முதுநிலை பொறியியல் படித்து கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுபவர் மீது பொய்யான கஞ்சா வழக்குப் பதிவு செய்து சட்டவிரோத காவலில் அடைத்து வைத்து காலம் கடந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல் ஆய்வாளரை கண்டித்து முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்து இனிவரும் காலங்களில் தமிழக காவல்துறை பொய்வழக்குப் பதிவு செய்யக்கூடாது என்று எச்சரித்து தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டிருக்கிறது.
மேலும் இந்த தீர்ப்பின் நகலை அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பி பொய் வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்குமாறு தமிழக காவல்துறை தலைவருக்கு கட்டளையும் பிறப்பித்தது.
அரசு அலுவலர் அரசியல்வாதிகளுக்க அனுகூலமாக செயல்படவில்லை எனில் பொய் புகார் கொடுக்கப்படுகிறது
ReplyDelete