Monday, January 25, 2016

4784 - PSO 664 - அரசு பணியாளர்கள் மீது வழக்குத் தொடர்பு :

Prosecution to Government Servants:

1. எந்த அரசு பணியாளர் எவரேனும் தனது பதவிக்கு உரிய அலுவல் வழிக் கடமைகளை நிறைவேற்றுகையில் செய்ததாகச் சொல்லப்படும் குற்றங்களுக்காக, அவரை, குற்றஞ்சாட்டுவதற்கு முன்னதாக, காவலர் தலைநகர் அல்லாதா புறப்பகுதியில், ஆட்சியரிடமிருந்தும், சென்னை மாநகரில், அரசுப் பணியாளர்களுக்கு உரிய துறையின் தலைவரிடமிருந்தும் முன் சம்மதத்தைப் பெற வேண்டும்.

2. ஆட்சியர்களும், சென்னை மாநகரில் துறைத் தலைவர்களும் காவலரிமிருந்து, அத்தகைய தேவைக் கோரிக்கையைப் பெற்ற பத்து நாட்களுக்குள்ளாக, காவலருக்கு பதில்களை அனுப்பிவிட வேண்டும். காவலருக்கும் ஆட்சியருக்கும் / சென்னை மாநகரத்தில் ஒரு துறைத் தலைவருக்கும் இடையே கருத்து வேற்றுமை இருந்தால், அது விசயத்தில், காவல் அரசாங்கத்தாரின் உத்தரவைப் பெற வேண்டும்.

3. இவ்-ஆணை ஆனது, சென்னை மாவட்டக் காவல் சட்டம் 1859 (1859-ன் XXIV)-ன் கீழ், குற்றஞ்சாட்டப்பட்டக் காவல் சார்நிலைப் பணியாளர் நேர்வுகளிலும், மாநில அரசினரின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இல்லாத, அரசாங்கப் பணியாளரைக் குற்றச்சாட்டுவதற்கு பொருந்தாது.

குறிப்பு : அறிக்கை அனுப்பபட வேண்டிய ஆட்சியர், குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட வேண்டிய, மாவட்டத்தின் ஆட்சியராகும்.

No comments:

Post a Comment