Thursday, February 25, 2016

5023 - பதிவு / விரைவு அஞ்சலை, திருப்பி அனுப்பிய, அரசு / பொது ஊழியர் மீது, மாநில மனித ஆணையத்தில் புகார் மனு மாதிரி.

விரைவு அஞ்சல்

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய
மாநில மனித உரிமை ஆணையம், சென்னை
அவர்கள் முன்பாக

மனு எண்.       /  2015

வழக்கு எண்.       /  2015

 
             
மனுதாரர்கள்


1    திரு. ......................., வயது ....,                  
/ பெ. ............................................,
.... / ...., ............................................,, ............ அஞ்சல்,
............ ரோடு, ............ 000 000.

2    திரு. ......................., வயது ....,                  
/ பெ. ............................................,
.... / ...., ............................................,, ............ அஞ்சல்,
............ ரோடு, ............ 000 000.

எதிர்
(அரசு / பொது ஊழியர் முகவரி)


***********
மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1993-ன் சட்டப்பிரிவு 12-ன் கீழ், இழப்பீடு ரூ. ............/- கோரி, மனு தாக்கல் நாள். 00-00-0000
***********

1   மேற்கண்ட மேற்கண்ட முகவரியில் வசித்து வரும், திரு.  ................... அவர்களின் மகனாகிய, திரு. ..................., வயது ..., இம்மனுவின் மனுதாரர் எண். 1 ஆவேன்.

2   மேற்கண்ட மேற்கண்ட முகவரியில் வசித்து வரும், திரு.  ................... அவர்களின் மகனாகிய, திரு. ..................., வயது ..., இம்மனுவின் மனுதாரர் எண். 2 ஆவேன்.

3   இம்மனு ரூ. 10/-க்காண நீதிமன்ற வில்லையுடன் தாக்கல் செய்யப்படுகிறது

4   மேற்கண்ட முகவரியில், பணிபுரிந்து வரும், Thiru. Public Prosecutor Avl., அவர்கள், அரசு / பொது அலுவலர், இம்மனுவின் எதிர்மனுதாரர் ஆவர்

5   மேற்படி எதிர்மனுதாரர், இந்திய தண்டனை சட்டம் 1860”-ன் சட்டப்பிரிவு 21-ன் கீழ் பொது ஊழியர் / அரசு ஊழியர் ஆவார்.

6   மேற்படி எதிர்மனுதாரர் அவர்களுக்கு, கடந்த 00-00-0000-ம் தேதியன்று, “இந்திய சாட்சிய சட்டம் 1872”-ன் பிரிவு 101-ன் கீழ், 30 தினங்கள் கொண்ட சட்டப்படியான ஓர் அறிவிப்பு செய்திருந்தோம் (மனுதாரர் சான்று ஆவணம் எண். 1)

7   மேற்படி அறிவிப்பு, மேற்படி எதிர்மனுதாரர் அவர்களால், பெற்றுக் கொள்ளப்படாமல், கடந்த 00-00-0000-ம் தேதியன்று, அனுப்பிய எங்களுக்கு திருப்பபட்டுள்ளது. நகல் இணைக்கப்பட்டுள்ளது. அசல், மனுதாரர் வசம் பாதுகாக்கப்பட்டுள்ளது. (மனுதாரர் சான்று ஆவணம் எண். 2)

8   ஒரு அரசு / பொது ஊழியருக்கு அனுப்பும் பதிவு / விரைவு அஞ்சலை பெற்றுக் கொள்ளாமல், திருப்பி அனுப்புவது, “இந்திய தண்டனை சட்டம் 1860”-ன் பிரிவு 166-ன் கீழ் கடமை தவறிய செயல் ஆகும்.

9   மேலும், “அஞ்சல் ஊழியர், பதிவு அஞ்சல் உறையினைச் சரியான நபரிடம் தரும் பொழுது, அவர், அதை வாங்க மறுத்துவிட்டால், அவருக்கு, அந்த அஞ்சல் உறைக்குள் இருக்கும் செய்தி முழுவதும் தெரியும் என நீதிமன்றம் அனுமானிக்கலாம். இந்த அனுமானம் மறுத்தளிக்ககூடியது ஆகும்”. AIR 1981 SC 1281; 96 LW 184.

10 பதிவு தபாலை வாங்க மறுத்து, திருப்பி அனுப்பியதற்கான ஆதாரம் இருக்கும் காரணத்தினால், நகர சார் ஆய்வாளர் மீது, கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். 4638 / மறுவிசாரணை / டி / 2014, 13.05.2015

11 தபால்களைப் பெறும் பொறுப்பில் யார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்? யார் திருப்பி அனுப்பியது? ஒழுங்கு நட்வடிக்கை எடுத்து விவரம் தெரிவிக்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். 57210 / எப் / 2013, 22-01-2015


12 இதன் அடிப்படையில், மேற்படி எதிர்மனுதாரரின் இத்தகைய கடமை தவறிய செயல்பாட்டினாலும், மேற்படி எதிர்மனுதாரரின் அதிகார துஷ்பிரயோகத்தினாலும், நீதிமன்றத்தில் நீதி பெறும், மனுதாரர் ஆகிய எனது உரிமையை மறித்து, தடுத்து & பறித்து உள்ளார்கள்

13 இதனால், மேற்படி எதிர்மனுதாரரின் இத்தகைய கடமை தவறிய செயல்பாட்டினாலும், மேற்படி எதிர்மனுதாரரின் அதிகார துஷ்பிரயோகத்தினாலும், மனுதாரர் ஆகிய எனக்கு மிகுந்த மன உளைச்சல், கால விரையம் & பண விரையம் ஏற்பட்டுள்ளது

14 மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய, மாநில மனித உரிமை ஆணையம், சென்னை அவர்கள், பின்னாளில் தக்கதென கருதும் / உத்தரவிடும் சூழலில், இம்மனு தொடர்பாக கூடுதல் விவரங்கள் / ஆதாரங்கள் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

15 இந்திய அரசியல் சாசனம் 1950”-ன் கோட்பாடு 21-ல்,சட்டப்படியான விசாரணை முறை அன்றி, ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் உரிமையையும் பறிக்க கூடாதுஎன சொல்லப்பட்டுள்ளது

16 உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்ததால், இழப்பீடு ரூ. 2,00,000/- & வழக்கு செலவுத் தொகை ரூ. 50,000/-யினை, மனுதாரர் ஆகிய எனக்கு செலுத்த, மேற்படி எதிர்மனுதாரர்கள் கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள் (பார்க்க : Appeal No. 1921 of 2009, SLP (C) No.10483 of 2007, Dated 26-03-2009)

17 மனித உரிமை மீறலுக்காக, ரூ. 1,00,000/-யினை, மனுதாரர் ஆகிய எனக்கு செலுத்த, மேற்படி எதிர்மனுதாரர்கள் கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள் (பார்க்க : திரு. லோகநாதன் பிரதிவாதி தாசில்தார் & நால்வர், வழக்கு எண். SHRC 4105 / 2009, நாள். 25-07-2011)

18 அக்கறையுடனும் கருத்துடனும் செயல்படாத செயல் எதுவும், நல்ல எண்ணத்துடன் செயல்பட்டது ஆகாதுநல்ல எண்ணத்துடன் செய்யப்படாத செயல் எதுவும், சட்டப்படி செய்யப்பட்டது ஆகாதுசட்டப்படி அன்றி, வேறுவிதமாக செயல்பட்டு, நீதிமன்றத்தில் நீதிபெறும், எனது உரிமையை, மேற்படி எதிர்மனுதாரர், மறுத்து, தடுத்து உள்ளார்கள், சட்ட விரோதமாக செயல்பட்டு உள்ளார்கள்

19 கடமையில் இருந்து தவறுவது, அரசு / பொது ஊழியரின் கடமையின் ஒரு பகுதி அல்லஎனவே, உயர் அதிகாரிகளின் ஒப்புதல் தேவை அற்றது (பார்க்க : இந்திய அரசியல் சாசனம் 1950”-ன் கோட்பாடு 21)

20 உச்சநீதிமன்றம், வழக்கு எண். 6237 / 1990, நாள். 05-11-1993-ல் சொல்லப்பட்டுள்ள உத்தரவின் படி, ஒரு அரசாங்க பணிக்கு யார் பொறுப்பு?” என்பதை உச்சநீதிமன்றம் சட்ட விளக்கம் அளித்துள்ளது

ஆகவே, மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய, மாநில மனித உரிமை ஆணையம், சென்னை அவர்களிடத்தில், மனுதாரர்கள் ஆகிய நான் வேண்டுவது என்னவென்றால் :

1   மேற்படி எதிர்மனுதாரர் / அரசு / பொது ஊழியர், மேற்படி முகவரியில், உண்மையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளாரா / இல்லையா என்பது பற்றி விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்க கோரியும்;

2   அவ்வாறு, மேற்படி எதிர்மனுதாரர் / அரசு / பொது ஊழியர்,  மேற்படி முகவரியில், உண்மையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார் எனில், மேற்படி விரைவு அஞ்சலை திருப்பி அனுப்பியது குறித்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்க கோரியும்;

3   அவ்வாறு, மேற்படி எதிர்மனுதாரர் / அரசு / பொது ஊழியர் மேற்படி விரைவு அஞ்சலை திருப்பி அனுப்பி, அதிகார துஷ்பிரயோகம் செய்திருப்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது உண்மை எனில், மேற்படி நபர் மீது உரிய சட்ட & துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க கோரியும்;

4   மேற்படி மனுதாரர் ஆகிய எனது, 00-00-0000-ம் தேதியிட்ட அறிவிப்பிற்கு உரிய விளக்கம் பெற்றுத் தரக் கோரியும்;

5   மனுதாரர் ஆகிய எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், கால விரையம் & பண விரையத்திற்கு, ரூ. ........./- (ரூபாய் .............. மட்டும்) இழப்பீடு பெற்றுத் தரக் கோரியும்;

6   இவ்-வழக்கு உரிய செலவுத் தொகை பெற்றுத் தரக் கோரியும்;

7   இம்மேதகு சமூகம் அவர்கள் தேவையான உத்திரவுகளையும் மற்றும் பிற உத்திரவுகளையும் பிறப்பித்து நீதி வழங்கும்படி

          பணிந்து வேண்டுகிறேன் / பிரார்த்திக்கிறேன்.


இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
இடம் :   

நாள் :    00-00-0000                                      
...................
***********
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
இடம் :   

நாள் :    00-00-0000                                      
...................
***********
உறுதிச் சான்று ஆவணம் :

மேற்கண்ட முகவரியில் வசிக்கும், திரு. .................. அவர்களின் மகன், திரு. ..............., வயது .., ஆகிய நான், இம்மனுவில் கண்டுள்ள சங்கதிகள் அனைத்தும், என் அறிவுக்கு எட்டியவரையில் உண்மை என்றும், எந்தவொரு மூலப் பொருளையும் மறைக்கவில்லை என்றும் உறுதி கூறுகிறேன்.
 இந்திய சாட்சிய சட்டம் – 1872”-ன் சட்டப்பிரிவு 70-ன் படி, ............-ல் இன்று கையெழுத்துச் செய்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
இடம் :   

நாள் :    00-00-0000                                      
...................
***********
மேற்கண்ட முகவரியில் வசிக்கும், திரு. .................. அவர்களின் மகன், திரு. ..............., வயது .., ஆகிய நான், இம்மனுவில் கண்டுள்ள சங்கதிகள் அனைத்தும், என் அறிவுக்கு எட்டியவரையில் உண்மை என்றும், எந்தவொரு மூலப் பொருளையும் மறைக்கவில்லை என்றும் உறுதி கூறுகிறேன்.
 இந்திய சாட்சிய சட்டம் – 1872”-ன் சட்டப்பிரிவு 70-ன் படி, ............-ல் இன்று கையெழுத்துச் செய்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
இடம் :   

நாள் :    00-00-0000                                      
...................

***********
மனுதாரர்கள் தரப்பு சான்று ஆவணங்களின் பட்டியல் :

00-00-0000      30 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு.
00-00-0000     திருப்பப்பட்ட அஞ்சல் உறையின் முன் & பின்புற கடித உறையின் நகல்கள்.

***********

குற்ற விசாரணை முறை சட்டம் – 1973”-ன் பிரிவு 2 (7)-ன் கீழ், இம்மனுவின் நகல் ஒன்று, கீழ் கீழ்க்கண்ட முகவரிக்கு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது : (இணைப்புகள் எதுவும் இணைக்கப்படவில்லை)

1
2
3

***********

No comments:

Post a Comment