22(4),226 மற்றும் குற்ற விசாரணை முறை சட்டம் 1973-பிரிவு 437,439
இன் கீழ் நடவடிக்கை
எடுக்க கோரும் மனு.......
தேனி
மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா, போடிநாயக்கனூர் அஞ்சல், குப்பிநாயக்கன்பட்டி,68,பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும்
S.ராஜசேகரன்
த/பெ. V.சிவனாண்டி, (வயது 40),
இந்து, ஆகிய நான் இந்திய சாட்சிய சட்டம் 1872
– இன் பிரிவு 70
- இன் கீழ் ஏற்புரை
செய்து, இந்திய
சாட்சிய சட்டம் 1872 – இன் பிரிவு 57(1) படி நாட்டில் அமலிலுள்ள சட்டங்களை
நீதிமுறையில் கவனத்தில் எந்த வழக்கிறகும் குந்தகமின்றி தகவலாக இம்மனு தாக்கல்
செய்வது யாதெனில்,
1.நான்
மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.இந்திய அரசமைப்பு 1950
கோட்பாடு 51அ(ஓ)-இன் கடமையாக இம் மனு
சமர்பிக்கப்படுகிறது.
2. இந்திய அரசமைப்பு 1950 – இன் கோட்பாடுகள் 29(1),350 மற்றும் தமிழ்நாடு ஆட்சி மொழி சட்டம் 1956 பிரிவு-4–இன் படி இந்நீதிமன்றத்தின் மொழி தமிழ் என்பதால், இவ்வழக்கு தமிழில் நடைபெற மாண்பமை நீதிமன்றம் உத்திரவிட தாழ்மையுடன் கோருகிறேன்.
3.ஒரு குற்றம் நடக்க இருக்கிறது என்பதை தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பும் அதற்கான சட்டபடியான வழிகளை கையாள வேண்டிய கடமையும்,அதுபற்றி தகவல் தெரிந்தவர்கள் சட்டபடி செயல்படாமல் இருப்பது இந்திய தண்டனைச் சட்டம் 1860-இன் பிரிவு 2-இன் கீழ் குற்றமாகும் அதன் அடிப்படையில் இப்புகார் மனு சமர்பிக்கப்படுகிறது.
4. இந்திய அரசமைப்பு 1950 - இன் கோட்பாடு 375-இன் படி “இந்திய அரசமைப்பில்
விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளுக்கு கட்டுபட்டு உரிமையியல் குற்றவியல் மற்றும்
வருவாய்த்துறை ஆகிவற்றிற்கான அதிகாரவரம்புள்ள நீதிமன்றங்களும் மற்றும் நீதித்துறை
செயல்துறை நிர்வாகத்துறை அலுவலர்களும் அவர்களுடைய அலுவல்களைத் தொடர்ந்து நடத்தி
வரவேண்டும்” என்பதை
மாண்பமை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்
5.உயர்நீதிமன்றம்
தனது மேல்முறையீட்டு வரம்புக்குள் அடங்கும் நீதிமன்றங்கள் அனைத்தையும் மேலாண்மை
செய்யவேண்டும் என்று இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 227(1)
மற்றும் குற்றவிசாரணை
முறை சட்டம் 1973 பிரிவு 483 கீழ் மாவட்ட அமர்வு நீதிமன்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து
வரவேண்டியது உயர் நீதிமன்றத்தின் கடமை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை
தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
6.உச்சநீதிமன்றம்
தனது தீர்ப்பில்“ ‘ நீதிபதிகள் இடமாற்ற வழக்கின், ஏழு நீதிபதிகள் குழுவின் தீர்ப்பு, வறுமை அல்லது வேறு ஏதாவது
காரணத்தால் நீதி மன்றத்தை அணுக முடியாதவரது குறையை களையைக்கோரி, நேரடியான பாதிப்புக்கு ஆளாகாதாவர்
நீதிமன்றத்தை அணுக முடியுமா என்ற விவாதத்தை தீர்த்துவைத்தது. இத்தகையோரது அடிப்படை
சட்டபூர்வமான அல்லது அரசமைப்பு சட்ட உரிமைகளை நிலை நாட்டும் பொருட்டு போதுமான
ஈடுபாடு கொண்ட எந்த ஒரு பொது மனிதனும் ஒரு அஞ்சல் அட்டையின் மூலமாக கூட
நீதிமன்றத்தை நாடலாம் ‘(எஸ்.பி.குப்தா
மற்றும் ஏனையோர் எதிர் குடியரசுத்தலைவர் மற்றும் ஏனையோர்,AIR
1982 SC 149) என்று
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் இம் மனு பணிவுடன்
சமர்பிக்கப்படுகிறது.
7.திண்டுக்கல்
மாவட்டம் சாலைபுதூரில் வசிக்கும் மதுரைவீரன் (வயது78/2015) அவர்கள் மூத்தகுடிமக்கள் பிரிவை
சேர்ந்தவர் மற்றும் முன்னால் இராணுவ வீரர் பொது நல சமூக நல இந்திய குடிமகன் ஆவார்
. கடந்த கோர்ட்டில் வழக்கறிஞர்கள் போரட்டம் நடத்தும் போது பொதுமக்களுக்கு இடஞ்சல்
ஏற்படுத்துவதாக கூறி கோர்ட் நடைபெற மற்றும் சட்டவிரோத போரட்டம் குறித்து தனிநபர்
வழக்கு வழக்கறிஞர்களுக்கு எதிராக திண்டுக்கல் நீதித்துறை நடுவர் II நீதிமன்றத்தில் நடத்தி வருகிறார்.
இதனால் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு நடத்தும்போது வழக்கறிஞர்கள் அனைவரும்
மதுரைவீரன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி அவர் மீது வழக்கறிஞர் சங்க செயலாளர்
மூர்த்தி தலைவர் ஜீவரத்தினம் ஆகியோர் பொய்யான தகவல் அளித்து திண்டுக்கல் மாவட்டம்
வடக்கு காவல்நிலையத்தில் கொலைமுயற்சி வழக்கு இந்திய தண்டனை சட்டம்1860
பிரிவு 307இன் கீழ் சட்டவிரோதமாக (குற்ற
எண்-711/2015) கைது செய்து அவர் மற்றும் அவருடன் இருந்த் திருப்பதிராஜ் ஆகியோர்
தற்போது இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 22 மற்றும் குற்ற விசாரணை முறை சட்டம் 57 மற்றும் 167(2)க்கு விரோதமாக நீதிமன்ற காவலில்
வைக்கப்பட்டுள்ளார் என்பதையும் மாண்பமை நீதிமன்றத்தின் கவனத்திற்கு
கொண்டுவருகிறேன்
8.மேற்படி
மதுரை வீரனுக்கும் மேற்படி வழக்கிற்கும் சம்பந்தமில்லை காவல் துறையால் பொய்வழக்கு
போடப்பட்டுள்ளது. புகார்தாரர் தரப்பில் யாரும் காயம் ஏற்படாத போதும் புகார்தாரர்
மற்றும் வழக்கறிஞர் அனைவரும் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி காயம் ஏற்பட்டு
மருத்துவ மணையில் சேர்க்கப்பட்டு தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்
என்பதையும் மாண்பமை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
9.குற்றவாளியை
தன்முன் ஆஜர்படுத்தும்போது நீதித்துறை நடுவர் அவரை காவலில்(Remand)
வைக்க போதுமான
காரணங்கள் உள்ளது என திருப்தி அளிக்கும் வகையில் ஆவணங்கள் இருந்தால் மட்டுமே
குற்றம்சாட்டப்பட்டவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பவேண்டும். நீதித்துறை நடுவர்
இயந்திர ரீதியாக ஒருவரை காவலுக்கு அனுப்பக்கூடாது என்று Manubhai
Ratilal Patel VS State of Gujarat 2013 SCC Cri 475 வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது
என்பதையும் இத்தீர்ப்புக்கு எதிராக நீதித்துறை நடுவர் அவர்கள் சட்டவிரோதமாக
நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளார் என்பதையும் மாண்பமை நீதிமன்றத்தின்
கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
10.குற்ற விசாரணை முறைச்சட்டம் 1973 பிரிவு 41,41A-இன் படி ஏழு ஆண்டுகள் வரை தண்டணை
விதிக்கதக்க குற்றங்களில் குற்றா சாட்டப்பட்டவர்களை கைது செய்தாகவேண்டும் என்று (Not
Mondatory) கட்டாயம்
இல்லை KM.HemaMishra VS State Of UP and Others 2014(Cri)L.J.1107(SC) என்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது
என்பதையும் இத்தீர்ப்புக்கு எதிராக காவல் ஆய்வாளர் அவர்கள் சட்டவிரோதமாக நீதிமன்ற
காவலுக்கு அனுப்பியுள்ளார் என்பதையும் மாண்பமை நீதிமன்றத்தின் கவனத்திற்கு
கொண்டுவருகிறேன்.
11.எதிரிக்கு கொலை முயற்சிக் குற்றம் சாட்டப்பட்டது.ஆனால் எதிரிக்கு
காயம் எதனையும் ஏற்படுத்தவில்லை. இந்த குற்ற சாட்டில் நீதித்துறை நடுவர் (Megistrate)
எதிரியை பிணையில்
(ஜாமினில்) விடுவிக்கலாம் 2005 CrLJ Page 378 என்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது என்பதையும் அத்தீர்ப்பின்
அடிப்படையில் இந்த வழக்கிலும் யாரும் காயம் அடையவில்லை என்றும் பொய் குற்றசாட்டில்
வழக்கு பதியப்பட்டுள்ளது எனவே இந்த பிணைமனு மீது மாண்பமை நீதிமன்றம் தயவுகூர்ந்து
பரிசீலிக்கவேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
12.குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் பிணையாளர்கள் (Sureties)
இல்லாமலே பிணையில்
விடுவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. 1978 SCC (Cri)485, 1978 4
SCC 47 என்ற
வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது என்பதையும் அத்தீர்ப்பின் அடிப்படையில் இந்த
பிணைமனு பரிசீலிக்கவேண்டுமென மாண்பமை நீதிமன்றத்தில் தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.
13.இந்திய அரசமைப்பு சட்டத்தின் கோட்பாடு 21-இன்படி ஒரு நபரின் அந்தஸ்து
என்பது அவரது மதிப்புமிக்க சொத்து மற்றும் அவரது அடிப்படை உரிமையாகும். இ
ந்னிலையில் பிணை மனு நிலுவையில் இருக்கும்போது ,பிணை வழங்குவதில் உள்ளடங்கிய
அதிகாரமாக “ இடைக்காலப்பிணை
“ வழங்குவதற்கான
விருப்புரிமை அதிகாரம் உள்ளது.மனுதாரர் இடைக்கால பிணைமனு சமர்பித்திருந்தால்
அன்றைய தினமே இடக்கால பிணை வழங்கப்பட வேண்டும் சுக்வந்த் சிங் எதிர் பஞ்சாப் அரசு
(2009) 7 SCC 559, 2009 3SCC (Cri) 487 Date 18-05-2009 வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது
என்பதையும் மாண்பமை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
14.இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 21 மற்றும் குற்ற விசாரணை முறை
சட்டம் 57 –இன் படி புலன் விசாரணை 24 மணிக்குள் முடியாத போது தான்
காவல் புலனாய்வு அலுவலர் குற்ற விசாரணை முறை சட்டம் 1973
பிரிவு 167(2)-இன் படி நீதிமன்ற காவலுக்கு
அனுமதி கோரவேண்டும். ஆனால் இந்த குற்ற எண்ணில் (711/2015) குற்றம் சாட்டப்பட்டவர் 17-06-2015
அன்று மாலை 4.00மணியளவில் கைது செய்யப்பட்டு
அன்றையதினமே மாலை 7.00 மணிக்கு நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளார். குற்றவிசாரணை
முறைசட்டம் 1973 –இன் பிரிவு 57இன் படி எதிர்மனுதாரர் ஆன காவல்
ஆயவளருக்கு புலானாய்வு செய்ய 20 மணி நேரம் இருந்தும் சட்டவிரோதமாக
இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 21 க்கு எதிராக மதுரை வீரன் அவர்களை ஜெயிலில் அடைக்கவேண்டும் என்ற
காழ்ப்புணர்ச்சியில் 75 வயது மூத்த குடிமகன் மற்றும் முன்னால் இராணுவீரர் என்ற ஈவு
இரக்கமில்லாமல் அவருக்கு ஏற்பட்ட காயங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் நீதித்துறை
நடுவர் அவர்களிடம் அடைப்புகாவல் கோரியிருக்கிறார் என்பதையும் மாண்பமை
நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
15,IN THE SUPREME COURT OF INDIA CRIMINAL APPEAL No 1277 of 2013
Special leave petition (Crl)No.9127 0f 2013 Arnes Kumar VS State of Bihar வழக்கில் “விசாரணை கைதிகள் தேவையில்லாமல் குற்றவிசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 41 –இன்படி கைது செய்யப்பட்டு அப்பாவிகள் விசாரணை கைதிகளாக அவர்களுடைய அடிப்படை உரிமை சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமை பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல் விசாரணை அலுவலர் குற்ற் விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 57 மற்றும் இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 22(2)இன் படி புலனாய்வு 24 மணி நேரத்திற்குள் முடியாதபோது காவல் நீட்டிப்புக்கு உரிய ஆவணங்கள் மற்றும் காவல் வைப்புக்கான காரணங்கள் அனைத்தும் நீதித்துறை நடுவர் அவர்களின் திருப்தியான மன நிலையில் தான் காவல் வைப்புக்கு உத்திரவிடவேண்டியது அவசியம் எனவும் தவறும் பட்சத்தில் காவல் ஆய்வாளர் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தில் தண்டனையும் வழங்கப்படும் என்றும், உரிய காரணங்கள் இல்லாமல் இயந்திரதனமாக நீதிமன்றக்காவலில் வைக்க உத்திரவிடும் நீதித்துறை நடுவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது”, என்று மாண்பமை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள்து என்பதையும் மாண்பமை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

எனவே
மாண்பமை நீதியரசர் அவர்கள் இத்தகவல் மனுவை பரிசீலனை செய்து,
1. மேற்படி வழக்கில் விசாரணை கைதியாக உள்ள மதுரை வீரன் மற்றும் திருப்பதிராஜ் ஆகியோர்களை மேற்கண்ட முன்னுதாரண தீர்ப்புகளின் அடிப்படையிலும், இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 14,19,21,22(4) மற்றும் குற்றவிசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 439 கீழ் சொந்த ஜாமின் வழங்கி தக்க நடவடிக்கை எடுக்குமாறும்,
2.மேற்படி வழக்கில் இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு19,21,22 குற்ற விசாரணை முறைசட்டம் 57க்கு விரோதமாகவும் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு விரோதமாக செயல்பட்ட திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பரவாசுதேவன் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து நீதியை நிலை நாட்டிட வேண்டுமாய் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒப்பம்
S,Rajasekaran
19-06-2015
PETITIONER- IN- PERSON
மேற்கண்ட
மனுவில் தெரிவித்துள்ளவை அனைத்தும் இந்திய சாட்சிய சட்டம் 1872
பிரிவு 70-இன்கீழ் சத்தியபிரமாணமாய் உண்மை
என கூறி 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 தேதி போடிநாயக்கனூரில்
கையொப்பமிடப்பட்டது.
ஒப்பம்
S,Rajasekaran
19-06-2015
PETITIONER- IN- PERSON
தக்க
நடவடிக்கை எடுக்கவும், பதிலுக்காகவும்
நகல் சமர்பிக்கப்படுகிறது:
1.குற்ற விசாரணை முறை சட்டம் 1973-இன் பிரிவு 2(7)-இன் கீழ் நடவடிக்கைகளுக்காக தபால் மூலம் சார்பு திருமிகு.மாவட்ட அமர்வு நீதிபதி,
அவர்கள்.திண்டுக்கல்
2. இந்திய அரசமைப்பு 1950
கோட்படு 32-இன் கீழ் நடவடிக்கை எடுக்க தபால்
மூலம் திருமிகு.பதிவாளர் அவர்கள் , உச்ச நீதிமன்றம், புதுடெல்லி - 110001
No comments:
Post a Comment