Monday, October 12, 2015

3420 - உரிமையாளரின் நிலத்தில் இருந்து மின்சார வாரிய ட்ரான்ஸ்பார்மரை அகற்ற சொல்லி சென்னை உயர்நீதி மன்றம் நீதிப்பேராணை எண். 9811 / 2013, 10-06-2014, நன்றி ஐயா. Leenus Leo Edwards அவர்கள்

உரிமையாளரின் நிலத்தில் இருந்து மின்சார வாரிய ட்ரான்ஸ்பார்மரை அகற்ற சொல்லி சென்னை உயர்நீதி மன்றம் நீதிப்பேராணையில் பிறப்பித்த ஆணை.
.
மனுதாரார் வாங்கிய நிலத்தில் உள்ள மின்சார ட்ரான்ஸ்பார்மரை மனுதாரார் தரப்பில் இருந்து செலவினங்கள் இன்றி அகற்ற நீதிப்பேரானை தாக்கல் செய்கின்றார். மனுதாரார் நிலத்தை 2010ம் வருடம் வாங்கியவுடன் மேற்படி ட்ரான்ஸ்பார்மரை அகற்ற கோரி மின்சார வாரியத்திற்கு மனு ஒன்றை சமர்பிக்கின்றார் அந்த மனுவில் அகற்றுவதற்காக செலவினங்களை ஏற்றுக்கொள்வதாக கூறுகின்றார். இதன் அடிப்படையில் மின்சார வாரியம் ரூ.1,73,350 கட்ட சொல்லுகின்றது. அதை எதிர்த்து மேற்கண்ட நீதிப்பேரானை தாக்கல் செய்கின்றார். மனுதாரார் வாங்கிய நிலத்தின் முன்னாள் உரிமையாளரிடம் இருந்து மின்சார வாரியம் மேற்படி ட்ரான்ஸ்பார்மரை நிறுவ அனுமதி பெறவில்லை மற்றும் அவர்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கியிருக்கவில்லை. இந்த நிலையில் மின்சார வாரியம் கீழ்கண்ட விதிகளின் படி ட்ரான்ஸ்பார்மரை மாற்ற விரும்புவர்தான் அதற்காக கட்டணத்தை செலுத்த கடமைப்பட்டவர் என்ற வாதத்தை முன் வைக்கின்றது.
.
Clause 5(6) of the Tamil Nadu Electricity Supply Code, 2004, reads as follows:
5. Miscellaneous Charges.- (1)........ (5)
(6) Service/line, Structure and equipments shifting charge.- (1) The cost of shifting service/line structure and equipments shall be borne by the consumer. The consumer shall pay the estimated cost of shifting in advance in full. The shifting work will be taken up only after the payment is made. CTC Library Desktop Copyright 2015
.
29. Service Lines.- (1) ..... (5)
(6)The consumer shall permit the Licensee to install all requisite equipments such as Transformers, switchgears, meters, etc., and to lay necessary cables or overhead lines and to provide connections thereto on the consumer’s premises and shall also permit the Licensee to extend supply to other consumers through the cables, lines and equipments installed in the consumer’s premises, provided that supply to the consumer in the opinion of the Engineer is not thereby unduly affected.
.
மாண்புமிகு நீதியரசர் வைத்தியநாதன் அவர்கள் கீழ்கண்டவாறு நீதிப்பேராணை எண்: 9811 தேதி 10.06.2014-ல் ஆணை வழங்கியுள்ளார்.
.
1. மேற்படி இரண்டு விதிகளை வைத்து பார்க்கும்போது, அந்த விதிகள் மின்சார நுகர்வோருக்கு மட்டுமே பொருந்தும். ஒரு நிலத்தின் உரிமையாளருக்கு பொருந்தாது. ஏனெனில் மனுதாரார் ‘நுகர்வோர்’ எனும் பதத்தில் வரமாட்டார்.
.
2. மனுதாரார் ட்ரான்பார்மரை அகற்றுவதற்கான செலவினங்களை ஏற்றுக்கொள்வதாக மனுவில் குறிப்பிட்டிருந்தாலும், இந்த அளவிற்கான செலவினங்களை நிச்சயமாக எதிர்பார்த்திருக்கமாட்டார்.
.
3. மின்சார வாரியம் ஒருவர் நிலத்தில் ட்ரான்பார்மரை வைக்க வேண்டும் என்றால் அந்த நிலத்து உரிமையாளருக்கு இழப்பீடு கொடுத்திருக்க வேண்டும். அதைவிட்டு, பல வருடங்கள் ட்ரான்ஸ்பார்மார் அந்த நிலத்தில் வைத்திருக்க அனுமதித்தார் என்பதை உட்கிடையான சம்மதமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கீழ் கண்ட தீர்ப்பை சுட்டிகாட்டுகின்றார் The Superintending Engineer, Tamil Nadu Electricity Board, Maharaja Nagar, Tirunelveli and another v. M. Sengu Vijay and another 2011 (3) MLJ 

http://www.rtigovindaraj.com/2015/10/3419-superintending-engineer-tamil-nadu.html
.
4. ஆகவே, மின்சார வாரியம் அந்த ட்ரான்ஸ்பார்மரை 3 மாத காலத்திற்குள் மனுதாரருக்கு எந்தவித கட்டணமின்றி அவரது நிலத்தில் இருந்து அகற்றவேண்டும்.

No comments:

Post a Comment