Monday, September 28, 2015

3198 -குற்றவியல் நடுவருக்கு, 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு, 10-2015, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal

பதிவுத் தபால் ஒப்புகை அட்டையுடன் .10.2015. 

( மாதிரி ) அறிவிப்பு எண்: 001 / 2015 /J.M / T.P.S. .

15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு. 

ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், திண்டல் பகுதியில் ரோஜா தோட்டம் என்ற பகுதியில் எண் ௦6, வீட்டில் வசிக்கும் திரு. பெ சுப்ரமணியன் த/பெ பெருமாள் வயது சுமார் 63 வருடங்கள் ஆகிய நான்;

ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், சம்பத் நகர் பகுதியில் குற்றவியல் நடுவராகப் பணியாற்றும் தங்களுக்கு அளிக்கும் 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு இதுவாகும்.


1. தாங்கள் Cr.P.C. 327 –ன் படி நீதிமன்றதை நடத்துவது இல்லைஎன்பது உறுதியாகத் தெரிகிறது. தாங்கள் சட்டப்படி அன்றி தங்கள் இச்சைப்படி செயல்பட்டு தங்களின் கடமையை வேண்டுமென்றே செய்ய மறுத்து வருகிறீர்கள். இது இ.த.ச.பிரிவு 1௦8 மற்றும் 166 ஆகியவைகளின்படி குற்றச் செயல் ஆகும்.



2. தாங்கள் Cr.P.C. 327 க்கு சட்ட விரோதமானது என்று தெரிந்தே பொது மக்களை நீதிமன்றத்தில் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி வைக்கிறீர்கள்.



3. நீதிமன்றத்திற்கு வரும் பொது மக்களை நீதிமன்றமாகப் பயன்படும் இடத்தின் உள்ளே அனுமதிக்காமல், வெளியே நிற்கும்படி செய்து பொது மக்களை மரியாதைக் குறைவாக நடத்துகிறீர்கள். இது மனித உரிமை மீறல் ஆகும்.



4. பொதுமக்களின் முன் வழக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்ற Cr.P.C. 327 சட்டத்தின் கட்டளையை மீறிச் செயல்பட்டு மக்களுக்கு தீங்கு செய்து வருகிறீகள்.



5. இவ்வறிப்பு கிடைத்த 15 தினங்களுக்குள் தங்களின் சட்டப்படியான நடவடிக்கையை மற்றும் உரிய நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்.



6. 15 தினங்களுக்குள் தங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் அல்லது இவ்வறிவிப்புக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றாலும் இவ்வறிப்பில் கண்டுள்ள சங்கதிகளை தாங்கள் சாட்சிய சட்டப்படி அப்படியே ஒப்புக் கொண்டதாகவே ஆகும்.



7. இதுவே தங்களுக்கு எதிரான தகுமுறை சாட்சியமாகவும் தகுமுறை சான்று ஆவணமாகவும் ஆகிவிடும் என்பதை இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறேன்.



8. மேலும், இதுவே தங்களுக்கு எதிராக உயர் அதிகார அமைப்புகளிடம் முறையீடு செய்யவும் மற்றும் வழக்கு தொடுக்கவும் தகுமுறை சான்று ஆவணமாகவும் ஆகிவிடும் என்பதை இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறேன்.



9. மேலும், இதுவே தங்களுக்கு எதிராக தகுதி வினவும் நீதிப் பேரணை தாக்கல் செய்யவும் தகுமுறை சாட்சியமாகவும் தகுமுறை சான்று ஆவணமாகவும் ஆகிவிடும் என்பதை இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறேன்.


இப்படிக்கு,
சட்டப்படியான அறிவிப்பு அளிப்பவர்,
( திரு. பெ சுப்ரமணியன் )

1 comment:

  1. அட, இப்படி எல்லாம் அனுப்பலாமா?ன்னு ஆச்சர்யப்பட வைக்கும் மனு! நன்றி ஐயா!

    ReplyDelete