Friday, October 02, 2015

3245 - மாதிரி முறையீடு, பெறுதல்- திரு. மாவட்ட ஆட்சியர், 05.10.2015, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal

மாதிரி முறையீடு. ( நீங்களும் அனுப்பலாம் )
.
பதிவுத் தபால் ஒப்புகை அட்டையுடன் .
.
கடித எண் : 002/ 2015/ T.S.P. ........................................ தேதி : 05.10.2015.
. இடம் : ஈரோடு
. Rs. 2/- C.F.S. இணைக்க.
அனுப்புதல் :
திரு. பெ. சுப்ரமணியன்
த/பெ பெருமாள்
கௌரவத் தலைவர் LAW FOUNDATION Regd.No: 26/201௦.
6. ரோஜா கார்டன்ம் திண்டல், ஈரோடு -638012.
.
பெறுதல் :
திரு. மாவட்ட ஆட்சியர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெருந்துறை ரோடு,
ஈரோடு.-638009.
.
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.
.
பொருள் :
1. இந்திய அரசியல் சாசனத்தை செயல்படுத்தக் கோருதல் தொடர்ப்பாக..
.
2. அரசு அலுவலர் குற்றம் ஒன்றைச் செய்து உள்ளார் என்று தங்களிடம் பொது மக்கள் அளிக்கும் முறையீட்டை தாங்கள் விசாரிக்காமல் குற்றம் சாட்டப்பட்ட அதே அரசு அலுவலர் விசாரிக்கும்படி செய்வது குறித்த முறையீடு.
.
பார்வை:
1. அரசியல் சாசனக் கோட்பாடு 14 மற்றும் 20 .
.
1. திரு. பெ. சுப்ரமணியன் த/பெ பெருமாள் ஆகிய நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் LAW FOUNDATION, பதிவு எண்: 26/2010 கொண்ட அமைப்பின் கௌரவத் தலைவர் ஆவேன்.
.
2. இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 51-A (1௦) -ன் படித் துறைகள் அனைத்தையும் சீர்திருத்தம் செய்வதைக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
3. தாங்கள் மாவட்ட ஆட்சியர் மட்டும் அல்ல. தாங்கள், ஒரு செயல் துறை நடுவர் ஆவீர்கள்.
.
4. அப்படி இருக்க, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் குற்றம் ஒன்றைச் செய்து உள்ளார் என்று தங்களிடம் பொது மக்கள் அளிக்கும் முறையீட்டை தாங்கள் விசாரிக்காமல் குற்றம் சாட்டப்பட்ட அதே காவல் கண்காணிப்பாளருக்கு அளிப்பதாகத் தெரிகிறது.
.
3. மேலும் குறைகளும் களையப் படுவது இல்லை. பொது மக்கள் அலைக்கழிக்கப் படுகிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவரே தனது குற்றம் குறித்து விசாரித்து தானே தனது முடிவை அளிப்பது முறையல்ல.
4.குற்றம் சாட்டப்பட்டவரே தனது குற்றம் குறித்து விசாரித்து தானே தனது முடிவை அளிப்பது ஏற்கத் தக்கதாக இல்லை.
5.குற்றம் சாட்டப்பட்டவரே தனது குற்றம் குறித்து விசாரித்து தானே தனது முடிவை அளிப்பதுசர்வாதிகாரம் ஆகும்.
.
6.குற்றம் சாட்டப்பட்டவரே தனது குற்றம் குறித்து விசாரித்து தானே தனது முடிவை அளிப்பது இயற்கை நீதிக்கு முரணானது ஆகும்.
.
7. குற்றம் சாட்டப்பட்டவரே தனது குற்றம் குறித்து விசாரித்து தானே தனது முடிவை அளிப்பது உலக நீதிக்கு முரணானது ஆகும்.
.
8. இந்திய அரசியல் சாசனம் யாருக்கும் எதேச்சதிகாரத்தை அளிக்கவில்லை. அப்படியிருக்க, குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றம் குறித்து விசாரித்து தானே தனது முடிவை அளிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல் ஆகும்.
.
9.கேட்கப்படுவதற்கான உரிமை குடி மக்களுக்கு உள்ளது. ஆனால், .................................... மாவட்ட ஆட்சியரான தங்கள் குடிமக்களின் முறையீட்டைக் கேட்க மறுப்பதாக தங்களின் செயல்பாடுகள் உள்ளது.
.
10.இந்தியத் தண்டனைச் சட்டத்தில் குற்றம் என்று வரையறை செய்யப்பட்ட குற்றங்களைப் புரிந்துள்ள எந்த ஒரு நபரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று அரசியல் சாசனம் கோட்பாடு 2௦ தெளிவாகச் சொல்கிறது.
.
11..சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அரசியல் சாசனம் கோட்பாடு 14 தெளிவாகச் சொல்கிறது.
.
12. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சர்வதேசச் சட்டமாம் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டமும் சொல்கிறது. சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டியது நமது கடமை ஆகும்.
.
13. தாங்கள் இம் முறையீட்டை ஏற்றுக் கொண்டு உடனே உரிய நடவடிக்கை எடுத்து நீதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
.
நன்றி.
இப்படிக்கு,
முறையீட்டாளர்
திரு. பெ. சுப்ரமணியன்
த/பெ பெருமாள்
கௌரவத் தலைவர் LAW FOUNDATION Regd.No: 26/2010.

No comments:

Post a Comment