1. விசாரணை அதிகாரிகள் முன்னதாக ஒருவருக்கு சார்பாகவோ / எதிராகவோ உண்மை நிகழ்ச்சிகளைப் பற்றிக் கருத்து கொள்ளலாகாது என்று எச்சரிக்கப்படுகின்றனர். உண்மையைக் கண்டுபிடிப்பதுதான் விசாரணை அதிகாரியின் குறிக்கோளாகும். இதனை நிறைவேற்றும் பொருட்டு, அவர், விசாரணை முழுவதிலும் நடுநிலை பிறழா மனத்துடன் இருக்க வேண்டும் என்பது அவசியம் ஆகும்.
"566(2) முறையீடுகளும் எதிர்முறையீடுகளும் உள்ள வழக்குகளில் குற்றவறிக்கைகள் ;
ஒரே நிகழ்ச்சியிலிருந்து வெளிப்படையாக எழும் முறையீடு & எதிர் முறையீட்டில் புலனாய்வு அலுவலர், அவ்-இரண்டினையும் விசாரிப்பு செய்து, பின்வரும் இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை மேற்கொள்ள வேண்டும். அதாவது (1) எதிரிகள் வலுத்தாக்குநர்களாக உள்ள வழக்குகளில் குற்றவறிக்கை முன்னிடல் / (2) இரண்டு வழக்குகளும் உண்மை அற்றவை என அவர் கண்டால், இரண்டையும் குறித்தனுப்புகை செய்துவிடல், புலானாய்வு அலுவலர் ஒரு முறையீட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் பொழுது, நீதிமன்றத்தில், எதிர்முறையீட்டைச் சான்று ஆவணமாக குறியிடுமாறு செய்வதும், எதிர் தரப்பில் காயமுற்ற ஆட்களின் மருத்துவச் சான்றிதழ்களை மெய்ப்பிப்பதுவும் அவரது கடமையாகும். நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் வகையில், அதன் பின்னர் ஒரு திட்டவட்டமான வழக்கு ஒன்றை அவர் முன்னிட வேண்டும். அத்தகைய வழக்குகளில், புலனாய்வு அலுவலர் ஒரு முறையீட்டை மட்டுமே முழுமையாக ஏற்றுக் கொண்டு, அதனை ஆதரித்து, எதிர் தரப்பினருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு விளக்கமேதும் கொடுக்காத சாட்சிகளை மட்டுமே விசாரிப்பது கூடாது. இத்தகைய வழக்குகளில் உண்மையானது பெரும்பாலும் எந்தவொரு முறையீட்டிலும் முழுமையாக இருக்காது. நீதிமன்றம் உண்மையைக் கண்டு கொண்டு, நியாயமான முடிவினை எடுக்க, நீதிமன்றத்தை இயல்விக்கும் வண்ணம், அதன் முன்னர், எல்ல விவரங்களும் முன்னிடப்பட வேண்டியது, முற்றிலும் அவசியம் ஆகும்.
(3) இரண்டு வழக்குகளில் ஒன்றில் குற்றச் சார்த்தை முன்னிடுதல் / இரண்டையும் கைவிட்டுவிடல் எனும் ஏதாவது ஒரு வழியை தேர்வு செய்வது கடினம் என்று புலனாய்வு அலுவலர் முடிவு செய்தால், அவர் மாவட்டக் குற்றத்துறை அரசு வழக்குரைஞரது கருத்தைக் கேட்டு, அதற்கு இணங்கச் செயல்பட வேண்டும். சட்டம் சார்ந்த பிழை உள்ளது எனக் குறித்தனுப்புகை செய்யப்பட்ட வழக்குகளைப் பொறுத்து, இறுதி அறிக்கை அனுப்பபபட வேண்டும். வழக்கு எவ்வாறு முடிவு செய்யப்பட்டது என்பதை படிவம் எண். 90-ன் அறிவிப்பு மூலமாக, நிலவரத்திற்கு ஏற்ப, முறையீட்டாளருக்கு / எதிர் முறையீட்டாளருக்கு அறிவிக்க வேண்டும். காவல்துறை செய்த முடிவினால், அவர் குறையுற்றால், ஒரு குறிப்பிட்ட நடுவர் முன்பு தீர்வழி நாடிடுமாறு தெரிவிக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment